உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கி யார், யாரிடம் இருக்கிறது? தேர்தல் வருவதால் கணக்கெடுப்பு

துப்பாக்கி யார், யாரிடம் இருக்கிறது? தேர்தல் வருவதால் கணக்கெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, முன்னாள் படைவீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் துப்பாக்கி வைத்திருப்போரின் தகவல்களை, போலீசார் திரட்டி வருகின்றனர்.லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் போலீசாரும் இறங்கி விட்டனர்.முதல் கட்டமாக முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரின் தகவல்களை திரட்டி வருகின்றனர். அதேபோல், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்போர் குறித்த தகவல்களையும், திரட்டி வருகின்றனர்.போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆயுதங்கள் வைத்திருப்போர், அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஒரு சிலர் இதற்காக விண்ணப்பித்திருப்பர். போலீஸ் பதிவேடுகளின்படி, அவரது லைசென்ஸ் காலாவதியானதாக கருதப்படும்.இதன் அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதை தவிர்க்கவே, முன்கூட்டியே தகவல் சேகரிக்கப்படுகிறது. உரிமம் புதுப்பிக்க கோரி, அதன் உரிமையாளர் விண்ணப்பித்திருந்தால், அதுகுறித்த தகவல்களும் சேகரித்து வைக்கப்படும்.முன்னாள் படைவீரர்கள், ஓய்வு பெற்ற போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதேபோல், பிரச்னைக்குரிய பகுதிகள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்