உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு துறை என்ன செய்கிறது: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்த ஐகோர்ட் கேள்வி

மதுவிலக்கு துறை என்ன செய்கிறது: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்த ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் குண்டர் சட்டத்தில் 18 பேரை கைது செய்த மாவட்ட கலெக்டரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7uhm5xye&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து சென்னை ஐகோர்ட், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கில், 18 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று (ஜன., 06) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 6 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை? முதன்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. தவறிழைத்த மதுவிலக்கு பிரிவு போலீசார் மீது எடுத்த நடவடிக்கைகளை குறித்து தெரியவில்லை. மதுவிலக்கு போலீஸ் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. மதுவிலக்கு துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, குண்டர் சட்டத்தில் 18 பேரை கைது செய்த மாவட்ட கலெக்டரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.முன்னதாக, 'கள்ளச்சாராயம் வழக்கில் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐ இடம் ஒப்படைக்கப்படும். 110 நாட்கள் கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்' என தமிழக அரசு விளக்கம் அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
ஜன 07, 2025 08:48

இத்தனை ஒட்டைகளுடன் அதான் loophole களுடன் ஒரு குண்டர் சட்டம்.


அப்பாவி
ஜன 07, 2025 08:47

பாவம் அந்த குண்டர்கள் ஆறு மாசம் ஜெயிலில் களி தின்னு இளைச்சுப் போயிட்டாங்க. எனவே அவர்கள் குண்டர்கள் அல்ல என்ற அடிப்படையில் ரத்து செய்யப் படுகிறது. வெளியே வந்து திரும்ப கொழுத்து கள்ளசாராயம் வித்து குண்டர்களாயிடுவாங்க. அப்போ பிடிச்சிக்கலாம்.


visu
ஜன 06, 2025 19:30

இன்னமும் ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லையா அருமை


R.RAMACHANDRAN
ஜன 06, 2025 15:38

மத்திய மாநில அரசு ஊழியர்கள் தங்களை ஆளுநர் குடியரசுத் தலைவர்களை போல நினைத்துக் கொண்டு தங்கள் மீது நடவடிக்கை எடுக்க யாரும் துணிய மாட்டார்கள் என துணிவுடன் குற்றங்கள் பல செய்கின்றனர்.இந்திய அரசமைப்பு உறுப்பு 366 ஐ யாரும் கருத்தில் கொள்ளாததால் இந்நிலை.


ghee
ஜன 06, 2025 15:18

இது நமது.முதல்வருக்கு அழகல்ல


N.Purushothaman
ஜன 06, 2025 15:06

இவர்கள் மேல் உள்ள குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது சரியே ...அதே போல் நீதிமன்றம் சரியான கேள்வியை காவல்துறை நோக்கி கேட்டு உள்ளது ..தவறு எய்த காவல்துறையினர் மீது இது வரை நடவடிக்கையின் எடுக்கவில்லை என்று கேட்டு உள்ளனர் ...அதற்க்கு அரசிடம் பதில் இல்லை ....மொத்தத்தில் நிர்வாகம் பல முனைகளிலும் செயலற்று உள்ளது ....


Dharmavaan
ஜன 06, 2025 17:12

கோர்ட் ஏன் காவல் துறை மீது தண்டனை அறிவிக்க வில்லை


Ramanujadasan
ஜன 06, 2025 14:34

" நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் , நீ அழுகர மாதிரி அழு . நீ எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும் உடனே ஜாமீன் கொடுப்பேன் . ஏனென்றால் நான் உன் உடன் பிறப்பு "


ராமகிருஷ்ணன்
ஜன 06, 2025 14:00

நடப்பது விடியல் அரசு. கள்ளசாராய அரசு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது எல்லாம் திமுகவினர் தான். மதுவிலக்கு துறையும் திமுகவிடம் உள்ளது கட்சி மேலிடம் வரைக்கும் கமிஷன் போய்விடும். பிறகு எப்படி கேஸ் நடத்த முடியும். ஒரு குற்றமும் நடக்கவில்லை. திடீர் விஷ வாயு தாக்கி செத்தார்கள். அரசு 10 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டது என்று கேஸ் மூடப்படும். மானம் கெட்ட திமுக ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்கும்


G Mahalingam
ஜன 06, 2025 13:48

எவ்வளவு நீதிமன்றம் குட்டினாலும் சூடு சுரணை வெட்கம் இல்லாத திராவிட மாடல் ஆட்சி. கொள்ளை அடிப்பதில் உள்ள திறமை கள்ள சாராயத்தில் இல்லை.


Anand
ஜன 06, 2025 13:34

குண்டர் சட்டம் ரத்து, போலீசும் கோர்ட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது, அது சரி அண்ணா யுனிவர்சிட்டி பாலாத்கார குற்றவாளியும் குண்டர் சட்டத்தில் தான் அடைக்கப் பட்டுள்ளான் ....


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 14:08

சி பி ஐ உள்ளே வரணும் என்று கேட்பவர்களின் வாயை அடைக்க ஞானம் குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளான்... மாடலா கொக்கா ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை