உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல; ஒரே வரியில் இபிஎஸ் பதில்

விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல; ஒரே வரியில் இபிஎஸ் பதில்

சேலம்: திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி என்று கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, 'விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.தவெக கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நாகப்பட்டினத்தில் பிரசார கூட்டத்தில் விஜய் பேசுகையில், '2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி' என்று தெரிவித்தார். இது தமிழக அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gzh3k11t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒரே வரி பதில்

அந்த வகையில் இது தொடர்பாக சேலத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ், 'அது அவர் கருத்து, ஆனால் மக்கள் கருத்து வேறு' என பதில் அளித்தார். சேலம் வந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நேரில், சந்தித்தது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அவரே கருத்து சொல்லி இருப்பாரே' என்று இபிஎஸ் கூறிவிட்டு, கையெடுத்து கும்பிட்டபடி புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S.L.Narasimman
செப் 23, 2025 07:51

வெகு நாகரீகமான கருத்து. தற்போதைய சூழ்நிலையில் எந்தவித கவர்ச்சியில்லாதும், ஊடங்ககளின் பொய்பிரசாரத்தையும் மீறி எடப்பாடியாரின் எழுச்சி பயணத்திற்கு மக்கள் தரும் ஆதரவை பார்த்தால் தீமுகாவுக்கும் தவெக்காவுக்கும் போட்டி இரண்டாம் இடத்திற்குதான்.


V.Mohan
செப் 22, 2025 17:31

திமுக வீன் கொள்கைகளை காப்பியடித்து, இது என்னோட கொள்கைன்னு ரீல் உட்டா ஜோசப் விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகள் கை தட்டும். முதலில் நீங்க கட்சி எதுக்காக ஆரம்பிச்சீங்கன்னு உங்க ரசிகர்களுக்கும், ரசிகர்கள் பெயரில் வேற கட்சிகளிலிருந்து சத்தமில்லாமல் உங்க கட்சிக்கு ஒண்ட வந்த பிடாரிகளையும் கேளுங்க விஜய். தனிமரம் தோப்பாகாது- -அது ஆல மரமோ சந்தன மரமோ ஒரு மரம் எல்லாருக்கும் நிழல் தராது. முதலில் நல்ல அறிவார்ந்தவர்களை கட்சி உறுப்பினர்களாக ஆக்குங்கள். கொள்கைகளைப்பேசி ஆதரவு தேடுங்கள். வேடிக்கை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் தங்களை எம்.எல். ஏ. கூட ஆக்காது. புரிந்து நடந்தால் முன்னேறலாம்.


V.Mohan
செப் 22, 2025 17:11

என்னங்கய்யா அநியாயம் இது ஜோசப் விஜய் ஒன்றும் எம.ஜி.ஆரோ , என்.டி. ஆரோ இல்லை. இந்தளவு ஓவர் கான்பிடண்ட் பேச்சு தமிழக மக்களிடம் எடுபடாது.ஆமாம் எந்ந தகிரியத்தில் விஜய், தான் ஆட்சிக்கு வருவோம்னு நம்புகிறார்??? "" இங்கி, பிங்கி, பாங்கி போட்டு விஜய் தேர்ந்தெடுத்த கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள்- மற்ற கட்சிகளின் தலைவர்கள் அவர்களது கொள்கைகளை படித்து அறிந்து புரிந்து கொள்ளவே நேரம் போதாது. அவைகளை வைத்து ஜோசப் விஜய் அரசியல் பண்ணி நல்ல ஆட்கள் தேடி, தேர்தலில் ஆட்சியை பிடித்து பறகு


பாலாஜி
செப் 22, 2025 09:25

மக்களின் கருத்தை எந்த கட்சி தலைவரும் அறிய முடியாது ஈபிஎஸ்.


pakalavan
செப் 22, 2025 00:57

அதிமுக இப்போது சாதி கட்சியாக மாறிவிட்டது


கல்யாணராமன்
செப் 22, 2025 00:24

விஜய்யை தீவிரமாக விமர்சனம் செய்யாமல் இருக்க காரணம் எடப்பாடி தேர்தல் நெருங்கும் சமயம் பாஜகவை வெளியே அனுப்பிவிட்டு விஜையுடன் கூட்டணி வைத்துகொள்வார் அதுதான் அவர் கடைபிடித்து வரும் விசுவாசம்.


BHARATH
செப் 23, 2025 19:30

அதுக்கு 100% வாய்ப்பு இல்லை. தீ ய மு க பி டீம் தான் தீய வெக்க கட்சி.


சாமானியன்
செப் 21, 2025 22:14

மாறன் சகோதரர்கள் தங்களது பிரச்னைகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டனர். அதேபோல அதிமுக கருத்து வேறுபாடுகளையும் ஒரு ஒப்பந்தம் மூலமாக சரி செய்யனும். யாருக்கு அதிகபட்சம் வோட்டுக்கள் கிடைக்கின்றதோ அவரே முதல்வர். எல்லாரும் வேலையை கவனியுங்க. ஓடுங்க தொகுதி பக்கம்.


Oviya Vijay
செப் 21, 2025 22:02

மக்களின் மனதில் அதிமுக பாஜக இல்லவே இல்லையே ஐயா... எப்படியும் தேர்தல் முடிவுகள் வந்த பின் உங்களைக் கட்சியை விட்டுத் துரத்திவிட்டு, உங்களிடமிருந்து அதிமுகவை மற்ற நிர்வாகிகள் கைப்பற்றி விடுவார்கள்... ஆகையால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் உங்களுடைய ஓய்வுக்காலத்தை எவ்வாறு கழிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து விட்டீர்களா...??? ஒருவேளை நம் அண்ணாமலை ஆரம்பிக்கப் போகும் பால்பண்ணையில் வேலைக்கு சேரப் போகிறீர்களோ... அவருடைய பிசினஸ் பார்ட்னராக இருப்பதற்கு நீங்கள் தகுதி படைத்தவர் தான்... எதற்கும் இப்போதே அந்த வேலைக்கு ஒரு துண்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள்... இல்லையென்றால் அதுவும் கைவிட்டுப் போய்விடும்... பார்த்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள்... ஒரே ஒரு நல்ல விஷயம். தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் சரித்திரத்தில் இடம்பெறும்... அதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது... ஆனால் இனி உங்கள் பெயர் அந்த பட்டியலில் மீண்டும் இடம்பெறாது. அதை மட்டும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்...


GMM
செப் 21, 2025 21:44

ஸ்டாலின், விஜய் இடையே போட்டியாம். விஜய் ஒரு ஓட்டு பிரிப்பு கட்சி. ரசிகர்கள் கூடுவர். வாக்காளர்கள் கூடவில்லை. தேர்தல் முதலீடு செய்து வருகிறார். எடப்பாடி இது போல் சுருக்கமாக பேச வேண்டும். எடப்பாடிக்கு வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்து வருவது திமுக மீது மக்கள் வெறுப்பின் அடையாளம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் நிகழ்ந்தால், பொது மக்கள் அதிகம் பிஜேபி அண்ணா திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடும். வெற்றி வாய்ப்பு கூடும்


Haja Kuthubdeen
செப் 21, 2025 21:34

விஜய்க்கு கூடியது காக்கா கூட்டம்னும் சொல்லவில்லை..அவரை தாக்கி திட்டவும் இல்லை..அது விஜயின் கருத்துனு எவ்வளவு நாகரிகமா பேசியுள்ளார்..அதான் தலைமை பண்பு...


சமீபத்திய செய்தி