உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் கட்டடக்கலை என்றால் என்ன?: தமிழக அரசு விளக்கம்

ஸ்டாலின் கட்டடக்கலை என்றால் என்ன?: தமிழக அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொதுப்பணித்துறை கட்டியுள்ள கட்டடங்கள், எதிர்கால வரலாற்றில், 'ஸ்டாலின் கட்டடக்கலை' என போற்றி புகழப்படும்' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு, சிறப்பு சேர்க்கும் வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில், பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.கடந்த 2015ல் அறிவிப்பு வெளியிட்டு, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, இதுநாள் வரை கட்டாமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.ஆனால், முதல்வர் ஸ்டாலின், கடந்த ஓராண்டில் , சென்னை கிண்டி யில், 240.53 கோடி ரூபா யில், கலைஞர் நுாற் றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையை, ஆறு தளங்களுடன் கட்டி, பயன்பாட் டிற்கு கொண்டு வந்துள்ளார்.சென்னை கொளத்துாரில், 210.80 கோடி ரூபாயில், உயர் சிறப்பு மருத்துவமனை கட்ட, கடந்த ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த ஆண்டு திறக்கப்பட்டது.அதேபோல, 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டடங்கள், 4,179 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள, அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு, 218 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திருப்பத்துார், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்டங்களில், 452.76 கோடி ரூபாயில், கலெக்டர் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில், 18.42 கோடி ரூபாயில், கீழடி அருங்காட்சியக கட்டடம்; மதுரையில், 218.84 கோடி ரூபாயில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம்; 62.77 கோடி ரூபாயில், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு அரங்கம்.மேலும், 53.73 கோடி ரூபாயில் கருணாநிதி நினைவிடம்; கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாயில், கண்ணாடி இழைப் பாலம் போன்றவை கட்டப்பட்டு உள்ளன.இதுதவிர பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புத்தம் புதிய உயர் தொழில்நுட்பங்களுடன் கட்டப்படும், இந்த திட்டங்கள் எல்லாம், எதிர்கால வரலாற்றில், 'ஸ்டாலின் கட்டடக்கலை' என போற்றி புகழப்படும் அளவுக்கு பெருமைக்குரிய கட்டடங்களாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

rama adhavan
ஆக 11, 2025 21:57

இந்த பெயர்கள் எல்லாம் சில ஆண்டுகளிலேயே மறைந்து போகும். பொதுப் பனித்துறை டிசைன் செய்த அரசு கடடங்களுக்கு இவர் என்ன செய்தார்? எந்த ஆட்சி வந்தாலும் ஒரு சி எம் இருப்பார். புது புது கட்டிடங்கள் பொது பணி துறையில் தான் கட்டப்படும். சி எம் பங்கு எப்போதும் 000 தான். இதில் பெருமை எதற்கு?


பாரத புதல்வன்
ஜூலை 27, 2025 12:32

கட்டி திறப்பு விழா முடிந்து 30 வது நாளில் இடிந்து விழுந்தால் அது ஸ்டாலின் மாடல் கட்டிடக்கலை என்று பெயர்.... இந்த கட்டிட கலையானது தமிழகத்தில்100 வெற்றி கண்டுள்ளது... இதன் தனி சிறப்பாகும்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 27, 2025 11:26

மனசுல பெரிய சேர சோழ, பாண்டிய மன்னர்களின் வாரிசு என்று நெனப்பு.


எதிர்தமில்
ஜூலை 27, 2025 09:25

பகவான் இராமர் எந்த இன்ஜீனியரிங் கல்லூரி என்று வினவினார். கலைஞர்.. திராவிட கட்சிகள் கட்டின ஆஸ்பத்திரிகள் நாமக்கல் இராமலிங்கம் மாளிகை தடுப்பனைகள் பாலங்கள் பள்ளி கட்டிடங்கள் தண்ணீர் பூத்து பாதுகாப்பற்றவைகளாக உள்ளது ஊழலின் சின்னங்கள்..நகராட்சி அரசு ஏ கிரேட் காண்டிராக்ட் அனைவருமே திராவிட கட்சியை சேர்ந்தவர்களே... வெறும் வெற்று விளம்பரத்தில் 4 வருடம் ஆட்சி கட்டிலில் மணல் டாஸ்மாக் கொள்ளை அடித்தவர்கள் சுயதம்பட்டம் இன்னும் எத்தனை காலம், அதிமுக இதை விட மோசம்....புதிய பரிமாற்றங்களை காண திரு அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்


ஆரூர் ரங்
ஜூலை 27, 2025 09:03

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில்.போதுமான கழிப்பறை வசதியில்லை. எனவே இதே கட்டிடக்கலை பாணியில் அவற்றைக் கட்டி குடும்ப உறுப்பினர்கள் படத்தை அல்லது பெயரை வைத்து கொள்ளவும்.


V RAMASWAMY
ஜூலை 27, 2025 09:01

அப்படியென்றால் கொள்ளைக்கலைக்கும் அதே பெயர் தானா?


சி ரதி
ஜூலை 27, 2025 07:55

அரசு பள்ளிகள் முறையான கட்டிடங்கள் இல்லை.அதை கட்ட தடுப்பதில்லை.4 வருட ஆட்சி ஒன்றும் நடக்கவில்லை.சிறுமிகள் கற்பழிப்பு, முதியோர் கொலைகள், கஞ்சா போன்ற போதனைகள் சரளமாக கிடைக்கிறது.இவரின் ஆட்சியின் சிறப்புகள் இது தான்..


சுந்தர்
ஜூலை 27, 2025 07:50

அப்படின்னா கொளத்தூர் உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை எடுத்திருக்கலாமே...


Padmasridharan
ஜூலை 27, 2025 07:38

இவர் கட்டிய, இவரின் பெயரை வைத்த "உயர் சிறப்பு மருத்துவமனையில்" இவர் சென்று சிகிச்சை பெற்றிருந்தால் இந்த கட்டிடங்களுக்கு மிகுந்த சிறப்பை சேர்த்திருக்கலாமே thamizh நாட்டின் இந்திய வரலாற்றில் ....


மூர்க்கன்
ஜூலை 27, 2025 05:47

நீ உருட்டு மணியா?? குஜராத்ல பாலம் விழுந்ததுக்கம் ராஜஸதன்ல ஸ்கூல் இடிஞ்சு விழுந்தாலும் கழகம்தான் காரணம்னு??


vivek
ஜூலை 27, 2025 07:16

சொம்பு மூர்க்க,,,அதில் என்ன சந்தேகம்....திருட்டு திராவிடம் இருக்கும் இடம் விளங்காது


முக்கிய வீடியோ