உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா?' என தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை கேள்வ எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ykknx83&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

sankar
பிப் 19, 2025 11:49

பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி... அப்பா, அப்பான்னு நான் சொல்லிட்டு திரியறேன்... வேற ஒருபயலும் சொல்லமாட்றான்


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 23:20

ஆனந்த விகடன் இணையத்தளத்தை ஆஃப் பண்ணிட்டியாமே. விசுவாசத்துக்கு ஒரு உச்சம்ன்னு காட்டிட்டே மலே ..


தாமரை மலர்கிறது
பிப் 18, 2025 20:17

மும்மொழி படிக்க சொன்னா, முடியாது. ஆனால் போதைப்பொருள் பள்ளி குழந்தைகளிடம் விநியோகம் செய்யப்படுகிறது.


T.sthivinayagam
பிப் 18, 2025 19:32

முன்பு எல்லாம் பாலியல் பலாத்காரத்தை வைத்து கட்ட பஞ்சாயத்து பண்ணி பணம் பார்த்த கட்சி விஐபிகளுக்கு இப்ப பெற்றோர் கட்ட பஞ்சாயத்து இல்லாமல் போலிசில் புகார் தருவது கஷ்டமா தான் இருக்கும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 16:45

யாரு இங்கே நாடகம் ஆடறாங்க ன்னு எல்லோருக்கும் தெரியும். ஏ சி பஸ்ஸில் பாதையாத்திரை, 6 வயசு, 8 வயசு பையன்கள் காலில் விழுவது, சாட்டையால் அடிச்சுக்கறது, செருப்பு போட மாட்டேன் ங்கறது, காவடி தூக்கறது - என்றெல்லாம் நாடகம் ஆடுவது நீங்கள் தான். பாஸ்ட்டேக், டோல் சார்ஜ் கொள்ளை, அநியாய கட்டணம், பேலன்ஸ் இல்லைன்னா பாஸ்ட் டேக் அக்கௌன்ட் முடக்கம் என்று பணவெறித் தாண்டவம் ஆடும் ஒன்றிய பாஜக அரசின் செயலை என்னவென்று சொல்லுவது? இதைப் பற்றி விளக்கம் குடுங்க அண்ணாமலை.


விஜய்
பிப் 18, 2025 17:20

.உனக்கு விளக்கம் குடுக்க தேவையில்லை


panneer selvam
பிப் 18, 2025 17:32

So nothing like similar atrocities on women happen in Tamil Nadu ? Be loyal to your paymaster but do not deny the fact by burying the head in the sand.


raja
பிப் 18, 2025 17:52

38 கேன்டீன் டோக்கன் எந்த ஆணியை புடிங்கி கிட்டு இருக்கு...


Kjp
பிப் 18, 2025 16:20

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை.முட்டு குடுத்து குடுத்து தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நாறிக் கொண்டு வருகிறது.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 18:23

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நாறிக் கொண்டு வருகிறது.?? எதை வெச்சு சொல்றீங்க?? ஒரு 17 வயசுப் பொண்ணு, அவளுக்கு சமூக வலைத்தள காதலன். அவன் ரூமுக்கு வா ன்னு கூப்பிடறான். இவ போறா. . இதுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம். போன் ல ரூமுக்கு கூப்பிட்டால் ஒரு பொண்ணு போறா ன்னா யார் மீது தப்பு? சட்டம் நாறவில்லை. சிறப்பாக செயல் பட்டு குற்றவாளிகளை தூக்கிடுச்சு. ஒழுங்கு தான் நாறிக் கிடக்கு. அதுக்கு அரசு அல்ல காரணம் என்று உனக்கே தெரியும். அந்த பெண் படிக்கும் ஸ்கூலில் மீதி 799 பெண்கள் ஞாயிறு அன்று வீட்டில் ஒழுங்கா இருக்குதுங்களே.. இவளுக்கு மட்டும் என்ன?? இதை யோசித்தாயா??


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 18:26

அண்ணாமலை கேட்ட கேள்வி என்ன? நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? இதுக்கு தமிழ் நாடு அரசாங்கம் எதுக்கு பதில் சொல்லணும்?? நாடகம் ஆடறவங்க தான் பதில் சொல்லணும். அவங்களைக் கேளு.


Narayanan Muthu
பிப் 18, 2025 15:21

மேரே நாம் ஜோக்கர்


guna
பிப் 18, 2025 15:47

நீ ஜோக்கர் என்று எல்லாருக்கும் தெரியும் நாராயணா


Suppan
பிப் 18, 2025 16:38

கருத்திடுவதற்கு பதிலாக உங்கள் பெயரை எழுதுகிறீர்கள்


Bala
பிப் 18, 2025 16:47

முத்து நீயும் ஜோக்கர் உன் தலீவரும் ஜோக்கர், சின்ன தத்தியும் ஜோக்கர் ஹீ ஹீ ஹீ


Kasimani Baskaran
பிப் 18, 2025 17:15

ஜோ நாராயணன்... தெரிந்தது தானே


சுராகோ
பிப் 18, 2025 15:03

ஒழுக்கமான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டும் என்றால் ஒழுக்கமானவர்களை ஆட்சியில் உட்கார வைக்கவேண்டும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வேண்டும். தி மு க நல்ல எதிர் கட்சியாக இருந்திருக்கிறார்கள் ஆனால் நல்ல ஆளும் கட்சியாக இருந்ததில்லை.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 17:35

ஒழுக்கமான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டும் என்றால் இன்றைய பெற்றோர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் சராசரியாக 3 மணிநேரத்துக்கு ஒரு பாலியல் குற்றம் நடப்பதாக ஒன்றிய பாஜக வின் நிதி ஆயோக் அறிக்கை சொல்கிறது. ஆட்சியில் உட்கார்ந்திருப்பவனா உன் அடுத்த தலைமுறையை வளர்க்கிறான்? யோசியுங்கள். ஞாயிறு அன்று ஒருத்தன் போனில் கூப்பிட்டதும் அவனோட ரூமுக்கு 17 வயசு பொண்ணு போறதுக்கும் ஆட்சியாளர்களுக்கும் என்ன சார் சம்பந்தம்???


raja
பிப் 18, 2025 17:57

அடலீஸ்ட் அண்ணா யூனிவெர்சிட்டியேல் நடந்த போதே முதல்வரின் கையில் இருக்கும் காவல் துறை ஆந்திராவில் நடந்தது போல என்கவுண்டர் செய்திருந்தால் இப்போ இவனுவோ கூப்பிடவே யோசித்திருப்பானுவோ


pmsamy
பிப் 18, 2025 14:47

நடுராத்திரி இல்ல தேர்தல் ஆணையர் நியமனம் அதுக்கு பதில் சொல்லு


Bala
பிப் 18, 2025 16:46

இந்த மாதிரிதான் பற்றி எரியும் பிரச்சனைகளை திசை திரும்புவதில் திமுகவினர் வல்லவர்கள். இங்க உள்ள பிரச்சனைக்கு பதில் சொல்லுங்கடா என்றால் உத்தர பிரதேசம் , தில்லி, மணிப்பூர்னு உருட்டுறீங்க


GMM
பிப் 18, 2025 14:36

பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற கொடிய குற்றம் செய்யும் நபர்கள் குடியுரிமை ரத்து செய்து, அகதி ஆக்க வேண்டும். பின்பு தான் புலன் விசாரணை, தண்டனை. மாணவர்கள் பெற்றோருக்கும் தண்டனை பொருந்த வேண்டும். சட்டத்தில் இடம் இல்லை என்றால், சட்ட மசோதா தாக்கல் செய்ய வேண்டும். ஒரு உயர் அதிகாரி கையில் பின் குத்தி ரத்தம் வந்து விட்டதாம். உடனடியாக கடிதங்கள் நூலில் தைத்து வர வேண்டும் என்று உத்தரவு போட்டாராம். அதிகார வர்க்கம் பாதித்தால் தான் விடியல்.


Bala
பிப் 18, 2025 16:39

நல்ல ஒரு ஆலோசனை. அத்தகைய குற்றம் இழைத்தவர்களின் ஓட்டுரிமையை ரத்து செய்தாலே போதும் . திராவிட மாடல் என்றைக்கும் ஆட்சிக்கு வர முடியாது. ஆட்சிக்கு வரும் கட்சிகள் இத்தகைய குற்றவாளிகளை ஆதரித்தால் அவர்கள் ஒரு பத்தாண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டும்.


புதிய வீடியோ