விஜயை தட்டி எழுப்பியது யார்? பா.ஜ., தமிழிசை கேள்வி
துாத்துக்குடி: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: தமிழகத்தில் நடந்திருக்கும் கிட்னி திருட்டு குறித்து தீர விசாரிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். மக்களின் அடிப்படை தேவைகள் எதையும் பற்றி பேசாமல், மொழி பிரச்னை குறித்து பேசி கொண்டிருக்கிறது தி.மு.க., கடந்த ஆட்சியில், ஆணவ கொலை நடந்தால், அதற்கு அரசு காரணம் என்று கூறிய கட்சிகள், தற்போது நடந்த ஆணவ கொலைக்கு ஜாதி காரணம் என கூறி வருகின்றன. தி.மு.க., தலைமை சீட் குறைத்து விடும் என்பதற்காகவே, மக்கள் பிரச்னைகளை கூட்டணி கட்சிகள் கண்டு கொள்வதில்லை. மாநில கல்வி கொள்கை வெளியிட்டுள்ள தி.மு.க., அரசு, அதில் உயர் கல்வி குறித்து எதுவும் சொல்லாதது ஏன்? ஜனநாயத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் வாய்திறந்துள்ளார். துாங்கிக் கொண்டிருந்த அவரை தட்டியெழுப்பியது யார்? இவ்வாறு அவர் கூறினார்.