உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்.,கள் மீது வழக்கு தொடர 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

ஐ.ஏ.எஸ்.,கள் மீது வழக்கு தொடர 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, 'டெண்டர்' முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர, மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன்' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகள் மேற்கொள்ள, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி, அரசிடம் அறிக்கை அளித்தது. அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், 'மத்திய அரசு கோரிக்கையின்படி, வழக்கு சம்பந்தமான, 12,000 பக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நவ., 7ல் அனுப்பப்பட்டுள்ளது. அதை மத்திய பணியாளர் நலத் துறை பெற்றுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது: முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர, 2024ம் ஆண்டு பிப்., மாதம் அனுமதி பெற்ற நிலையில், இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்?இந்த கால தாமதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அடுத்து தேர்தல் நெருங்கி விட்டது. ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது பொது மக்கள் விருப்பமாக உள்ளது. அதனால், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு தொடர அனுமதி கேட்க இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கமளித்து, லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும், 24க்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

jss
நவ 11, 2025 14:05

எடுத்தேன் கவிழ்தேன் என்று விட்டுவிட முடியும். சாமதான பேத தண்டத்தை பயன்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டு வரவேண்டாமா? உங்களுக்கென்ன ஆசிய சொல்லிவிடுவிர்கள். கஷ்டபடபொவது நாங்களன்றோ.


அப்பாவி
நவ 11, 2025 12:26

500 வருஷத்து கேசெல்லாம் தீர்ப்பு சொன்னதை விடவா?


ASIATIC RAMESH
நவ 11, 2025 10:05

எந்த ஒரு செயலுக்கும் காலக்கெடு இல்லாவிட்டால் அது நீதி விசாரணை மன்றமாக இருந்தாலும் இப்படித்தான் யுவர் ஆனர். உங்களைப்போன்ற நேர்மையான நீதிபதிகளால் இப்படி கேட்கத்தான் முடியும். உத்திரவு போட்டாலும் செயல்படுத்துபவர்கள் யார் கையில்... உதாரணம் ... சிறைகளுக்குள்ளேயே கொண்டாட்டங்கள்... போதைப்பொருட்கள் ... அனைத்து வகையான வசதிகள்... அதுவும் VIP குற்றவாளிகளுக்கு மட்டும் அரசு செலவில் டிவி, ஏசி போன்ற வசதிகள்... யார் அப்பன் வீட்டு பணம்? இதை சரிசெய்வது யார் ?....யார் கடமை...


D Natarajan
நவ 11, 2025 08:11

19 மாதம் ஒன்றுமே இல்லை. வழக்குகள் 20 ஆண்டுகள் நடக்கும்போது யார் கேட்பது. நீதிபதிகள் இரக்கமே இல்லாதவர்கள். அரசியல் சார்ந்த வழக்குகள் மட்டுமே நடை பெறுகிறது. மற்ற வழக்குகள் கோவிந்தா.


duruvasar
நவ 11, 2025 07:02

என்ன இருந்தாலும் நாங்க ஹி ..ஹி. ஹி எசமான் .ஹி ஹி. ஹி .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 06:17

வழக்கில் எதிரியுடன் பேரம் பேச / படிய அம்புட்டு காலமாச்சு எசமான் ........


தமிழ் மைந்தன்
நவ 11, 2025 07:18

ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க மக்கள் விரும்புகிறார்கள் எனவே ஊழல் வழக்குகளில் உடனே விசாரணை நடைபெற வேண்டும் நீதியரசர் பாஜகாவிற்கு பிரச்சாரம் செய்யலாமா?


D.Ambujavalli
நவ 11, 2025 06:01

இப்படியே மேலிட அனுமதி வாங்க, வழக்குப்பதிய, அதன் பிறகு 20 வெங்கடேஷ்கள்்தா வாங்க என்று இழுத்தடித்து அடுத்து, அதிமுக வந்தால் கேஸ்களை இழுத்து மூடி விடலாம் என்ற தந்திரம்தான் சாமானிய குடிமகனின் கேஸ், ஒரு கிராம அதிகாரி வெறும் 2000 லஞ்சம் வாங்கிய கேசையெல்லாம் படு சுறுசுறுப்பாக முடித்து கணக்கு காட்டிவிட்டு, ‘பெரிய இடத்து’ விவகாரங்களை ஆறப்போடவும் நல்ல காசு பார்க்கலாம் என்று தானே ஒத்தகைய ஊழல் வழக்குகள் நடைபெறுகின்றன ஆயிரம் ஆனந்த் வெங்கடேஷ்கள் வந்தாலும் ஒரு சிறு கல்லைக்கூட அசைக்க முடியாது


சமீபத்திய செய்தி