உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!

தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.திருச்சியில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் தமிழக போலீசார் காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது. அந்த முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை? தமிழக அரசு அச்சப்படுகிறதா? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=echhimfu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக காவல்துறை அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு போடுவதில்லை, இளைத்தவர்கள் மீது தான் வழக்குப்பதிவு போடுவது என்கிற நடைமுறையை கையாள்கிறதா? 15, 20 வருடங்களுக்கு முன், நான் நயினார் பாளையம் என்ற இடத்தில் நான் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். புதுச்சேரி அருகில் ஒரு சம்பவம் நடக்கிறது அன்றைக்கு விழுப்புரம் எஸ்பியாக இருந்த ரவி என் மீது வழக்கு போட்டார். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு தெரியாத ஒரு நிகழ்வு. கட்சிக்காரர்கள் ஏதோ ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உடன் சம்மந்தமே இல்லாத என் மீது பல வழக்குகளை எந்த தொடர்பும் இல்லாத நிலையில் போடப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள். எல்லோரும் சமம் என்று பார்க்கிற போது அந்த கட்சியில் சம்மந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள், அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்பிற்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள், கால தாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம், இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Rajasekar Jayaraman
அக் 02, 2025 22:02

இதுக்கெல்லாம் சேர்த்து வட்டி மூலமாக திருப்புவதற்கு காலம் கனிந்து கொண்டிருக்கிறது


rama adhavan
அக் 02, 2025 21:18

அரசு பாரபட்சமின்றி இருந்தால் உன் மீது நூற்றுக் கணக்கான வழக்கு இந்நேரம் போட்டு இருக்க வேண்டும் வக்கீல் வண்டு முருகா?


வடக்கன் வீர கதா
அக் 02, 2025 19:38

தில் இருந்தா கூட்டணியை முறித்துக் கொண்டு தனியே நின்று உங்கள் திறமையை நிரூபிக்க முடியுமா? இப்போ தெரியுதா உன் பயம், தயக்கம்,


joe
அக் 02, 2025 19:26

நீங்க என்ன I A S அதிகாரியா ?


joe
அக் 02, 2025 19:23

கலெக்டர் மற்றும் I G இவர்களுக்கெல்லாம் இவர்தான் தலைவராம்.


joe
அக் 02, 2025 19:18

நீங்க சொல்வதைப்பார்த்தால் கள்ள குறிச்சி விஷ சாராயத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் உள்ளதாகவே சொல்கிறீர்.அதில் 66பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் .அனாவசியமான அரசியலில் ஈடுபடவேண்டாம் . மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் நீங்க மட்டும் புத்திசாலியா ?மீடியாவில் கண்டதை எல்லாம் விளம்பரம் கொடுத்து விட்டால் நீங்க யோக்கியனா மாறிவிடுவாயா ?


சதிஷ் திருவாரூர்
அக் 02, 2025 19:04

நீங்க கேட்ட அனைத்து கேள்வியும் உண்மை இதுக்கு தான் அந்த அம்மா வேண்டும் என நினைக்க தோணுது


VENKATASUBRAMANIAN
அக் 02, 2025 18:53

நீங்கள்தான் 5 சீட்டுக்கு விலை போய் விட்டீர்களே. பேசுவதிற்கு என்ன தார்மீகம் உள்ளது.


ராமகிருஷ்ணன்
அக் 02, 2025 18:39

கரூரில் அரசின் தவறுகளைச் மறைக்க திட்டம் போட்டு திருமா கூவுது. எனவே யாரும் நம்ப மாட்டார்கள்


Modisha
அக் 02, 2025 18:34

அய்யப்பன் பற்றி ஆபாசமாக பேசியவர் மேல் தான் முதலில் வழக்கு போடப்பட வேண்டும்.


சமீபத்திய செய்தி