உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?

ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மதுரை வக்கீல் வாஞ்சிநாதன், ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, சுப்ரீம் கோா்ட் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது.கடிதம் எழுதிய வக்கீல் மீது, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ராஜசேகர் அடங்கிய பெஞ்ச், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை கைவிடக்கோரி, வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர்.இது குறித்து, கோவை ரேஸ்கோர்ஸ் வக்கீல் ஆர்.சண்முகம் கூறியதாவது: நீதிபதி சுவாமிநாதன் எளிமையானவர். பாரபட்சமற்ற தீர்ப்புகளை வழங்கியவர். அவரது தீர்ப்புகள் ஜாதி, மதங்களை கடந்து ஏழை எளியவர்களுக்கு நீதி தரும் விதத்தில் இருக்கின்றன. ஒரு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறதோ, அவர் நீதிபதியை கடவுளாக நினைப்பதும், யாருக்கு சாதகமாக இல்லையோ, அவர் நீதிபதியை கல் என்று நினைப்பதும் இயல்பு. நீதிபதிகள் அதை பற்றி கவலைப்படாமல் மிகுந்த பணிச்சுமையுடன் பணியாற்றுகிறார்கள்.எந்த வழக்கும் வக்கீலுக்கும், நீதிபதிக்கும் இடையிலான போட்டி அல்ல. இருவரும் சேர்ந்து நீதிபரிபாலனத்தை நிலைநாட்ட, அவரவர் பங்கை அளிக்கிறார்கள். தனது வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டாம் என்று வக்கீலுக்கு தோன்றினால், வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றுமாறு கேட்க சட்டத்தில் இடம் உள்ளது.ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வக்கீல், நீதிபதி மேல் ஒரு புகார் மனுவை, மேல்நீதிபதிக்கு அனுப்பினால், நிச்சயமாக நீதி பரிபாலனத்தில் வக்கீல் தலையிட்டதாக தான் அர்த்தம். ஒவ்வொரு வக்கீலும், நீதிபதி மீது புகார் அளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நீதி பரிபாலனம் எப்படி நடைபெறும்? இவ்வாறு, சண்முகம் கூறினார்.

'அரசியல் அமைப்பு சட்டத்தையே விமர்சிப்பதற்கு சமம்'

கவுசல்யா பரமேஸ்வரன்

நீதிமன்றம் நடுநிலையாக செயல்படும் என்பது தான் பொதுமக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒரு நாளும் பொய்த்துப் போகாது. ஒரு நீதிபதியை விமர்சிப்பது, அரசியல் அமைப்பு சட்டத்தையே விமர்சிப்பதற்கு சமம். இந்திய அரசியலமைப்பு சட்டம், எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி தீர்ப்பு வழங்க முடியாது. இது தவறும் எனும் போது, அரசியலமைப்பு சட்டத்தை தவறு என்று சொல்வதற்கு சமம்.

பார்த்திபன்

நீதிபதி மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. நீதிபதியை விமர்சிப்பது, நீதிமன்றத்தையே விமர்சிப்பது போலாகும். நீதிபதி தன்னிச்சையாக தீர்ப்பு வழங்க முடியாது. சட்டத்தின் அடிப்படையில் தான் செயல்பட முடியும்.ஒரு தீர்ப்பு சரியாக இல்லை என்று ஒருவர் நினைத்தால், மேல் முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் வரை செல்ல அனுமதி இருக்கிறது. அதிலும் தீர்ப்பு சரியாக இல்லை என்றால், அவர்களையும் விமர்சிப்பார்களா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ராஜேந்திரன்

தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம்; அது மட்டுமல்ல, எங்களையும் விமர்சிக்கலாம் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். அவர், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருடங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதிபதிகள் ஒன்றும் கடவுள் அல்ல; நீதியே கடவுள் என்று கூறிய இவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு ஏற்க முடியாத ஒன்று.

ஹரிஹரன்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேர்மையான நீதிபதி என்பதில் சந்தேகம் இல்லை. இவர் ஒரு சாராருக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டில், எனக்கு தெரிந்தவரை உண்மையில்லை. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர் இவர்.தற்போது இவருக்கு எதிராக அவதுாறு கிளப்புவது சரியில்லை. இவர் மத ரீதியாக, சாதி ரீதியாக தீர்ப்பு வழங்கி வருகிறார் என்பது ஏற்புடையதல்ல. பாகுபாடு இன்றி தான் தீர்ப்பு வழங்கிவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

சிட்டுக்குருவி
ஜூலை 31, 2025 01:36

இப்போதுதான் புரிகிறது நீதிபதி மீது ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று. இதெல்லாம் திராவிடத்தின் கைகூலிகள் வேலை .இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சேர்ந்திருப்பதும் அவர்களின் வேலையே .ஒருநீதியையே வளைக்கும் வேளையில் திராவிடம் இறங்கியிருக்கின்றதென்றால் இது எதேச்சாரித்தின் அறிகுறியே .அவர்களுக்கு எதிராக எந்த தீர்ப்பும் யாரும் சொல்லக்கூடாது அப்படிக்கூறினால் நீதிபதிகள் மிரட்டலுக்கு ஆளாவார்கள் என்பதுதான். பல பிழைகள் உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தியதே அவர்களின் அச்சுறுத்தல்களுக்கு காரணம் .இது மிகவும் மக்களுக்கு ஒரு விபரீதமான உதாரணம் என்பது அறியப்படவேண்டும் .ஆரம்பத்திலேயே கில்லி எரிய முற்படவேண்டும். இதை உயர்நீதிமன்றத்தின் சென்னை கிளை தாமாக முன்வந்து contempt of court act 1971 படி விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். இல்லையென்றால் இது போன்ற நிகழ்வு ஆலமரமாக வளர வாய்ப்புண்டு .இதில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கவேண்டும் .


Arumugam Elangovan
ஜூலை 30, 2025 20:38

நீதியரசர் சுவாமிநாதன் பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளலாம் என்று தீர்ப்பு வழங்கியவர். இது சரியா? அறிவியல் அறிவு உடையவர்கள் ஏற்பார்களா? இல்லை அவரே பிறர் சாப்பிட்ட இலையில் உருளுவாரா? வாஞ்சிநாதன் புகார் தவறென்றால் இவரே விசாரிப்பது எப்படி சரி.? ஒன்னு சரி.? one cant be a judge for his own case அவர் அறியாததா? குடும்ப வழக்குரைஞர் உறவினர் ஆஜராகும் வழக்குகளில் பல்வேறு நீதியரசர்கள் வேறு அமர்வுக்கு வழக்குகளை மாற்றிய எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் கூட உண்டு. நீதியரசர்கள் இயல்பான மனிதர்களே.சில நீதியரசர்கள் அரசியல் மற்றும் சிக்கலான வழக்குகளில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறனர். இது அறிவுடைமை அன்று. ஒரு மருத்துவர் இது போன்று கூற முடியுமா? நீதிமன்றம் சமுதாய மருத்துவமனை தானே உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தவறென்றால் என்ன நடவடிக்கை? எதுவும் இல்லை. யாருக்கும் நீதியரசர் குமாரசாமி நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.


Nagarajan S
ஜூலை 29, 2025 20:15

இந்த ஓட்டுக்காக, தேர்தலுக்கு முன்பு இந்துக்களை இழிவுபடுத்துவதும் பிராமணர்களை அவதூறாக பேசுவதும் தொடர்கின்றது.


Nagarajan S
ஜூலை 29, 2025 20:11

திக,திமுக இடது சாரிகள் இவர்களின் அட்டகாசங்களுக்கு எதிராக, நீதிபதி ஸ்வாமிநாதன் தீர்ப்பு வழங்குகிறார். அது பிடிக்காமல் இந்த கும்பல்களும் அவர்களின் ஆதரவு வக்கீல்களும் வேண்டுமென்றே நீதிபதி மீது பழி சுமத்துகிறார்கள். இதற்கு இந்த கும்பல்களின் ஆதரவு முன்னாள் நீதிபதிகளின் சப்போர்ட் வேறு.


தாமரை மலர்கிறது
ஜூலை 29, 2025 20:03

நேர்மை, நியாயம், நாணயம், தர்மத்திற்கு பெயர் போனவர் ஜிஆர் ஸ்வாமிநாதன். இவருக்கு பாரத் ரத்னா கொடுக்கலாம். கழுதைகள் கனைப்பதால், சிங்கம் அசராது. தலை நிமிர்த்தினால், பின்னங்கால் புடரியில் பட ஓடுவார்கள்.


Sundaresan S
ஜூலை 29, 2025 19:51

வழக்காடுவோர் வழக்குரைஞர் வாதிடும் வழக்குகளில் நீதியரசர்கள் பல்வித தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவது கவலைக்குரியதாகும். பார் அசோசியேஷன் நெறிமுறைகளை பேணுவது அவசியம்.


Sridhar
ஜூலை 29, 2025 17:05

அந்த கோழை வக்கீல் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார் அனுப்பியதை பற்றி நீதிபதி கேட்கவில்லை. அதை சமூக வலைத்தளங்களில் கசியவிட்டதோடு மட்டுமில்லாமல் நிறைய விடீயோவிலும் அதுசம்பந்தமாக அந்த கோழை பேசியிருக்கிறான். நீதிபதி கேட்டதெல்லாம் அந்த கருத்தில் உறுதியாக இருக்கிறாயா என்பதுமட்டும்தான். அதைக்கூட உறுதியாக சொல்ல வக்கில்லாத அந்த கோழை, அவனுக்கு ஆதரவாக ஒரு பெரும் கூட்டம் இப்படிப்பட்ட ஆட்களா முன்னாட்களில் நீதித்துறையில் இருந்தார்கள் என்று நம்மையெல்லாம் அதிரவைக்கும் விதத்தில் செயல்பாடுகள் ஒரு கேசில் தடைவிதித்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பதை காண்பிக்க அறிவிலித்தனமாக திருட்டு கும்பல் செய்கிற விஷயம் இது. இதற்கெல்லாம் அந்த நீதிபதி அசரமாட்டார். அவர் விதித்த தடையை உச்ச நீதிமன்றமே நிறுத்தவில்லை. மாறாக ஜனாதிபதியின் உத்தரவை ஏற்று அவர்களுடைய தீர்ப்பையே மறுபரிசீலனை செய்ய ஆவண செய்துகொண்டிருக்கிறார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற எரிச்சலில் இப்போது திருட்டு கும்பல் புழுங்குவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது


Tamil Selvan
ஜூலை 29, 2025 16:56

நீதிபதி கடவுள் கிடையாது எத்தனையோ நீதிபதிகள் பணம் பொருள் பதவிக்கு ஆசைப்பட்டு தீர்ப்பை விற்று விடுகிறார்கள் அதனால் அவர் ஒன்றும் நல்லவராக எனக்கு தோன்றவில்லை அதேசமயம் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது


skrisnagmailcom
ஜூலை 29, 2025 16:08

மலிவான சுய விளம்பரத்துக்கான பல வழிகளில் இதுவும் ஒரு வழி. வாஞ்சிநாதன் தன்னுடைய மனதாங்கலை சம்பந்தபட்ட நீதிபதியிடமே கேட்டிருக்கலாம். ‌உச்சநீதி மன்றத்துக்கு புகாரை அனுப்பி விட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்புவது அயோக்கியதனம்


Balaa
ஜூலை 29, 2025 15:56

இதே குற்றச்சாட்டை அரிபரந்தாமன் மீது அந்த ஆள் பணியில் இருக்கும் பொழுது யாராவது சுமத்தியிருந்தால் , வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இதே திக வக்கீல்கள் கூவியிருப்பானுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை