உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் 6 பேர் பலியான பின்னணி என்ன?

மருத்துவமனையில் 6 பேர் பலியான பின்னணி என்ன?

திண்டுக்கல்: திண்டுக்கல் -- திருச்சி ரோட்டில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, 9:20 மணிக்கு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீயிலிருந்து உருவான புகை மருத்துவமனை முழுதும் பரவியது. நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் திணறினர். இதில், ஆறு பேர் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள், 32 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து தொடர்பாக, போலீசார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், பணியாளர்கள் உட்பட ஐந்து முக்கிய பேரிடம் விசாரணை செய்தனர். சிட்டி மருத்துவமனையில் ஸ்மோக் டிடெக்டர், அதிக வெப்பம் வந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவிகள் உள்ளிட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் இருந்துள்ளன.தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் உள்ளே இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அச்சமடைந்து தீத்தடுப்பு உபகரணங்களை உபயோகிக்காமல் வெளியே ஓடினர். அவர்கள் மின்கசிவு ஏற்பட்ட உடன், தீத்தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் பெரியசாமி, சுப்பிரமணியன், சக்கரபாணி சந்தித்து ஆறுதல் கூறினர்.''மருத்துவமனை கட்டமைப்பில் உள்ள விதிமீறல் குறித்தும் விசாரிக்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
டிச 14, 2024 16:44

Fire fighter / Fire rescuer என்று யாருமில்லையா ???? அப்படி இருந்தாலும் ஊழியர்களுக்கு Fire extinguisher பயன்படுத்துவதில் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் ..... இதைக்கண்காணிக்க அரசிடமும் ஆய்வாளர்கள் இல்லையா ????


Anantharaman Srinivasan
டிச 14, 2024 12:50

வந்தபின் காப்போம். வரும்முன் தூங்குவோம்... இதுவும் விடியா திராவிடமாடலின் கொள்கை முழக்கம் ..


W W
டிச 14, 2024 10:40

Automatic springler System இருந்தும் அது ஏன் வேலை செய்யவில்லை ? . Are they deputed to qualified Contractors ? done all Electrical Works ,In case of Short circuit or over load no Tripping Circuit acted it is very Shameஎல்லா ஊழியர்களுக்கும் " Incase of Fire Safety குறித்து வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை கிளாஸ் எடுத்து அவர்களுக்கு ஒரு Basic awareness இருக்குமாறு சேஐது ஒரு பயத்தை போக்க வேண்டும் ,என்பது என் தழ்மையான வேண்டுகோள் .


முக்கிய வீடியோ