உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்ன நடவடிக்கை எடுத்தாலும் மகிழ்ச்சி தான்: வேல்முருகன் பேட்டி

என்ன நடவடிக்கை எடுத்தாலும் மகிழ்ச்சி தான்: வேல்முருகன் பேட்டி

சென்னை : '' என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்,'' என தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் கூறினார்.ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும். மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய படி பேச வாய்ப்பு கேட்டு, கை நீட்டிய படி அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் நடந்து வந்தார்.இதனையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,'சட்டசபையில் அதிகபிரசிங்கித்தனமாக நடந்து கொண்ட வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து வேல்முருகனுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.இந்த நிகழ்வு குறித்து சட்டசபைக்கு வெளியே வேல்முருகன் கூறியதாவது:கீழ்த்தரமான என்ற வார்த்தையை முதல்வர் பயன்படுத்தவில்லை. சேகர்பாபு பயன்படுத்தியதால் அதனை அப்படியே முதலில் பயன்படுத்தி உள்ளார். தாய்மொழி குறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் விவாதம் நடந்தது. அதில் எனது விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கேட்டேன். இந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. சபாநாயகர் முன்பு சென்று வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டேன். அதற்குள் சேகர்பாபு இது போன்ற வார்த்தைகளை பேசினார். அதிமுகவினர் எழுந்து வேல்முருகன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார்கள். தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்தவர்களை காவல்துறையில் நேரடி எஸ்.ஐ., பதவிக்கு எடுக்காத நிலை 10 ஆண்டுகள் இருந்தது.பாதிக்கப்பட்ட போலீசார் என்னை சந்தித்து, எழுத்து தேர்வு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம் ஆனால் தமிழ் வழியில் படித்ததால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேரடி எஸ்.ஐ., பதவிக்கு எடுக்க மறுக்கிறார்கள் என தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் என் சொந்த செலவில் வழக்கு தொடர்ந்து பணியில் சேர்க்க உத்தரவு பெற்று தந்தது நான்.அதிமுக ஆட்சியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது உண்மை . ஆனால் இதனை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சேகர்பாபு எதிர்க்கிறார். அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். இது விந்தையாக உள்ளது. நான் மக்களின் குரலாக ஒலிப்பது சில அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் முதல்வரிடம் தவறாக சொல்கிறார்கள். ஆனால் தவறான தகவலை முதல்வரும் விசாரிக்கவில்லை. இதற்கு முன்னரும் சபைக்கு நடுவே நின்றுள்ளேன். அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டசபை மரபுக்கு மாறாகவும், சட்டத்துக்கு புறம்பாக எந்த கருத்தையும் சொல்லவில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். கொறடா உத்தரவு இருந்தாலும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சட்டரீதியாக எதிர்கொள்வேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sampath kumar
மார் 21, 2025 08:18

அப்போ சட்டைய கிழித்து கொண்டு வந்தது? ஓஓஒ அது அவியலா?


PARTHASARATHI J S
மார் 21, 2025 05:06

வேல்முருகனை சட்டமன்ற உறுப்பினராக்கி அந்த தொகுதி மக்கள் மாபெரும் தவறு இழைத்து விட்டார்கள்.


Kasimani Baskaran
மார் 21, 2025 03:58

தமிழகத்தில் மிக மிக மகிழ்ச்சியான எம்எல்ஏ என்ற பட்டம் விரைவில் அப்பாவு இவருக்கு வழங்குவார்.


எவர்கிங்
மார் 21, 2025 02:28

டோல் கேட்டில் பிச்சை எடுப்பவனுக்கு வீண் விளம்மரம்


DINAKARAN S
மார் 21, 2025 00:56

வெக்கமே இல்லையா பாஸ் ...உங்க முதலாளி .. உங்கள கண்டிக்கலாம் ...


Easwar Kamal
மார் 21, 2025 00:11

வேல்முருக உங்களுக்கு தெரிஞ்சா அப்பன் மவன் ollal ஏதாவது எடுத்து விடுங்க இவனுங்க டர் aiyruvanunga அவ்வளவு வண்டி வண்டியா ollal பண்ணி வச்சு இருக்கானுவ. உங்களை கேவலமா பேசின அந்த தெலுங்கு நொண்டி அமைச்சர் ஒரு கை பக்கமா விட கூடாது


A Viswanathan
மார் 21, 2025 07:26

இவனை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டால் ஆணவம் அடங்கிவிடும்.


Anbuselvan
மார் 20, 2025 23:43

நண்பர்கள் பகைவர்கள் ஆகிறார்கள் - டாஸ்மாக் ஊழலின் அறிகுறியோ ?


Oru Indiyan
மார் 20, 2025 23:40

சாப்பாட்டில் உப்பு இல்லை


முக்கிய வீடியோ