உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி நிறுவனங்களில் யார் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?: பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை 

கல்வி நிறுவனங்களில் யார் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?: பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: 'அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, தலைமைஆசிரியர்களே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக பள்ளிகள், கல்லுா ரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று கட்டாயமாக தேசியக்கொடி ஏற்ற வேண்டும். அரசு பள்ளிகளை பொருத் தவரை ஒவ்வொரு ஆண்டும் தலைமையாசிரியர்கள் தேசியக்கொடி ஏற்றுவர். ஆனால், பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டதில் இருந்து, தேசியக்கொடியை ஏற்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் போட்டி போடுகின்றனர். இது சம்பந்தமாக பல இடங்களில் பிரச்னையும் எழுந்தது. இந்நிலையில், 'தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் மரபுகளின் படி, பள்ளிகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தலைமையாசிரியர் அல்லது முதல்வர் ஏற்ற வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் தேசிய கீதம் பாடி, மரியாதை செலுத்த வேண்டும்' என அரசு உத்தர விட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை தவறாது கடைப்பிடிக்கும்படி, அனைத்து அரசு, நகராட்சி, நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VenuKopal, S
செப் 18, 2025 06:54

கொடியேற்றும் உரிமையை மீட்டு எடுத்த கட்டுமரம், தன் கட்சிக்கு எவருக்கும் அதை விட்டு கொடுக்க வில்லை...எல்லாமே தானும் தன் குடும்பமும்...வழக்கம் போல பரம்பரை பரம்பரையாக போஸ்டர் ஓட்ட தான் உடன் பிறப்புகள் லாயக்கு போல


Natarajan Ramanathan
செப் 18, 2025 06:36

அப்படியென்றால் மதம் மாறியதால் தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி பெண் தலைமை ஆசிரியரை ஏன் இந்த அரசு இன்னும் பதவிநீக்கம் செய்யவில்லை?


Kasimani Baskaran
செப் 18, 2025 04:03

என்ன இது. தமிழனையும் தமிழையும் காத்த தீம்க்கா கொடியை ஏற்றி மரியாதை செய்வதை விட்டுவிட்டு தேசியக்கொடியையெல்லாம் ஏற்றிக்கொண்டு...


செந்தில் குமார் திருப்பூர்
செப் 18, 2025 03:01

தமிழகத்தில் பல ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகலில் தலைமை ஆசிரியர்களே இல்லை


தாமரை மலர்கிறது
செப் 18, 2025 01:44

நாட்டின் நலன் காக்கும் ஆர் எஸ் எஸ் சார்பில் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