உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரியார் நூலகத்தில் ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எழுத்தாளர் ஜெயமோகன் காட்டம்

பெரியார் நூலகத்தில் ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எழுத்தாளர் ஜெயமோகன் காட்டம்

சென்னை: கோவை பெ ரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கண்டனம் தெரிவித்தார்.அவரது அறிக்கை: கோவை பெரியார் நூலகம் எப்படிப்பட்ட மோசடியை நிகழ்த்தியுள்ளது என்று பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை காட்டுகிறது. பல கோடி ரூபாய்க்கு நூல்களை வாங்கி அடுக்கியுள்ளனர். அத்தனையும் ஏ.ஐ வைத்து உருவாக்கப்பட்ட போலிநூல்கள். முழுக்கமுழுக்க பிழையானவை. தகவல்களில் பிழை அல்ல. அத்தனைவரியும், அத்தனை செய்திகளும் பிழைகள். தமிழகத்தின் முதல்வராகக்கூட கற்பனைபெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஏ.ஐ செயலிகள் உருவாக்கியவை இவை. (இன்று ஏ.ஐ.செயலி இந்த அளவுக்கு பொய்ச்செய்திகளைச் சொல்வதில்லை) ஏ. ஐ 'ஹலூசினேட்' செய்த தகவல்கள். முற்றிலும் பிழையான மொழி. நூல்கள் பலமடங்கு விலைக்கு வாங்கி அடுக்கப்பட்டுள்ளன. பொய்யான பெயர்கள்அத்தனை நூல்களையும் உடனடியாக எரிக்கவேண்டும். அள்ளி வெளியே போடுவதே ஆபத்து. ஏனென்றால் இவை பழைய நூல்களாக உலவினால்கூட அறிவுலகுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும். இவற்றிலுள்ள அபத்தங்கள் வெவ்வேறு கட்டுரைகளாக, ஆய்வுகளாக திரும்ப நிகழும். ஏ.ஐ அவற்றை மீண்டும் எடுத்து கொடுக்கையில் அவை அதிகாரபூர்வச் செய்திகளாக ஆகிவிட்டிருக்கும். அந்த பிழைகள் பெருகிக்கொண்டே இருப்பவை. ஏ.ஐ அவற்றை பெருக்கும்போது மானுட அறிவு அதனுடன் போரிட முடியாது. பிழைகளை நீக்கவே முடியாது. அந்த நூல்களை வெளியிட்ட அகல் பதிப்பகம் என்பது பொய் விலாசம் கொண்ட பொய் நிறுவனம். அந்த பதிப்பகம் மட்டும் 1800 தலைப்புகளில் நூல்களை அச்சிட்டு அளித்துள்ளது. அவற்றை எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் பொய்யான பெயர்கள். அயோக்கியன் எவன்?இவை எல்லா நடைமுறைகளையும் பயன்படுத்தி, பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எவனெல்லாம் துணைநின்றனர்? இவர்களை கண்டுபிடித்து தண்டிப்பது நியாயமான கோரிக்கை. ஆனால் தமிழகத்தில் அதெல்லாம் நிகழவே வாய்ப்பில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இவற்றை நியாயப்படுத்தி கட்டுரைகளை எழுத ஆரம்பித்துவிடுவார்கள் கூலி அறிவுஜீவிகள். உண்மையில் இந்நூல்கள் இதேபோல அண்ணா நூலகம் போன்ற பிற நூலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் வாங்கி அடுக்கப்பட்டுள்ளனவா? அவற்றை எல்லாம் நீக்க என்னவழி? எண்ணிப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. பெரும் சூறையாடல்சென்ற நூறாண்டுகளில் தமிழ் அறிவுலகம் மீது விடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதல் இந்த ஊழல். அதிலும் ஒரு சில கோடிகளுக்காகச் செய்யப்பட்ட பெரும் சூறையாடல். இதைச் செய்தவன்களுக்கெல்லாம் படிக்கும் பிள்ளைகள் இருக்க மாட்டார்களா? தமிழர் பெருமை, தமிழ்ப்பெருமை என்றெல்லாம் நாளெல்லாம் எவரோ செவிமூட கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்ந்துள்ளது. எந்த விளைவு ஏற்படும்? எவருக்கும் எந்தக்கூச்சமும் இருக்காது. எவரும் பொருட்படுத்தப்போவதில்லை. அப்படியே கடந்துசெல்வார்கள். ஏனென்றால் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய அழிவுச்செயல்பாட்டின் ஒரு முகம்தான் இது. இவ்வாறு ஜெயமோகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

appavi
நவ 07, 2026 08:39

ஒரு அயோக்கியன் இல்லை. திட்டக்குழு , தேர்வுக்குழு, அகல் பதிப்பகம், கல்வி அமைச்சர், முதலமைச்சர் னு ஒரு பெரிய களவாணி கும்பலே இருக்கு.


Kasimani Baskaran
நவ 07, 2026 06:15

நூலகம் என்ற அமுதில் திராவிட விஷ[ம]ம் கலந்துவிட்டது. மொத்தமாக இந்த புதிய விஷ[ம]த்தை தீயிட்டு அழித்தால் தவிர இந்தப்பிரச்சினையை தீர்க்க முடியாது.


Ravi jayakumar s
நவ 07, 2026 06:12

என்றும் வாழ்க வளமுடன் தி மு க. மீண்டும் தெலுங்கன்ஆட்சி அமைக்கப்படும்.


Rajarajan
நவ 07, 2026 06:09

இதனால்தான், தமிழக அரசுப்பள்ளிகளில், சமசீர் பாடத்திட்டம் வேண்டாம், மத்திய அரசின் பாடத்திட்டம் தான் வேண்டும் என்கிறோம். இப்போது புரிகிறதா ?? இல்லையேல், தமிழக அரசு பள்ளி மாணவரின் எதிர்காலம் அதோகதி தான்.


spr
நவ 07, 2026 01:57

"அத்தனையும் ஏ.ஐ வைத்து உருவாக்கப்பட்ட போலிநூல்கள். முழுக்கமுழுக்க பிழையானவை. தகவல்களில் பிழை அல்ல. அத்தனைவரியும், அத்தனை செய்திகளும் பிழைகள். தமிழகத்தின் முதல்வராகக்கூட கற்பனைபெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஏ.ஐ செயலிகள் உருவாக்கியவை இவை. இன்று ஏ.ஐ.செயலி இந்த அளவுக்கு பொய்ச்செய்திகளைச் சொல்வதில்லை ஏ. ஐ ஹலூசினேட் செய்த தகவல்கள்." இதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். தேர்வுக்கு குழுவின் மெத்தனம். நூல்கள் பலமடங்கு விலைக்கு வாங்கி அடுக்கப்பட்டுள்ளன.ஆனால் கையழுத்துப் போட்டு ஒப்புதல் அளித்தவர் மீது முடிந்தால் வழக்குப் போடுங்கள் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டவர் முந்தைய திமுக ஆட்சியில் 2025ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். அந்த அரசாணையின்படி அமைக்கப்பட்ட நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களுக்கான பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகனே, அவர் பரிந்துரைக்காமல் எப்படி இவை நூலகத்தில் இடம் பெற்றிருக்க முடியும். நல்ல மனதுடன் திட்டம் போட்டோம் ஆனால் செயலாக்கத்தில் தவறு, எனவே எங்களைக் குறை சொல்ல வேண்டாம் - இப்படிக்கு மாஜி முதலமைச்சர் ஸ்டாலின்


jss
நவ 06, 2026 21:45

ஜெயமோகன் செய்யக்கூடிய நல்லகாரியம் பெரியார் அறிவுலகத்தை இழுத்து மூடச்சொல்வதுதான். பொய பித்தலாட்டங்களஙதிமுகவுடன் பிறந்தவை். இதை அழிப்பது கடினம்


T.Senthilsigamani
நவ 06, 2026 21:08

பெரியார் நூலகத்தில் ஊழலைச் செய்த அயோக்கியன் எவன்? எழுத்தாளர் ஜெயமோகன் காட்டம். நல்ல செய்தி .ஜெயமோகன் சார் ,சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் .இது குறித்து நான் கல்வியாளன் நான் கல்வியாளன் என கல்லூரி கல்லூரியாக சென்று உரை நிகழ்த்தி கல்லா கட்டும் திராவிட அடிமைகள் இப்போது கூட வாய் திறக்காவிட்டால் தமிழ்த்தாய் இந்த கல்விக்குருடர்களை மன்னிக்க மாட்டாள் .திராவிட மாடல் இல்லையேல் கல்வி இல்லை என திராவிட மாயையை உருவாக்கி தமிழை அவமதித்த கூட்டம் இது . தேசிய கல்வி கொள்கை அமுல்படுத்த எதிர்ப்பு ,நவோதய பள்ளிகள் திறக்க எதிர்ப்பு ,சமஸ்கிருதம் எதிர்ப்பு ,ஹிந்தி எதிர்ப்பு என மக்களை மடையர்களாக்கி ,தங்களை தமிழின காவலர்கள் என பிரகடனம் செய்த திராவிட திமுக நூலக ஊழல் மூலம் தமிழின் வளர்ச்சியை அதல பாதாளத்திற்கு தள்ளி விட்டார்கள் .ஒரு நூலகத்திற்கு 300 கோடிகள் செலவழிப்பதற்கு பதில் ,தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு தலா பத்து லட்சம் வீதம் பகிர்ந்து அளித்தால் 3000 நூலகங்கள் பயன்பட்டிருக்கும் .பல நூலகங்களில் புது நூல்கள் கிடையாது . .சரியான மின்சார வசதி கிடையாது .அப்படி செய்திருந்தால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பலனடைந்திருப்பார்கள் . இதற்க்கு முன்பும் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் 172 கோடியில் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டபோதும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் /விமர்சனங்கள் எழுந்தன .ஆனாலும் ஆட்சியாளர்கள் திருந்தவில்லை .இனி திருந்த வேண்டியது மக்கள் தான்


Abdul Rahim, karaikudi
நவ 06, 2026 19:39

அவன் இவன் என்ற ஏக வசனம் உம்மைப் போன்ற எழுத்தாளர் கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நூலகத்தின் பெயர் அது மாதிரி


Tetra
நவ 08, 2026 06:48

நூலக பெயர்காரனே அப்படித்தானே பேசுவான் பாய்


Rajasekar K
நவ 06, 2026 19:33

உண்மையில் நமது பொது நூலகங்களில் இருக்கும் புத்தக்கங்கள் எல்லாம் பெரும்பான்மை இப்படி டூபாகூர் மோசடிகளே. சோதித்து பாருங்களேன்.


R K Raman
நவ 06, 2026 18:58

விஞ்ஞான ஊழல் விஞ்ஞானத்தை வைத்து... ஆனால் இது இத்தனை நாள் எப்படி வெளியே வரவில்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை