உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!

லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''போலீஸ் ஸ்டேஷனில் 24 பேர் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழக உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்'' என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும். இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு போலீஸ் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் போலீஸ் ஸ்டேஷனில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழக உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழக வரலாற்றில் தி.மு.க., நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Senthoora
ஜூலை 01, 2025 17:13

எதுக்கு தம்பி இதெல்லாம், இதைவைத்தே அடுத்தபடம் எடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கி, டிக்கெட்டும் பிளாக்கில் வித்து கல்லாவை நிரப்பவேண்டியது தானே, அதை விடுத்து வெள்ளையும், கருப்பும் என்று மேடைபோட்டு கூச்சல்.


angbu ganesh
ஜூலை 01, 2025 14:22

வெள்ளை அறிக்கைண்ணா வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டிருக்கும் ஒண்ணுமே எழுதாம ஜனநாயகம் பட வசனம்னு நெனச்சிட்டியோ


Rengaraj
ஜூலை 01, 2025 12:42

விஜய் இன்னும் தீவிர அரசியலில் இறங்கவில்லை. ஊர் ஊராக செல்லவில்லை. குறைந்த பட்சம் மாவட்டத்துக்கு ஒரு பொதுக்கூட்டம் போடவில்லை. தொண்டர்களை சந்திக்கவில்லை. பூத் கமிட்டி முழுவதும் அமைக்கவில்லை. வட்டம், மாவட்டம் தோறும் நிர்வாக ரீதியாக தலைவர்களை நியமிக்கவில்லை. முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று எதுவும் நடக்கவில்லை. தனியாக எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரவில்லை. கூட்டணி பற்றி எதுவும் தற்போது பேசவில்லை. களநிலவர சர்வே எடுப்பவர்கள் அவருக்கு பத்து சதவீதம், பதினைந்து சதவீதம் வோட்டு வங்கி உள்ளது என்று தெளிவாக மக்களை குழப்பி விடுகிறார்கள். இதைவைத்து ஆட்சி எது அமைந்தாலும் அவர்தான் வருங்கால முதல்வர் என்று அவரது தொண்டர்களால் மட்டுமே சொல்லப்படுகிறது. நிஜ உலகம் தெரியாமல் களநிலவரம் எதுவும் புரியாமல் கமலை நம்பி ஏமாந்த கூட்டம் போல இவரையும் நம்பி இளைஞர் கூட்டம் தனது சக்தியை வீணடித்து தங்களது எதிர்காலத்தை பாழடித்துகொண்டிருக்கிறது. எனவே திமுக போன்ற பெரிய கட்சி இவரை ஒரு பொருட்டாய் மதிக்காது. இவருக்கெல்லாம் பதில் சொல்லாது.


Senthoora
ஜூலை 01, 2025 17:14

என்ன செய்ய, சங்கிகள் கொடுத்த பைபிளை வாசிக்கணும்.


Kjp
ஜூலை 01, 2025 12:12

ஜனநாயகனே ஏன் இவ்வளவு தாமதம் எழுதிக் கொடுப்பவர் தூங்கிவிட்டாரா


Anand
ஜூலை 01, 2025 11:51

வெள்ளை அறிக்கை, அதனுடன் படிக்க ஒரு ஆளையும் கேட்பான் இந்த அறிவிளி


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 11:20

உடனடியாக வெள்ளை அறிக்கை வரவில்லையெண்றால் ..உங்களது சுறா படத்தை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள், உயிருக்கு பயந்துகொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுவார்கள் ..உயிர் பயம் தமிழ் நாட்டிற்கே இருக்கிறது. இதற்கும் அசைந்து கொடுக்கவில்லை யென்றால்.. பைரவா, லியோ, வாரிசு, புலி, வேட்டைக்காரன் போன்ற ஏவுகணைகளை செலுத்துங்கள்.. அதிலும் தப்பித்தால்.. இருக்கவே இருக்கிறது குருவி..குருவி என்ற பாலஸ்ட்டிக் மிசைலுக்கு உலகமே நடுங்குமே ...ஈரான் போன்ற நாடுகள் குருவி சீடி வைத்து உலகத்தையோ மிரட்டுகின்றன ... இஸ்ரேலை நடுங்கவைக்கும் ஷாஜகான் சீடி " உங்களிடம் இருக்கிறதே ...


பாரத புதல்வன்
ஜூலை 01, 2025 11:10

வெள்ளை அறிக்கை வெள்ளை தாளில் அவர்கள் வெளியிடுவார்கள்.. தொட்டு கொள்ள சிக்கனோடு போ.... சோசப்பு..... கிடைக்க வாய்ப்புள்ளது.


R.MURALIKRISHNAN
ஜூலை 01, 2025 10:32

எழுதி குடுக்கறவன் காய்ச்சல்ல படுத்து இப்பத்தான் டூயட்டியில் ஜாயின் பண்ணிருக்கான் போல.


பிரேம்ஜி
ஜூலை 01, 2025 10:38

நல்ல கேள்வி! இவரெல்லாம் நாட்டில் முதலமைச்சர் ஆக வேண்டும்! நடந்தாலும் நடக்கும்! மக்கள் எப்போதும் அரைவேக்காடுகளையே தலைவராக்க விரும்புகிறார்கள்!


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 11:32

RS-28 Sarmat Satan II,LGM-35 சென்டினல், Trident II D5, ,Agni-V போன்ற பலாஸ்டிக் ஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ..சுறா எந்த அவரது படத்தின் சிடியை வைத்திருக்கிறர் விஜய் ..அது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி பேரழிவு ஏற்படுத்த கூடியது ... ஜாக்கிரதை


Svs Yaadum oore
ஜூலை 01, 2025 09:41

இப்போதுதான் தூங்கி எழுந்து முழிப்பு வந்த பிறகு அறிக்கையாம் .....தொட்ட பேட்டா ரோட்டு மேலே மூட்டை பரோட்டா என்று பாட்டு பாடி நாட்டில் சமூக நீதியை வளர்த்தவரு ...


கண்ணன்,மேலூர்
ஜூலை 01, 2025 10:21

ஏன் இன்னும் ஒரு பத்து நாள் கழித்து கேட்டிருக்கலாமே இவனெல்லாம் அரசியலுக்கு வரலைன்னு எவன் அழுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை