உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஞானசேகரன் போன் பேசியவர்களின் பட்டியலில் யார் யார்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

ஞானசேகரன் போன் பேசியவர்களின் பட்டியலில் யார் யார்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

மதுரை:''அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் போன் அழைப்பு விவரங்கள் என்னிடம் உள்ளன. போலீஸ் அந்த வேலையை செய்யவேண்டும் என்று காத்திருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் வெளியிடத்தான் போகிறேன்,'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மதுரை வல்லாளப்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=04mba90o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்கள் குரலை கேட்டுத்தான் மோடி முடிவெடுப்பார் என்பதற்கு, இந்த சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதே சான்று. நாங்கள் எதையும் தம்பட்டம் அடிப்பது கிடையாது. சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் போடுவது வாடிக்கை. உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தீர்மானம் போடுகின்றனர். அவர்கள் தீர்மானத்தால் திட்டம் ரத்து செய்யப்படவில்லை.மோடி தமிழக மக்கள் மீது கொண்ட அன்பால் தான் ரத்து செய்யப்பட்டது. உறுதி கூறிய 24 மணி நேரத்தில் சுரங்க ஏலத்தை ரத்து செய்தோம். மோடி என்றும் தமிழக மக்களின் பாதுகாவலராக இருப்பார். ஏலம் விடுவதற்கு முன்னதாக, 'வேண்டாம்' என்று தமிழக முதல்வர் கூறி இருந்தால் நீங்கள் எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும். முதல்வர் இந்த மண்ணில் மக்கள் மத்தியில் பச்சைப்பொய்யை சொல்லக்கூடாது.தமிழக மக்கள், 'யார் இந்த சார்' என்று கேட்டால், போலீசார், பத்திரிகையாளர்களை கூப்பிடுகின்றனர். லீக் செய்தவர் யார் என்பது தான் கேள்விகைது செய்யப்பட்ட ஞானசேகரனின் மொபைல் போன் கால் டீட்டெய்ல் ரெக்கார்டு என்னிடம் உள்ளது. அதை வெளியிடாமல் இருக்கிறேன். எடுத்து வைத்து விட்டேன். ஓராண்டு போன் அழைப்பு விவரங்கள் உள்ளன.டிச.,23ம் தேதி, 24ம் தேதி யாரிடம் பேசினார் என்றெல்லாம் விவரங்கள் இருக்கின்றன. போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். எல்லா வேலையும் அண்ணாமலை செய்ய முடியாது. 'யார் அந்த யார்' என்பதை முதலில் சொல்லுங்கள்.குறிப்பாக குற்றம் செய்த பிறகு யாரிடம் பேசினான் என்ற விவரம் உள்ளது. அது எல்லாம் ஒரு நாள் வெளியிடத்தான் போகிறேன். எஸ்.ஐ.டி., அந்த வேலையை செய்கிறதா என்று பார்க்கிறேன்.நான் எப்படி வாங்கினேனோ, அதைபோல எப்.ஐ.ஆர்., நகலை பத்திரிகையாளர்கள் வாங்கினீர்கள். அது லீக் ஆன எப்.ஐ.ஆர், சுத்தி சுத்தி வரும். லீக் செய்தவர் யார் என்பது தான் கேள்வி.இப்படித்தான் விசாரணை நடக்கும் என்றால் கால் டீட்டெய்ல் எனக்கும் வெளியிடத்தெரியும்.போலீசார், பத்திரிகை நண்பர்களை அழைத்து மிரட்டி மொபைல் போனை கொடுத்து விட்டுப்போ என்று கூறி இருக்கிறார்கள். லீக் ஆன எப்.ஐ.ஆர்., உங்கள் போனில் இருந்தால் நீங்கள் சரியாக வேலை செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் எப்படி வேலை செய்ய முடியும். லீக் ஆனது எனக்கும் வந்தது. இந்த விஷயத்தில் நாங்கள் பத்திரிகையாளர்கள் பக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக எங்கள் வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜர் ஆவார்கள். சுப்ரீம் கோர்ட் போனால் அந்த செலவையும் பா.ஜ., பார்த்துக்கொள்ளும்.எப்.ஐ.ஆர்., எப்படி உங்களுக்கு வந்தது என்று போலீஸ் பத்திரிகையாளர்களிடம் கேட்பது வெட்கக்கேடு. பாலியல் வன்கொடுமை நடந்த அண்ணா பல்கலைக்கு செல்லாத முதல்வர், வல்லாளப்பட்டிக்கு வந்தபோதே தெரிகிறது. 18 கிலோமீட்டர் ஒரு லட்சம் பேர் நடந்தபோது வராத முதல்வர், இப்போது வரும்போது அரசியல் தெரிகிறது.அவரை முந்தி யாரும் வந்து விடக்கூடாது என்று வருகிறார். அந்த வேகத்தை அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஏன் காட்டவில்லை.இ.சி.ஆர்., சாலையில் தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய சம்பவம் நடந்துள்ளது. பெண்கள் இடித்து விட்டு சென்றதாக சொல்கின்றனர். போலீசும் அப்படியே அறிக்கை தருகிறது.எத்தனை முறை போலீசார் பொய்யான அறிக்கை அளித்து தங்கள் முகத்தில் கரி பூசிக்கொள்வர். 'அந்தப்பெண் தவறு செய்தது, நாங்கள் என்ன செய்ய முடியும்' என்று ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களை குற்றவாளிகள் ஆக்குகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கேடு கெட்ட செயலுக்கு போலீசார் துணை போகக்கூடாது என்று போலீஸ் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் அதே இ.சி.ஆர்.,ல் என் வீடு இருக்கிறது. எங்கள் கட்சியினர் என் வீட்டு முன் கொடியேற்றினார்கள். என் வீட்டுக்கு தாம்பரம் போலீஸ் கமிஷனரே வந்தார். கொடியேற்றியதற்காக கட்சியினர் 10 பேரை கைது செய்தனர்.அதே சாலையில் 500 மீட்டர் துாரத்தில் பெண்களை துரத்திய சம்பவம் நடந்துள்ளது. இதில் ஏன் கமிஷனர் வேகம் காட்டவில்லை. ஏன் இது பற்றி முதல்வர் பேசவில்லை. இது தான் தி.மு.க., ஆட்சி.அமித் ஷா வரும்போது கருப்பு கொடி காட்டுவதாக செல்வப்பெருந்தகை கூறி இருக்கிறார். அவர்களிடம் காசு இருக்குமா என்று தெரியவில்லை. எத்தனை கலர்களில் வேண்டுமானாலும் கொடி வாங்கித்தருகிறோம். வந்து காட்டட்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

