உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலை ஸ்டாலினுக்கு ஏற்படும்: தம்பிதுரை

கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலை ஸ்டாலினுக்கு ஏற்படும்: தம்பிதுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர் : “டில்லியில் ஊழலுக்காக சிறைபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலை முதல்வர் ஸ்டாலினுக்கும் வரும்,” என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை கூறினார்.

ஓசூரில், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் இருந்து தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும். அதற்காக, கடந்த 1998ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ன முடிவு எடுத்தாரோ, அதே முடிவைத்தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் இன்று எடுத்துள்ளார்.தமிழக மறுமலர்ச்சிக்காக நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் மட்டுமே முடியும். அந்த வகையில், தமிழகத்துக்கான பொருத்தமான கூட்டணியாக அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது.கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை, நாங்கள் தீர்த்து கொள்வோம். தி.மு.க.,வின் குடும்ப அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். அதை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி செய்யும்.டாஸ்மாக்கில், 39,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.டாஸ்மாக் ஊழல் பிரச்னையில், முதல்வர் வரை ஊழல் நீண்டிருப்பதாக சொல்லப்படுவதால், அமலாக்கத்துறை முறையாக நடவடிக்கை எடுத்தால், ஸ்டாலினும் ஜெயிலுக்குப் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது.டில்லியில், ஊழலுக்காக சிறைபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதேநிலை முதல்வர் ஸ்டாலினுக்கும் வரும்.இவ்வாறு தம்பிதுரை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பல்லவி
ஏப் 16, 2025 04:26

அம்மா மனதை புண்படுத்தி விட்டார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வாக்கு பலிக்கும் .


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 15, 2025 12:53

கண்டிப்பாக இது எவ்வளவு விரைவில் ஏற்படுகிறதோ அவ்வளவு நாட்டிற்கு நல்லது. அயோக்கியர்கள் அழிந்து ஒழியட்டும்.


pmsamy
ஏப் 15, 2025 07:39

அதிமுகவே அழிஞ்சு போச்சு இதுல திமுக பத்தி பேசுற அருகதையே இல்ல உனக்கு


P. SRINIVASAN
ஏப் 15, 2025 07:15

பிஜேபியின் கைக்கூலியாக மாறிய அண்ணாதிமுகவினர் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். பிஜேபி உங்களை நெருங்க தொடங்கி விட்டார்கள் அதிலிருந்து மீட்டுவர முயற்சியெடுங்கள்


Sampath Kumar
ஏப் 15, 2025 07:12

அய்யா தும்பி துறை ஈ ஒரு பஞ்சொந்தி பய உன் வண்டவாளம் எல்லாம் தெரியாமல் இல்லை வெறும் வெத்து வேட்டு நீ உன்னை அமலா பால் துறை நெருங்கி விட்டது அதில் இருந்து தம்பிக்கு உங்க கும்பல் பிஜேபி கிட்ட டோடல் சரண்டர் போய்யா போய் வேறு வேலை இருந்த பாரு


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 01:39

அமலாக்கத்துறை கேஜரிவாலிடம் காண்பித்த வேகத்தை தமிழக மந்திரிகளிடம் காட்டவில்லையே


முக்கிய வீடியோ