உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்

யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்

சென்னை: திறந்து வைப்பதில் என்ன பெருமை? உருவாக்குவதில்தான் பெருமை என 'பெரியார் அறிவுலகம்' என்கிற பெயரில், நுாலகம் திறப்பு விழா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பொதுப்பணித்துறையால், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் 'பெரியார் அறிவுலகம்' என்கிற பெயரில், நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது. முதல்வர் விஜய் இன்று, திறந்து வைத்து, பார்வையிடுகிறார். இந்நிலையில் நூலகம் தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஸ்டாலின் கூறியதாவது: திராவிட மாடல் அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது. யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; அப்பெருமை என்றும் திமுகவுக்கே உரித்தானது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://x.com/mkstalin/status/2110921190919520316


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

M Ramachandran
அக் 22, 2026 18:16

ஸ்டாலின் காரு திட்டமிட்டு உருவாக்குதல் அல்ல.


S.V.Srinivasan
அக் 22, 2026 08:06

அப்போ நீங்க முக்கிய மந்திரியா இருக்கும்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட எதுக்கு நீங்கள் ஓடினீர்கள்? அங்குள்ள ஒரு பொறியாளர் திறந்து வைத்தால் தண்ணீர் வெளியேறாதா.


Dum
அக் 17, 2026 22:12

இப்படி தோத்துப்போய் உளறி கொண்டிருக்கிறாயே மானிடனே


SUBBU,MADURAI
அக் 17, 2026 12:03

இன்னமும் பெரியார் அண்ணா கலைஞர் என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தால் டோப்பாவை கழற்றி விடுவார்கள் இப்போது இருக்கும்.....


V RAMASWAMY
அக் 21, 2026 09:26

எங்கெங்கெல்லாம் பெரியார் என்கிற பெயர் வருகிறதோ, அதனை வெங்காயம் என்று மாற்றிவிடலாம்.


balasubramani
அக் 17, 2026 07:08

போன் வயர் அறுந்து நாலு மாசம் ஆச்சு குமாரு


balasubramani
அக் 17, 2026 07:07

வட போச்சு குமார்


சுபாஷ்
அக் 17, 2026 07:00

கொளத்தூர் முன்னாள் எம்எல்ஏ ஏதோ திமுகவின் பணத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியது போல் உருட்டுகிறார். இது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாரித்த திட்டம், மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. இதைத் திறந்து வைத்தது இன்றைய முதல்வர். இதற்கு எதற்கு இவ்வளவு வயிற்று எரிச்சல்


பைரவன்
அக் 16, 2026 20:56

யார் தொறந்தா என்ன, திராவிஷ ரவுடிக் கும்பல் கமிஷன் எல்லாம் ரவுடித்தனம் பண்ணி கறந்தாச்சு.


V RAMASWAMY
அக் 16, 2026 19:36

வேறு பெயரிலிருந்தால் இப்படி சொல்லியிருக்கமாட்டார்


பேசும் தமிழன்
அக் 16, 2026 19:33

அதிமுக ஆட்சியில் உருவாக்கிய திட்டங்களை... நீங்கள் திறந்து வைத்த போது... இதற்கெல்லாம் காரணம் அதிமுக தான் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.... அப்போது சொல்லாமல் உங்களை யார் தடுத்தது ?


சமீபத்திய செய்தி