உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், வரும் 26ல், டில்லியில் நடக்க உள்ளது. தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார். இதையொட்டி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்படுவது வழக்கம். இந்த பட்டியலில் தன்னையும் சேர்க்க வேண்டும் என, டி.ஜி.பி., பிரமோத்குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை காரணமாக கூறி, பட்டியல் அனுப்பாமல், அரசு காலம் தாழ்த்தி வந்தது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் ஜூனியரான வெங்கட்ராமனை பொறுப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக நியமித்து உள்ளது. இதற்கிடையே, கடந்த ஆக., 29ம் தேதி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,க்கான தகுதி பட்டியலை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இப்பட்டியல், இம்மாதம், 1ம் தேதி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு போய் சேர்ந்தது. இப்பட்டியலில், தமிழக தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், போலீஸ் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் மீது, குற்ற வழக்குகள் உள்ளதா, லஞ்ச விவகாரம் உள்ளதா என்றெல்லாம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழக காவல் துறையின் புதிய தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் வரும் 26ம் தேதி, யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

duruvasar
செப் 16, 2025 08:36

Please read and try to understand the principles of our Constitution. The constitution provisions are being implemented since its inception. This constitution was drafted under the leadership of Dr.Ambefkar. The rroles of the centre and the states are clearly and explicably defined


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 08:58

அம்பேத்கர் ரூல்ஸ் எல்லாம் ஒரு ஓரமா இருக்கட்டும். இப்போ திராவிட மாடல் ஆட்சியில் நாங்கள் வைப்பதுதான் சட்டம். எதிர்த்தால் ஏதாவது டம்மி கேஸ் போட்டு அலைய விடுவோம் இல்லாவிடில் மத்திய அரசு மீது பழிபோட்டு கோட்டுக்கு போயி தடை உத்தரவு வாங்குவோம். அவனுங்க விசாரிச்சு முடியரத்துகுள்ள நாங்க செய்ய வேண்டியதை செஞ்சு முடிச்சிடுவோம். புர்தா புர்லியா?


sampath, k
செப் 16, 2025 07:57

Union Govt controlling State governments a lot of ways. State governments are powerless in many aspects


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 16, 2025 08:28

ஒன்றிய அரசு குன்றிய அரசின் ஊழல் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துவதே கிடையாது. இந்த விஷயத்தில் நம் குன்றிய அரசு தனிக்காட்டு ராஜாதான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 07:47

நான் முதலமைச்சராக இருக்கும்போது யாரை டிஜிபியாக அமர்த்துவது என்பதுவும் உரிமை, என் முடிவு. மத்திய அரசு மாநில உரிமையில் தலையிட அனுமதிக்க மாட்டோம். உடனே சட்ட மன்றதை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவோம். அவர் கையெழுத்திட மறுத்தால் வழக்கு தொடுத்து, மத்திய அரசின் செயலுக்கு தடை உத்தரவு வாங்கி, தற்போது நாங்கள் பின்வாசல் மூலம் கொண்டுவந்த டிஜிபியே தேர்தல் முடியும் வரை தொடரும்படி ஏற்பாடு செய்வோம். திராவிடமாடல் என்றால் கோர்ட் பின்னால் ஒளிந்துகொண்டு ஆட்சி நடத்துவது என்று இப்போதாவது எதிர்க்கட்சிகளுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.


Artist
செப் 16, 2025 06:57

முதல்வருக்கு பவர் இல்லையா ?


visu
செப் 16, 2025 08:00

அங்க இருந்து 3 பேர் லிஸ்ட் அனுப்புவாங்க அதிலே ஒன்னை தேர்வு செய்ய முதல்வருக்கு அதிகாரம் உண்டு


ديفيد رافائيل
செப் 16, 2025 10:43

தமிழக முதலமைச்சர் தான் மூன்று பேரை பரிந்துரை செய்தது.


முக்கிய வீடியோ