SAMANIYAN
ஜன 31, 2025 10:23

திமுக அரசிற்கு முட்டு குடுக்கும் நண்பர்களே.. சந்தோசமாக உள்ளது உங்களை எண்ணி.. நாளை உங்கள் பொண்டாட்டி அப்புறம் உங்கள் வீட்டு சிறு குழந்தைகளுக்கும் இது போல் நடக்கும்.. அப்பொழுதும் இதே போல் மூச்சு முட்ட முட்டு கொடுங்கள்.. வெக்கம் மானம் மறந்த கொத்தடிமைகள்.. நிச்சயம் அப்பொழுதும் இது போல் தான் முட்டு கொடிப்பிர்கள் ..சந்தேகம் இல்லை ..


Mohan
ஜன 31, 2025 09:58

அண்ணாமலை மொதல்ல அமித் ஷா கிட்ட அனுமதி வாங்கிட்டியா.. அந்தாளு புற வாசல் வழியா காசு வாங்கிறான் போல தெரியுதுயா நீ மெண்டல் மாதிரி கூவிக்கிட்டே இரு. உன்னால அது மட்டும் தான் முடியும்... நீ எடுத்து குடுக்குற விஷயத்தை வெச்சு அவன் காசுபாக்குறான் போல தெரியுது ...எல்லாம் நம்ம கனி அக்காவோட லீலை ...நீ என்ன முக்கினாலும் ஒன்னும் நடக்காது ...


N.Purushothaman
ஜன 31, 2025 09:09

கிட்டத்தட்ட ஒரு மாதம் உருண்டோடிய நிலையில் வழக்கு லாஜிக் எண்டு நோக்கி செல்லாமல் வேறு எந்த பக்கமோ ஓடிக்கிட்டு இருக்குன்னு அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை .....சிறப்பு விசாரணை குழுவை சில தினங்களுக்கு முன்பு நீதி மன்றம் கூட பத்திரிக்கையாளர்களை விசாரித்த வழக்கில் அறிவுறுத்தி உள்ளது .....தமிழக அரசு இதை எதையோ மிக தெளிவாக மறைக்கிறது என்பது மட்டும் உறுதி ...


K RAGHAVAN
ஜன 31, 2025 08:53

WHAT ABOUT DMK FILE 1 FILE 2 AND ALL JUST LIKE THAT THIS TOO FROM YOU HAND OVER YOUR POST TO OUR SISTER VANATHI SISTER THAT IS GOOD FOR BJP IN TAMIL NADU SIR


VENKATASUBRAMANIAN
ஜன 31, 2025 07:46

எல்லாம் சரிதான். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எதற்கும் இல்லை. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இரண்டு அமைச்சர்கள் உள்ளே போயிருந்தால் மக்கள் நம்புவார்கள். மத்திய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Velan Iyengaar
ஜன 31, 2025 07:33

இவனோட தொலைபேசி அழைப்புகள் பட்டியலை தோண்டினால் தெரியும் இவனோட வண்டவாளம் ...


mani
ஜன 31, 2025 11:28

ஆஸ்திரேலியாவில் கள்ள குடியேறிகள் அதிகம்..


Arun, Chennai
ஜன 31, 2025 07:19

I wish Governor's rule in TN, imprison all decoits/lofers etc., implement 356 article as there is no safety for women of all ages... Conduct election in 2026... This will drastically bring down crimes in TN . One year would be at least a breathing time for voters to decide on the proper leader and enjoy freedom for at least a year from these DMK pressititues/media/hooligan politicians


அருண், சென்னை
ஜன 31, 2025 07:13

Article 356 வேண்டும்... தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் இல்லை... கேடுகெட்ட ஆட்சி..இந்தியாவின் மொத்த "நிதியும்" திமுகவின் கருணா"நிதி" குடும்பம் அராஜகம், அட்டூழியம் மிக்க குடும்பம்...


நிக்கோல்தாம்சன்
ஜன 31, 2025 05:24

பெண்கள் வாழ தகுதியில்லாத மாநிலமாக மாற்றிவருகின்றனர் திருடர் மூர்க்க கழகத்தினர்


தாமரை மலர்கிறது
ஜன 31, 2025 01:52

மத்திய அரசு இந்த கேஸை எடுத்து நடத்துவது தான் நீதிக்கு ஒரே வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை