அதிக மழைப்பொழிவு எங்கே?
சென்னை: தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை உள் ஒட்டிய பகுதிகளிலும், இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.இதனால், 11 மாவட்டங்களில் கனமழையும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (ஆக.,4ம் தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு வெளியாகி உள்ளது.இதன்படி மழைப்பொழிவு செமீட்டரில்ஈரோடு அரச்சலுார்- 4.5நாமக்கல் வடகரை ஆத்துார்- 4.1சிவகங்கை சாத்தரசன்கோட்டை- 3.6ஈரோடு புங்கம்பாடி -3.4ஈரோடு அவல்பூந்துறை- 3.1திருப்பூர் சேவூர்- 2.8சிவகங்கை மானாமதுரை- 2.7ராமநாதபுரம் பார்த்திபனுார் -2.6கோவை லோயர் நீராறு- 2.5ஈரோடு ஒலகடம்- 2.4செங்கல்பட்டு செம்பாக்கம்- 2.3 கரூர் மண்மங்கலம்- 2.1செங்கல்பட்டு கடப்பாக்கம்- 2.0திருச்சி முடிகண்டம் -2.0திருவள்ளூர் கருவலுார்- 2.0நாமக்கல் கொல்லிமலை -1.6பச்சைமலை- 1.6கோவை வடவள்ளி- 1.5வேலூர் காட்பாடி -1.4நாமக்கல் குமாரபாளையம்- 1.4தேனி போடிநாயக்கனுார்- 1.3மாமல்லபுரம்- 1.2 செமீ மழை பதிவாகி உள்ளது.