மின் ஊழியர்களுக்கு போனஸ் எப்போது
சென்னை:மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:மின் வாரியத்தில் 82,000 பேர் பணிபுரியும் நிலையில் 'கிளாஸ் 3, 4' பிரிவுகளில் இடம்பெறும் 46,000 ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். போனஸ் அறிவிப்பை அக்.10ல் அரசு வெளியிட்டது. இதுவரை போனஸ் தொகை வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் போனஸ் தொகையை விரைந்து பட்டுவாடா செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வையும் தாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.