உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடகள வீரரை கொலையாளியாக்கிய கொள்கை எது? போலீசார் கவனம் செலுத்த வேண்டியது அதில்தான்!

தடகள வீரரை கொலையாளியாக்கிய கொள்கை எது? போலீசார் கவனம் செலுத்த வேண்டியது அதில்தான்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி., ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் சிறந்த தடகள வீரராக இருந்திருக்கிறார். அவர் கொலையாளியாக மாற காரணமாக இருந்த கொள்கை எது என போலீசார் விசாரித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வியின் மகன் கவின் 27, சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் பள்ளியில் பயிலும் போது உடன் படித்த பிளஸ் 2 மாணவியை காதலித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o9nwa1wr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 காதலி தற்போது திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிகிறார். அந்த மருத்துவமனைக்கு வந்த கவின் காதலியின் தம்பி சுர்ஜித் 24, அழைத்துச் சென்று கடந்த 27ம் தேதி வெட்டிக் கொலை செய்தார். கவின் பட்டியல் இனத்தவர். அவரது காதலி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஜாதி ரீதியான எதிர்ப்பினால் சுர்ஜித் இந்த கொலையை செய்திருந்தார்.சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் போலீசில் எஸ்.ஐ.,யாக உள்ளவர்கள். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்ற வேண்டும் என கவினின் தந்தை சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் நேற்று இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டார்.

அதலெட்டிக் முதல் அரிவாள் வரை...

சுர்ஜித் பி.காம்., படித்துள்ளார். பள்ளிக்காலத்திலிருந்தே சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். தடகள போட்டிகளில் மாநில சாம்பியனாகவும், பல கோப்பைகள் கேடயங்களையும் குவித்துள்ளார். ஆனால் கல்லுாரி படிப்பு முடிந்ததும் ஜிம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அதே சமயம் அவர் அரிவாள், ஆயுதங்களுடன் போஸ் கொடுக்கும் படங்களும் உள்ளன.கவினுக்கும் சுர்ஜித்தை நீண்ட காலமாக தெரியும். எனவேதான் சுர்ஜித் அழைத்ததும் மறுப்பு தெரிவிக்காமல் சென்றுள்ளார். ஆனால் அவர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார். ஆயுதங்கள் அரிவாள்களுடன் படங்கள் வெளியிடுவோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.ஆனால் தந்தை, தாய் இருவரும் போலீசாக பணியாற்றுவதால் சுர்ஜித்தின் அரிவாள் படங்களை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. பெற்றோரும் கவனிக்கவில்லை. தடகளத்தில் மாநில சாம்பியனாக திகழ்ந்த சுர்ஜித் கைகளில் அரிவாள் பிடிக்க வைத்த 'கொள்கை' தான் அவரை கொலைக்கு இட்டுச்சென்றுள்ளது. தாமிரபரணி தாலாட்டும் பசுமை மிக்க திருநெல்வேலியை ரத்தபூமியாக மாற்றி வரும் ஜாதி அமைப்புகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் விஷமாக பரவி வரும் ஜாதி கலாசாரம் ஒரு தடகள வீரரை கொலையாளியாக மாற்றியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலீசாரின் கையில் தான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rathna
ஜூலை 31, 2025 12:46

சாதி என்பது தான் வட்டம் மாவட்டம் இல் இருந்து சபை வேட்பாளர் வரை தீர்மானம் செய்கிறது. நேர்மை நாணயம் அல்ல. காமராஜர் இருந்தால் கூட இப்போது பல முறை தேர்தலில் தோற்று போயிருப்பார். அரசியல் சந்நியாசம் வாங்கி இருப்பார். சாதி தான் பிறப்பில் இருந்து இறப்பு வரை - படிப்பு, வேலை வாய்ப்பு - வாழ்க்கையை தீர்மானம் செய்யும் கருவியாக மாறி உள்ளது. இதில் சாதி சங்கங்கள் மிக பெரிய பங்கு வகிக்கிறது. இதை அடிக்க சக்திகள் மாற்ற அனுமதிக்காது. இது தான் உண்மை நிலைமை.


Rathna
ஜூலை 31, 2025 12:42

காவல் துறை மிகவும் பாவம். எல்லா பக்கத்தில் இருந்தும் அவர்களுக்கு பிரச்சனை. புகார்கள், உயிர் பாதுகாப்பு பிரச்சனை. 1960 கடந்து உள்ள நிலைமை, நேர்மையாக உள்ளவர்கள் பணிபுரிவது மிகவும் கடினம்.


Vijay
ஜூலை 31, 2025 09:39

இதே பிஜேபி ஆளும் மாநிலமாக இருந்தால், எடப்பாடி ஆட்சியாக இருந்தால் நம் போலி போராளிகள் மற்றும் ஊடகங்கள் பொங்கி இருப்பார்கள்.


மூர்க்கன்
ஜூலை 31, 2025 12:22

பிஜேபியும் அதிமுகவும் கடந்த ஆண்டுகளில் வளர்த்த விஷ செடியை திராவிடம் பிடுங்கி வருகிறது?? மீண்டும் விஷ விதைகளை தூவ அடுத்த ஆண்டு மெனெக்கெடுகிறார்கள்? விழிப்போடு இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்.


Karthik
ஜூலை 31, 2025 09:01

ஆணவம் என்றால் ego . இதில் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று எல்லாம் இல்லை. கீழ் ஜாதி என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் மேல் ஜாதி பெண்களை காதலிக்க முற்பட்டு பெண்கள் இஷ்டம் இல்லை என்று சொன்னால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் . அதுவும் ஆணவ கொலை தானே?


Svs Yaadum oore
ஜூலை 31, 2025 08:33

2022 அக்டோபரில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலை காதலில் கல்லூரி மாணவியை மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைக்க மாணவியின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. போலீஸ் துறையை சேர்ந்த மாணவியின் தந்தையும் அன்றே அதிர்ச்சியில் மரணம். இதில் கொலை செய்தவன் எந்த ஜாதி? இது போல பல மரணங்கள்.. இதுபோன்ற கொலைகளையும் ஆணவ கொலை என்ற கணக்கில் சேர்க்கலாமா? அப்போதெல்லாம் ஆணவ கொலை என்று யாரும் பிரச்னை கிளப்பவில்லேயே?? சமீபத்தில் கன்யாகுமரி குலசேகரம் பகுதியில் காதலி வீட்டில் IT என்ஜினீயர் மர்ம சாவு ....இது வேறு மதம் என்பதால் சமூக நீதி மத சார்பின்மையாக இது ஆணவ கொலை என்ற கணக்கில் வராது ..இந்த கொலையை அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள் ..இந்த வரலாற்றை படித்து பார்த்தால் இதில் உள்ள அரசியல் சூழ்ச்சி புரியும் ....பாதிப்பு ரெண்டு பக்கமும்தான் ...ஆனால் பிணம் தின்னும் அரசியல் கட்சிகள் இது ஆணவ கொலை என்று இதிலும் லாபம் பார்க்கும் ...


thangam
ஜூலை 31, 2025 08:22

ஜாதியை எதிர்க்கிறோம் என்று சும்மா குரல் கொடுத்துக்கொண்டே ஜாதி கட்சிகளை வளர்த்து விடும் திருட்டு திராவிடமே இதற்கு காரணம் குருமா மற்றும் ராமதாஸ் போன்ற சாதி கட்சி தலைவர்களுடன் நட்பு பாராட்டும் இரண்டு திரட்டு திராவிட கட்சிகளுமே இதற்கு காரணம் நமது கட்சிக்கு ஆதார் நமது ஜாதிக்கு ஆதரவாக பேசுகிறார் என்று குருமாவை ஆதரிக்கும் கேடுகெட்ட மக்களும் இதற்கு ஒரு காரணம் இதைவிட முக்கிய காரணம் சாதி வெறியில் புரண்டு உருளும் பழைய பஞ்சாங்க சொந்தக்காரங்களும் பெருசுகளும் தான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அந்த ...களை வீட்டை விட்டு விரட்டி விட்டால் வீடு உருப்படும் அம்பேத்கரை கொள்கைகளை இந்த ...கள் எதுவும் பேசப் போவதில்லை. ஜாதி வெறியை மட்டுமே கையில் எடுப்பதற்கு அம்பேத்கர் போட்டோ எதற்கு


