கருப்புக்கொடி எங்கே? கிண்டலடித்த சிவகுமார்
சென்னை: ''கருப்புக்கொடி எங்கே?'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கிண்டலடித்தார்.லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:'திஹார் சிறைக்கு அனுப்புவோம்' என்று பா.ஜ.,வினர் சொன்ன போது கூட நான் பயப்படவில்லை. அண்ணாமலை, கர்நாடகாவில் எங்களிடம் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். அவர் ஒரு சாதாரண நபர். எங்கள் பலம் என்னவென்று அவருக்கு தெரியும். அவர் வேலையை அவர் பார்க்கிறார்; பார்க்கட்டும்; அவருக்கு என் வாழ்த்துகள்.தமிழகம் வரும் எனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதாக, அண்ணாமலை அறிவித்ததாக செய்தி பார்த்தேன். நான் சென்னையில் தான் இருக்கிறேன். எங்கும் கருப்புக்கொடியை பார்க்கவில்லை. இன்று, தமிழகத்தை ஒட்டியுள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்கிறேன். அங்காவது, பா.ஜ.,வினர் கருப்புக் கொடி காட்டுகின்றனரா என்று பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.