உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!

யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் தவிர மற்றொரு நபருக்கு தொடர்பில்லை' என போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஞானசேகரன். இந்த சம்பவத்தில் மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி பேசியதாக கூறப்பட்டதால் இந்த விவகாரம் பெரும் பேசு பொருளானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mjf3nj77&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்துக்கும், சார் என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. யார் அந்த சார்? என்பது தெரிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இது தொடர்பாக விசாரிக்க நீதிமன்றம் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது.இந்நிலையில், சிறப்பு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் யார் அந்த சார்? என்பது குறித்து புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன் விபரம் பின்வருமாறு: பாதிக்கப்பட்ட 19 வயது மாணவியும் அவரது ஆண் நண்பரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கோட்டூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 37 வயதான ஞானசேகரன், அடையாறு பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் பிரியாணி கடையை நடத்தி வந்தார். அவர் ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்.டிசம்பர் 23ம் தேதி, மாலை 7.10 மணிக்கு, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு தொப்பியை அணிந்து முகத்தை மறைத்து, ஞானசேகரன் நுழைந்தார். வளாகத்தில் தான் இருப்பதற்கான எந்த ஆதாரமோ அல்லது தடயமோ இல்லை என்பதை உறுதிப்படுத்த தனது மொபைல் போனை 'ஏரோபிளேன் மோடில்' போட்டுள்ளார். இரவு 7.45 மணியளவில், ஞானசேகரன் பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது நண்பரும் ஒரு கட்டடத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் கண்டார். முதலில், அவர் நண்பரின் தலையில் அடித்து, மாணவியின் கல்லூரி அடையாள அட்டையைப் பறித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது நண்பரையும், மொபைல்போனில் படம்பிடித்த வீடியோவை டீன், வார்டன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாக மிரட்டினார். இருவரும், ஞானசேகரனிடம் தங்களை விடுவிக்குமாறு கெஞ்சினார்கள். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியை காப்பாற்றுவதாகக் கூறி, அவரை அதே இடத்தில் இருக்கச் சொல்லி, அவருடைய நண்பரை அழைத்துச் சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பல்கலையில் தனக்கு அதிகாரம் உள்ளது என்பதை காண்பிப்பதற்காக, மாணவியை அச்சுறுத்துவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் 'சார்' என அழைத்து ஒரு நபரிடம் பேசுவது போல் நடித்துள்ளார். குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் தனியாக செயல்பட்டு தவறு செய்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: குற்றவாளி பயன்படுத்திய மொபைல் போனின் அழைப்பு பதிவு குழு ஆய்வு செய்யப்பட்டது. அவர் யாரிடமோ பேசுவது போல் நடித்து, அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காக மொபைல்போனில் 'சார்' என்று அழைத்தார். உண்மையில், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Nagarajan D
மார் 12, 2025 18:29

அந்த காலத்திலேயே ஒரு கருத்து இருந்தது ஒரு விஷயத்தை அடக்க ஒன்று ஒரு கமிட்டியை போடு... இது வரை நம் நாட்டில் எந்த கமிட்டி ஒழுங்காக விசாரணை செய்துள்ளது? கோத்ரா ரயில் எரிப்புக்கு லாலு அமைத்த பானெர்ஜீ தாக்கல் செய்த அறிக்கை உள்ளிருந்தவர்கள் தங்களுக்கு தாங்களே தீயிட்டு கொளுத்திக் கொண்டார்கள் என்று... போபர்ஸ் விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை முதல் எழுத்து R என்ற ஆரம்பிக்கும் ஒருவர் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் ஆனால் அவர் இறந்துவிட்டதால் அவர் பெயரை இதிலிருந்து நீக்கிவிட்டோம். எதற்காக நமது நீதித்துறை இவ்வளவு கேவலமாக ஒரு வேலையை செய்கிறது... மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீதித்துறை எப்பொழுது மக்களுக்கு வேலை செய்யுமோ அரசியல் வியாதிகளுக்கு வேலை செய்தது போதும் ஆபிசர் எங்களுக்கும் வேலை செய்யுங்கள்.


Srinivasan Ramabhadran
மார் 12, 2025 16:57

ராமஜெயம் கொலை நடந்து சுமார் 13 வருடங்கள் முடிந்து விட்டது. கொலையுண்டவர் ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சரின் சகோதரர். அவரை கொலை செய்தவரை இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கான காரணம் ஏன் என்று தெரியவில்லை. அப்படியிருக்க இந்த வழக்கிலும் அப்படியே.


Kasimani Baskaran
மார் 12, 2025 16:31

இனி அந்த சார் யார் என்பதை வெளியிட அண்ணாமலைக்கு தடையில்லை.


Sridhar
மார் 12, 2025 15:15

அப்போ முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்க பாக்கறானுங்க. இதிலேந்து தெளிவா தெரியுது அந்த "சார்" சாதாரண அமைச்சர் இல்ல. அதுக்கும் மேல. சூப்பர்னு வச்சுக்குவோமே. மத்திய அரசு சவுக்க எடுக்கலேன்னா எல்லாரும் தப்பிச்சிருவானுங்க.


Karthik
மார் 12, 2025 22:05

ஒருவேளை அப்படி நடந்தால் டமீலக மக்களை திசை திருப்ப அரசியல் ஆயுதமாக "" நீ ஒன்றிய அரசு, நான் ஒன்றாத அரசு, நீ இந்திகாரன், நான் தமிழன், நீ இந்தி நாட்டுக்காரன், நான் தமிழ்நாட்டு காரன், இந்தி எதிர்ப்பு, இந்தி தெரியாது போடா.."" போன்ற எண்ணற்ற பிரிவினை அரசியல் ரெடி ஸ்டாக்..


Madras Madra
மார் 12, 2025 15:05

யார் அந்த சார் ? யார் அந்த சூப்பர் முதல்வர்


பாலா
மார் 12, 2025 18:14

இந்தத் திருட்டு தெலுங்கு பாலிடால் சூப்பர் முதல்வரே அந்தச் சார்சாறு


ArGu
மார் 12, 2025 14:08

மலமுன்னும் காவல்துறை எதைதின்னுதோ நீதித்துறை ????


தமிழன்
மார் 12, 2025 14:05

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?? அதுபோல யார் அந்த சார்?


Karthik
மார் 12, 2025 21:49

அந்த சார் .. ""போலி சார்"" னு கண்டுபிடிச்சுட்டாங்களாம்..


Veluvenkatesh
மார் 12, 2025 13:41

இந்த வழக்கின் முடிவு-அண்ணாமலை அவர்களின் கையில்தான் உள்ளது. அவரிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைத்து நீதியை வாழ வைக்க அவர் தனது கடமையை கண்டிப்பாக செய்வார் என்று நம்புகிறோம்.


Iniyan
மார் 12, 2025 13:10

எந்த மந்திரி எந்த சார்? தினமும் விடியா ஆட்சியில் பல பாலியல் குற்றங்கள்


अप्पावी
மார் 12, 2025 12:54

களவாணிங்களுக்கு சொல்லியா தரவேண்டும்? இவனுக்கு மாவுக் கட்டு போட்டதே இவனையும், சாரையும் காப்பாற்றதான். இப்போ புதுசா கதை. இவன் கிட்டேயும், போலீஸ் கிட்டேயும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தணும்.


சமீபத்திய செய்தி