Kalyanaraman
ஜூலை 31, 2025 08:16

மாநில அளவில் தடகளத்தில் சிறந்து விளங்கியவனை தேசிய அளவில் முன்னேற்ற வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அதை செய்திருந்தாலே இந்த கொலை நடந்திருக்காது. மேலும் பல தடகள வீரர்களையும் உருவாக்கி இருக்கலாம். அரசாங்கத்தின் மெத்தனம்


Svs Yaadum oore
ஜூலை 31, 2025 08:06

ஜாதி அமைப்புகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலீசாரின் கையில் தான் உள்ளதாம். இங்குள்ள அரசியல் கட்சிகள் ஜாதி சங்கங்களுடன் தேர்தல் கூட்டணி வைக்க கூடாது என்று அதற்கு முற்று புள்ளி யார் வைப்பதாம்?? இங்கு அணைத்து ஜாதிகளுக்கும் ஜாதி சங்கங்கள் உண்டு. அதற்கு தலைவர் உண்டு. அதன் மூலம் அரசியல் கட்சி தலைவர், அரசு பதவி, மந்திரி பதவி என்று அனைத்தும் உண்டு. கட்சியில் மாவட்ட செயலாளர் வட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் என்று அனைத்தும் ஜாதி பார்த்துதான் ....சமூக பிரச்னையை வெறும் சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரச்சனை என்று மடை மாற்ற வேண்டாம். பிரச்சனையை இங்குள்ள அரசியல் வாதிகள் வளர்த்து விடுவார்கள், ஜாதி பார்த்து மந்திரி பதவி.. இதில் போலீஸ் என்ன செய்ய முடியும்??


பிரேம்ஜி
ஜூலை 31, 2025 08:23

கருத்து மிகவும் சரி. ஆனால் இந்த கருத்து அரசியல் வாதிகளுக்கு பிடிக்காது. ஜாதிகள் இருந்தால்தான் பிரச்சினைகள் இருக்கும். அதைத் தீர்ப்பதாகச் சொல்லி சம்பாதிக்கலாம். கட்சி நடத்தலாம்! பொதுமக்கள் திருந்த வேண்டும்! பொறுக்கிகளுக்கு தலைவர் அந்தஸ்து கொடுக்கக் கூடாது!


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 31, 2025 08:05

சமூக சீர்திருத்தம் செய்வது போலீஸ் வேலையல்ல. தமிழக அரசியல் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தில், சமூகநீதி என்ற போர்வையில் அரசே மக்களை ஜாதி ரீதியில் பிரித்து வைத்துள்ளதும், தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பு என்ற போர்வையில் S.C.S.T. பாதுகாப்பு சட்டம் என்ற ஜாதி முன்னேற்ற சட்டம் வைத்துள்ளதுமே அடிப்படைக் காரணம். மக்களை ஜாதியில் இருந்து பிரிப்பதற்கு இதுபோன்ற சட்டங்கள் மக்களை ஜாதி ரீதியில் ஒன்றுபட வைக்கின்றன. ஜாதி என்பது ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரிவு. இதில் அரசும் அரசியல் கட்சிகளும் தலையிட்டு எல்லாவற்றிலும் ஜாதியை கேட்டு, ஜாதி சார்ந்து முடிவுகள் எடுக்கும்போது ஜாதி பிரச்சனையாகத்தான் இருக்கும்.எளியோருக்கு வசதியற்றிற்கு அரசு உதவி செய்வதில் தவறில்லை. ஆனால் ஜாதி பார்த்து அரசு திட்டங்கள், சட்டங்கள் இருப்பது பெரும் தவறு. இப்போது தேவைப்படுவது அரசியல் சீர்திருத்தம். சமூக சீர்திருத்தம் அல்ல.


Sivakumar
ஜூலை 31, 2025 07:57

Ruling elite perpetuates divide and rule, with negligible progress for the common people divert with all freebies to garner minimum votes to gain a simple majority at the polling booth. Sorry to hear this being repeated with the Law


புதிய வீடியோ