| ADDED : ஜன 26, 2024 02:08 AM
புதிதாக விஜய் துவங்க இருக்கும் கட்சிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பது குறித்தும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:அடுத்த மாதம் முதல் வாரத்தில், தேர்தல் கமிஷனில் கட்சி பெயர் பதிவு செய்யலாம் என கூட்டம் வாயிலாக ஒப்புதல் அளித்து விட்டோம். கட்சியின் தலைவராக, விஜயை ஏகமனதாக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றித் தந்துள்ளோம். தமிழக முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் ஜனநாயக கழகம் உள்ளிட்ட சில பெயர்களை பரிசீலிக்க வேண்டும் என, இயக்கத் தலைவர் விஜய்யிடம் கூறியுள்ளோம். அவரும் கட்சிக்கென சில பெயர்களை யோசித்து வைத்துள்ளார். இவைகளில் இருந்து ஏதேனும் ஒரு பெயர் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.உங்களின் ஏகோபித்த முழு ஆதரவுடன்தான் கட்சி துவக்கும் பணிகளை முன்னெத்து வருகிறோம். மக்கள் இயக்கம், கட்சியாக மாறும்போது, தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்.- விஜய், நடிகர்.