உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த அம்சா? பழனிசாமி பேச்சால் பரபரப்பு

யார் அந்த அம்சா? பழனிசாமி பேச்சால் பரபரப்பு

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தன் பிரசார பயணத்தின்போது, 'அம்சா' என்ற பெயரை அடிக்கடி குறிப்பிடுகிறார். யார் அந்த பெண்? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக, அவர் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் பேசிய அவர், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டு கதவை தட்டுகிறார் பழனிசாமி' என துணை முதல்வர் உதயநிதி கூறியிருந்ததற்கு பதிலளித்தார். அப்போது, 'அமித் ஷா' என்பதற்கு பதிலாக, 'அம்சா' எனக் குறிப்பிட்டார். பின்னர் சரிசெய்து கொண்டு, அமித் ஷா என்றார். அதேபோலவே, தான் பிரசாரம் மேற்கொள்ளும் போது, அமித் ஷா பெயரை குறிப்பிடும் இடங்களில் அவர் அம்சா என்றே குறிப்பிடுகிறார். பேச்சுவாக்கில், அமித் ஷாவை அம்சா என அவர் குறிப்பிடுவது தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஷாவை, 'அம்சா' என குறிப்பிட்டு பழனிசாமி பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை தி.மு.க.,வின் ஐ.டி., அணியினர் வேகமாக பரவ விடுவதோடு, 'யார் அந்த அம்சா?' என கேள்வி கேட்டும் வருகின்றனர். இது, அ.தி.மு.க.,வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 26, 2025 09:47

அவர் பெயர் அவ்வளவு தொந்தரவு என்றால் பேசாமல் உள்துறை அமைச்சர் என்று குறிப்பிடலாம்.... தேவையில்லாத சர்ச்சை எதற்கு???


புதிய வீடியோ