உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ''கோவையில் கல்குவாரியில் நடந்த விதிமீறலில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவையில் விதிகளை மீறி கல்குவாரி நடத்தியதாக ரூ.32.29 கோடி விதித்த அபராதத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குவாரி உரிமையாளர் செந்தாமரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஜூன் 07) சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.அப்போது, ''மனுதாரருக்கு குவாரி நடத்த எந்த உரிமமும் இல்லை. எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகை குவாரி உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்'' என தமிழக அரசு விளக்கம் அளித்தது.பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது: * 2023ல் உரிமம் முடிந்தால், அதை தற்போது ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. * நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காக்கத்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.* குவாரியை மூடிவிட்டதாக அதிகாரிகள் அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அனுமதித்துள்ளனர்.* சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை கமிஷனரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது.* இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.* குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது.* விதிமீறல் குறித்து லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
ஜூன் 08, 2025 17:30

அதிகாரிகள்னா என்ன வேலை? மாசம் பூரா லஞ்சம் வாங்கணும் மாச கடைசில சம்பளம் வாங்கணும் இதை நான் சொன்னா எடுத்துக்க மாட்டாங்க நான் நிரூபிக்கணும் என் வாழ்க்கை வேலை வெட்டி குடும்பத்தை போட்டுட்டு நிரூபிக்கறதுக்காக அலையனும் இவங்க ஒக்காந்துகிட்டு சம்பளம் வாங்கிட்டு 100 வருஷம் கழிச்சு தீர்ப்பு சொல்லுவாங்க


chinnamanibalan
ஜூன் 07, 2025 14:44

தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் கோடிக் கணக்கான கொள்ளைப் பணம்தான்,ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி இவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு, 'குறை எதுவும் கூறாத அளவில் நடைபெறுகிறது.


Amar Akbar Antony
ஜூன் 07, 2025 13:46

ஐயா நீதியரசரே, ஏன் இவ்வளவு நாட்கள் தென் மாவட்டங்களிலிருந்து கனிமவள வெட்டி அள்ளி கொண்டிருந்தார்களே அப்போதே தானாக முன்வந்து விசாரித்திருந்தால் இலட்சக்கணக்கான டன் கனிமவளத்தை காப்பாற்றியிருக்கலாமே? கண்டிப்பாக இந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


rajasekaran
ஜூன் 07, 2025 13:44

ஹி ஹி


GMM
ஜூன் 07, 2025 13:43

குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை , மற்றும் உள்ளூர் ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் ...பங்கு இருக்கும். குவாரி இருப்பிடம் தமிழகம் என்றாலும் தேசிய சொத்து. தமிழக லஞ்ச ஒழிப்பு துறையை விட சிபிஐ விசாரணை தான் சரி. விதி மீறலை முதலில் நிர்வாக துறை தான் விசாரிக்க முடியும். நேரடியாக போலீஸ் விசாரிக்க முடியாது. ?


Seshan Thirumaliruncholai
ஜூன் 07, 2025 13:29

நாட்டில் எந்த இடத்தில என்ன மாதிரி தவறுகள் நடக்கின்றன அரசின் உயர் அதிகாரிகளைவிட அமைச்சர்கள் அறிவார்கள். அரசு என்றால் மக்கள் அரசு என்பது தவறு. உண்மையில் யார் என்றால் ஆளும்கட்சியின் வட்டம் மாவட்டம் தலைகள் தான். இவர்கள் மீறி எதுவும் நடக்காது. அரசு அதிகாரிகள் ஊழல் பேர்வழிகள் என்று தப்பாக ஊடகங்கள் பாப்பிவிட்டனர். அதிகாரிகள் தங்கள் நலங்கள் குறித்து வட்டம் மாவட்டத்தைத்தான் அணுகுகிறார்கள். பல ஊடகங்கள் இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்கள்தான்.


Srinivasan Srisailam Chennai
ஜூன் 07, 2025 13:22

ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கப்படுவது ஒரு தனிப்பட்ட மனிதனின் செயலாக இருக்கலாம் ஆனால் ஒரு நாட்டில் பகிரங்கமாக கனிம வளங்களை லாரி லாரி ஆக கொள்ளையடித்து செல்லுவது ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல் அல்ல அதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னால் இருக்கும் அரசியல் வர்க்கம் தண்டிக்கப்பட வேண்டும்