உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லா தகவலும் இருக்கும் நிலையில் எதற்காக ரூ.1 கோடியில் அறக்கட்டளை?

எல்லா தகவலும் இருக்கும் நிலையில் எதற்காக ரூ.1 கோடியில் அறக்கட்டளை?

சென்னை:தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்களின் தரம் மற்றும் அவை கிடைக்கும் பகுதிகள் குறித்து மதிப்பீடு செய்ய, 1 கோடி ரூபாயில் கனிம ஆய்வு அறக்கட்டளை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், தாது மணல், கிரானைட், லிக்னைட், சிலிக்கா மணல், களிமண், கூழாங்கல் உள்ளிட்ட 21 வகை கனிமங்கள் எடுக்கப்படுகின்றன.குவாரிகள் அமைத்து, இந்த கனிமங்களை எடுக்க, கனிமவளத் துறை அனுமதி வழங்குகிறது.இதில் ஒவ்வொரு கனிமத்தின் விற்பனை மதிப்பு அடிப்படையில், அதற்கான உரிமக் கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.இந்நிலையில், கனிமங்களின் சந்தை விலை, அவை எடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் வைத்து, அதற்கு ஏற்ற வகையில் நிலத்தின் வரியை நிர்ணயிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், சுண்ணாம்புக்கல், தாது மணல், கிரானைட், லிக்னைட், சிலிக்கா மணல், களிமண், கூழாங்கல் உள்ளிட்ட 21 வகை கனிமங்களின் தரம், அவை கிடைக்கும் இடங்கள் குறித்து மதிப்பிட, கனிம ஆய்வு அறக்கட்டளை துவங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன வகை கனிமங்கள் கிடைக்கின்றன என்பது குறித்த ஆய்வு அறிக்கை, கனிமவளத் துறையிடம் உள்ளது.இதில், கனிமங்களின் அளவு மற்றும் தரம் குறித்த விபரம் அறிந்து, அதன் அடிப்படையிலேயே உரிமங்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், துறையின் பிரதான பணியை செய்ய, புதிதாக ஒரு அறக்கட்டளையை, 1 கோடி ரூபாய் செலவில் அமைப்பது தேவையா என்ற கேள்வி எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

jager hussin
செப் 12, 2025 14:46

தமிழ் மட்டுமே


Narayanaswami Ramachandran
செப் 06, 2025 13:02

ரிலையன்ஸ் லாபம் சம்பாதிக்கவும், அமெரிக்காவின் 50% வரி விதிக்கவும் மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் எத்தனை லட்சம் கோடி நஷ்டம்? இதை பற்றி பேசலாமே


ManiMurugan Murugan
செப் 05, 2025 00:06

ManiMurugan Murugan அறக்கட்டளை எதற்கு ஏற்படுத்துவார்கள் அறக்கட்டளை என்றப் பெயரில் விலை ப் பேச வா அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணிக்கு மக்கள் நல த் திட்டம் பற்றி பேச ஆள் உள்ளதோ இல்லையோ ஊழல் செய்ய திட்டம் போட பெரிய க் கூட ட மே உள்ளது


ManiMurugan Murugan
செப் 05, 2025 00:03

அறக்கட்டளை எதற்கு ஏற்படுத்துவார்கள் அறக்கட்டளை என்றப் பெயரில் விலைப் பேச வா அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணிக்கு மக்கள் நலத் திட்டம் பற்றி பேச ஆள் உள்ளதோ இல்லையோ ஊழல் செய்ய திட்டம் போட பெரிய இடமே உள்ளது


c.mohanraj raj
செப் 04, 2025 19:41

எலக்சன் வருவதற்குள் அத்தனை ரூபாயையும் எடுத்து விட வேண்டும் அதான் மாடல்


KRISHNAN R
செப் 04, 2025 10:56

ரீபொக் ஷு கூலிங் கிளாஸ் வேண்டும்


raja
செப் 04, 2025 07:11

அப்புறம் எப்படி முடியும். இப்படியெல்லாம் ஒதுக்கி தான் ...


Artist
செப் 04, 2025 07:01

லோக்கல் திராவிட தலைவர்களை கேட்டா சொல்லுவாங்க எங்கே எது கிடைக்கும் என்று


Arul Narayanan
செப் 04, 2025 09:09

அதற்கு கமிஷன் கிடைக்குமா?


Mani . V
செப் 04, 2025 05:40

இதென்னய்யா கொடுமையாக இருக்கிறுது? பொறுப்பு டிஜிபி இது சம்பந்தமாக கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள்.


Silva
செப் 04, 2025 05:15

This is called Dravidian Model


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை