உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆன்லைனில் யார் பதிவு செய்யலாம்?

 ஆன்லைனில் யார் பதிவு செய்யலாம்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், 2002, 2005ம் ஆண்டு நடந்த தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஆன்லைன் வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது, மொபைல் எண்ணுக்கு வரும், ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின், அந்த பக்கத்தில் காட்டப்படும், 'Fill Enumeration Form' என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள் நுழைந்த பின், அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின், இணைய பக்கம் 'e-sign' பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்ததும், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி