உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொதுக்குழுவை துரை வைகோ புறக்கணித்தது ஏன்?

 பொதுக்குழுவை துரை வைகோ புறக்கணித்தது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்கவில்லை. 'உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திக்க, துரை வைகோ வெளியூர் சென்றதால், பங்கேற்கவில்லை' என, வைகோ தெரிவித்தார். ஆனால், தந்தை, மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான், துரை வைகோ வரவில்லை என்று கூறப்படுகிறது. ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றதால், அவர்களை ராஜினாமா செய்யும்படி வைகோ வலியுறுத்தி உள்ளார். அவர்கள், 'நாங்கள் பதவி விலக வேண்டும் என்றால், தி.மு.க., கூட்டணியில் வென்ற துரை வைகோவும், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர். மேலும், பொதுக்குழுவுக்கு வராமல், தி.மு.க., ஆதரவு நிலை எடுத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், வைகோவுக்கும், துரை வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rajarajan
ஜூன் 29, 2026 12:38

அண்ணன் மானஸ்தன். கருணாநிதியிடம் சொத்து கணக்கை காண்பிக்க தயாரானு கேட்டாரு. இப்போ இவராவே முன்வந்து தன் சொத்து கணக்கை பொதுமக்களிடம் காண்பிப்பார் பாருங்க. அவ்ளோ நல்லவரு. நம்புங்க பாஸ்.


Nesan
ஜூன் 29, 2026 12:21

கட்சிக்கும், தமிழகத்துக்கும் இந்தாளு ஒரு உதவாக்கரை. பின்னே எப்படி கட்சி காரர்கள் மதிப்பார்கள். பெட்டிக்கு தொட்டில் ஆட்டக்கூடியவர், கட்டிலுக்கு காவல் காக்கக்கூடியவர்.


Anand
ஜூன் 29, 2026 11:16

பங்கு பிரிப்பதில் ஏதாவது தகறாரா? அதுசரி,


Shekar
ஜூன் 29, 2026 10:30

தம்பி இப்பிடி வெட்கப்பட்டா எப்படி, எல்லாத்தையும் உதறினாதான் சோபா கிடைக்கும்


theruvasagan
ஜூன் 29, 2026 18:02

வெக்கமா. மானமா. கொள்கையா. அந்த பரம்பரைக்கே அது எதுவும் கிடையாதே. டீல் முடிவு பண்ணுவதில் சற்று இழுபறி. அம்புட்டுதான். ஃப்ரீயா கிடைச்சா பினாயிலை கூட குடிக்க ரெடி.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 29, 2026 10:07

20 பேர வச்சிக்கிட்டு இவனுக வர்ற வரத்து... அய்யய்யோ....


duruvasar
ஜூன் 29, 2026 09:21

டேய் டேய் இப்போதான்டா தைலாபுரம் சினிமா தியேட்டரில் "அன்பே வா " படம் பார்த்துவிட்டு வந்தோம். மறுபடியும் "சிவகாசி ஊசிவெடி " படமா . ?


வில்லிபுத்தூரான்
ஜூன் 29, 2026 09:10

இருக்கும் நாலு அல்லு சில்லறைகள் சேர்ந்தது பொதுக் குழுவா? அது பெட்டிக்குழு


Aam Aathmi (Mango Man)
ஜூன் 29, 2026 09:00

வீட்லயும் டார்ச்சர் வெளிலயும் டார்ச்சர் என்றால் மனுஷன் என்ன பண்ணுவார் ?


சந்துரு
ஜூன் 29, 2026 08:23

பெட்டி என்னிடம். ராஜினாமா கடிதம் மட்டும் உன்னிடம் என தன் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பேசி இருப்பார் வை.கோ.இதனை அவர்கள் ஏற்பார்களா?


Appan
ஜூன் 29, 2026 08:14

இவர் கட்சியில் இருப்பதோ ஒரே ஆள். இதில் பொதுக்குழு, தலைவர் .....இவர் ஸ்டாலினால் ராஜ்ய சபா எம்.பி ஆனதே தரக்குறைவானது. எதோ கடைசி காலத்தில் கொஞ்சம் பணம் பண்ணி சுகமாக வாழலாம் என்று செய்து இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை