உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா என்ன செய்கிறார்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி

அப்பா என்ன செய்கிறார்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி

சென்னை: திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பா.ஜ., அரசின் 11 ஆண்டு சாதனை விளக்க கூட்டம், வேலப்பன் சாவடியில் நடந்தது. அதில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் கவர்னர் தமிழிசை கூறியதாவது:உலக அரங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ரயில் பாலம் காஷ்மீரில் கட்டப்பட்டுள்ளது. பெண்கள் வேலைவாய்ப்பு 7.50 கோடியாக உயர்ந்துள்ளது.தமிழகத்தின் உட்கட்டமைப்பிற்கு இதுவரை 10 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது. தமிழுக்கு எப்போதெல்லாம் மகுடம் சூட்ட முடியுமோ அப்போதெல்லாம் பிரதமர் மகுடம் சூட்டி வருகிறார். ஆனால், கீழடியின் தொன்மையை மறைக்க பா.ஜ., முயற்சி செய்வது போல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ், கம்யூ., தி.மு.க., கூறி வருகின்றன. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின்தான், கீழடியின் தொன்மை குறித்த அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி அதை கிடப்பில் போட்டது. மேலும், மாநில அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் தர, பா.ஜ., ஆட்சியில் 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மையை வெளிப்படுத்த தி.மு.க., அரசு எத்தனை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது?ஜாதி சான்றிதழ்களில் ஜாதி பெயருக்கு முன்னால் 'ஹிந்து' என்ற பெயரை நீக்குவதாக செய்தி வருகிறது. ஹிந்து என்ற வார்த்தையை மட்டும் நீக்க என்ன காரணம்? இதனால், அரசியலமைப்பு சட்டப்படி இட ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும்.தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 'தப்பு தப்பா நடக்குது; அப்பா என்னும் ஸ்டாலின் என்ன செய்கிறார்?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 18:34

அப்பா அன்புத்தம்பியின் அருமை சாராகி விட்டார் ன்னு நெனைக்கிறேன்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூன் 13, 2025 12:26

உங்களை போல விதாண்டவாதம் தந்தைசொல்லை கேட்காமை இல்லாமல் நல்ல திராவிட மாடல் ஆட்சி செய்கிறார்


M Ramachandran
ஜூன் 13, 2025 11:49

இதே என்ன கேள்வி? அடித்த பணத் தை அயல்நாடுகளி பதுக்கு வது எப்படி, குடும்பத்துக்குள் குத்து சண்டை வராமல் பார்ப்பது எப்படி ஈடி ரைடிலிருந்து காத்து கொள்ள டில்லியைய்ய கால்பிடிப்பது எப்படி இவ்வளவு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கு


madhesh varan
ஜூன் 13, 2025 11:24

60 வழக்கு உள்ள ரௌடி யை உங்க தலைவன் பாத்துட்டுப்போறான், பாலியல் சல்சா கட்சில இருக்குற பலரு மேல கிரிமினல் கேசு இருக்கு, தமிழிசை நீ உருட்டு உருட்டு நல்ல உருட்டு, சங்கிபசங்களை தொரத்தினால் நாடு முன்னேறும்,


Yes your honor
ஜூன் 13, 2025 10:37

அப்பா கேமராக்கள் புடைசூழ வாக்கிங் செல்கிறார். ஊட்டிக்குச் சென்றால் டான்ஸ் ஆடுகிறார். சென்னையில் இருந்தால் தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் முழங்குகிறார். இதுவே டெல்லி சென்றுவிட்டால் ஸீட்டின் நுனியில் பம்மிக்கொண்டு அப்படியே பவ்யமாக அமர்கிறார். டாடி ரொம்ப பிசி.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 13, 2025 09:11

அப்பா பழமொழிகளை துண்டு சீட்டை பார்த்து தப்பு தப்பா பேசி பயிற்சி செய்கிறார் ..


Ravi
ஜூன் 13, 2025 07:09

மாதிரி அப்பா வீடியோ சூட் நடத்துவதில் பிசியாக இருக்கிறார்