உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொந்த காலில் நிற்பது எப்போது?: செல்வபெருந்தகை பேச்சு: திமுக அதிர்ச்சி

சொந்த காலில் நிற்பது எப்போது?: செல்வபெருந்தகை பேச்சு: திமுக அதிர்ச்சி

சென்னை: 'எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?' என காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சால் கூட்டணியில் இருக்கும் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fbc6wpqb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். எந்த திசையில் செல்ல போகிறோம் என்பதை தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். காங்., தனித்து போட்டியிடுவது குற்றம் அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு உண்மை, உழைப்பு, ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு 20 சதவீத ஓட்டுகளை பெற்றோம். கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் கால்தடம் இல்லாத கிராமங்களே இல்லாத அளவிற்கு யாத்திரை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சால் கூட்டணியில் உள்ள திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்., திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

karutthu
ஜூன் 14, 2024 15:51

அந்த மாதிரி காங்கிரஸ் எல்லாம் இனி வராது .ஏப்போ காமராஜரை தோற்கடிச்சாங்களோ அப்பவே காங்கிரஸ்க்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது .இனிமேல் காங்கிரஸ் ஆட்சி என்பது பகல் கனவுதான்


SUBRAMANIAN P
ஜூன் 14, 2024 13:16

திமுக கூட்டணியில் 10 சீட்டு ஜெயிச்சிட்டு லொள்ளைப்பாரு, எகத்தாளத்தைப்பாரு, நக்கலப்பாரு. பல்லபிடுங்கி எறிஞ்சிபுடுவேன். பிஜேபி யாவது தமிழ்நாட்டுல இதுவரை ஜெயிக்கலை. நீங்க 60 வருஷத்துக்கு முன்னாடியே தமிழகத்தை ஆட்சி பண்ணவங்கதானே. தனியா நிக்கவேண்டியதுதானே. இதுல பிஜேபி ய பார்த்து கேலி வேறு. வெக்கமாயில்ல..


rama adhavan
ஜூன் 13, 2024 21:26

காலும், துணிவும் இருந்தால் விக்கிரவண்டியில் கூட தனியாக இப்போதே நிற்கலாமே?


Kumar
ஜூன் 12, 2024 20:45

ஐயய்யோ கொத்தடிமைகளுக்கு என்னாச்சு


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 12, 2024 14:27

திமுகவின் முதுகில் குத்துகிறது காங்கிரஸ் ............


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 12, 2024 13:54

தமிழ் நாட்டில் காங்கிரஸ் சொந்தமாக கட்சி நடத்த முதலில் தலைவர்களும் தொண்டர்களும் உணவில் உப்பு சேர்க்க வேண்டும். இந்திரா காந்தியை அசிங்கமாக அருவருப்பாக பேசிய தலைவருடன் கூட்டணி, ராஜீவை கொலை செய்த நபருடன் கட்டிப்பிடித்து போட்டோ என எல்லாவற்றுக்கும் சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டு இருப்பதை உப்பு போட்டு சோறு தின்றால் போக்கலாம். இப்போது அறிவாலயத்தில் ஒரு மூலையில் இயங்கும் கட்சி அலுவலகத்தை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு என்று தனியாக அலுவலகம் வைக்கவேண்டும்.


Narayanan
ஜூன் 12, 2024 13:30

தமிழக காங்கிரசுக்கு ஒரு தலைவிதி/ தலை எழுத்து . புதிய தலைவர்கள் வரும் போது இப்படி சொல்வார்கள் . உடனே திமுக வரை அழைத்து பேசி பெட்டி கொடுக்கும் . அடங்கிவிடுவார் தலைவர் . ஸ்டாலின் சீக்கிரம் பெட்டியை கொடுத்து வாயை அடையுங்கள்.


Indian
ஜூன் 12, 2024 13:02

மன்னிக்கவும், உங்களின் M.P. ஐ நீக்கம் செய்து நின்று செய்து காட்டவும். சில நேரங்களில் இந்த மாதிரி சிரிப்பு சிலரால் மட்டுமே செய்யமுடியும் .


Indian
ஜூன் 12, 2024 12:55

இதை இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்துஇருந்தால் நீங்கள் யாரு என்று புரிந்துருக்கம்.


S.V.Srinivasan
ஜூன் 12, 2024 12:30

சொந்தமா கால் இருந்தா நில்லு. யாரு வேண்டாம்னாங்க. 60 வருஷமா தீம்கா முதுகில் சவாரி செஞ்சுட்டு, இப்ப சொந்த காலில் நிற்பது எப்போதுன்னு எங்ககிட்ட கேட்டா?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை