உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டசபை தொகுதி பர்கூர் மலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு, நேரடியாகச் செல்ல பாதை இல்லாததால், கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக, 20 கிலோ மீட்டர் பயணித்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k5rmgzil&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல ஆண்டுகளாக, பொதுமக்கள் சிரமமின்றி கடந்து கிராம பகுதிக்குச் செல்ல, இந்தப் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, ரூ.78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை. மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு. நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்?ஒவ்வொரு மழைக்காலத்திலும், இது போன்ற கிராம மக்கள் அவதிப்படுவது முதல்வருக்கு தெரியாதா? சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் ரூ.78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில், சாலை வசதிகளற்ற மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Mario
அக் 23, 2025 20:05

அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


kjpkh
அக் 23, 2025 21:45

அவருடைய பதிவுக்கு பதில் சொல்ல முடிந்தால் பதில் சொல்லவும். பதில் சொல்ல தெரியவில்லை என்றால் கவுன்சிலர் ஆகு தாசில்தார் ஆகு என்றெல்லாம் சொல்லக்கூடாதுங்க. ஏன் இந்த முட்டு.


கூத்தாடி வாக்கியம்
அக் 23, 2025 18:18

இதில் காமெடி எனன்னா திராவிடியா மாடல் சொல்லிச்சு ரோட தோண்டி எடுத்து புது ரோடு போடுவோம்னு. என்னா நிறைய வீடு கோயில் எல்லாம் பள்ளத்தில் உள்ளது. இப்போ என்ன நடந்தது ரோடு தோண்டி எடுத்தானுங்க ஆனா மூடாம விட்டனுங்க


Venugopal S
அக் 23, 2025 18:08

இன்றைக்கு அட்டெண்டஸ் போட்டாச்சு, இனிமேல் போய் படுத்துத் தூங்கலாம்!


vivek
அக் 23, 2025 18:27

இன்றைக்கு வேணுவிற்கு இருநூறு வந்தாச்சு...


K.n. Dhasarathan
அக் 23, 2025 18:00

அண்ணாமலை யாரை சொல்கிறீர்கள் ?


vivek
அக் 23, 2025 18:28

அறிவிலிகள் உமக்கு புரியாது தசரதரே


RAMESH KUMAR R V
அக் 23, 2025 17:58

தமிழக விடியலுக்கு அண்ணாமலையால் மட்டுமே முடியும். வருங்காலம் அண்ணாமலைக்கே.


vbs manian
அக் 23, 2025 17:05

தமிழக மக்களின் சகிப்பு தன்மைக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.


pakalavan
அக் 23, 2025 17:43

அப்ப இந்திய மக்கள் 12 வருசமா சகிப்புதன்மையோட இருந்ததுக்கு எத்தன நோபல்பரிச கொடுத்தாங்க?


வாய்மையே வெல்லும்
அக் 23, 2025 19:53

பகவலனுக்கு மூளை முற்றிழும் கோணல் என்பது நிரூபணம் ஆயிட்டு


kjpkh
அக் 23, 2025 21:48

காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் எவ்வளவு சகிப்புத்தன்மை எப்படி இருந்தார்கள் தெரியுமா.


N S
அக் 23, 2025 17:04

"சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் ரூ.78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்." இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், துபாய், என பன்னாட்டு முதலீடுகள் சாலை மேம்பாட்டு திட்டத்தில் "சாலை வழியாக" சென்று கொண்டுவரப்பட்டு, திராவிட சாலைகள் மின்னொளியில் பிரகாசிப்பது தெரியவில்லையா?


Mr Krish Tamilnadu
அக் 23, 2025 17:04

வெளிநாடுகளில் எப்போது மழைகாலமோ அப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுங்கள். அங்கு மழைநீர் வடிகால் எப்படி வேலை செய்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவும், ஆப்பிரிக்கா கண்டமும் தான் உலகிலேயே வெப்ப மண்டலம். இங்கு மழை குறைவு தான். இதற்கே இப்படி.


pakalavan
அக் 23, 2025 17:47

போனமாசம் மோடி குஐராத்துக்கு போனப்ப குன்டும் குழியுமா இருந்த சாலைல மழை நீர் தேங்கி இருந்த ரோட்ல போனத பாஐகா காரனுங்க மறந்துட்டீங்களா ? இந்தியாவில இருக்குற எல்லா மாநிலத்திலும் தலைநகரத்தில் மழை வந்தா ஒரு நாளைக்கு சிரம மாதான் இருக்கும், குடிஇருப்புகள் அதிகமா இருப்பது்காரனம்்


vbs manian
அக் 23, 2025 17:03

இலவச பூதம் எல்லாவற்றையும் விழுங்கி கொண்டிருக்கிறது.


N S
அக் 23, 2025 16:59

"கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, ரூ.78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை." ஆனால், போகும் இடம் எல்லாம் மக்கள் "அப்பா, அப்பா" என்று அன்போடு அழைத்து திராவிட சாலைகளை மெச்சுகிறார்கள். காணும் இடம் எல்லாம் மக்கள் சாலையில் நிற்காமல் சகதியிலா நிற்கிறார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை