உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றது ஏன்?: வாலிபர் வாக்குமூலம்

கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றது ஏன்?: வாலிபர் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழி தீர்க்கும் விதமாக, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக, போலீசாரிடம் சிக்கிய வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன், 26. இவர் நேற்று முன்தினம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.முத்துச்செல்வன் அளித்த வாக்குமூலத்தில், 'துாத்துக்குடியில் இருந்து பஸ்சில் சென்னைக்கு வந்தேன். நான் புத்தகங்கள் வாயிலாக, இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழிவாங்கும் விதமாக, கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றேன்' என, கூறியுள்ளார்.போலீசார் கூறுகையில், 'முத்துசெல்வன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார். மன நலமும் பாதிக்கப்பட்டு உள்ளார். அதனால், கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அரசு மன நல மருத்துவனையில் சேர்க்க உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தமிழன்
மே 14, 2025 14:18

திமுக தேர்தல் நாடகத்தை தொடங்கிவிட்டது. இப்படி செய்தால் அனுதாப ஓட்டு கிடைக்கும் வெற்றி பெறலாம் மீண்டும் கொள்ளை அடிக்கலாம் என்று திமுக செய்த சதி வேலை தான் இது


Tetra
மே 13, 2025 19:38

தேர்தல் வரப்போகிறது‌ அல்லவா? நாடகங்கள் நடக்கும்


Kulandai kannan
மே 13, 2025 11:20

நன்றாக சோதனை செய்யுங்கள். அநேகமாக அது தயிர் தடையாக இருக்கும்.


தென்காசி ராஜா ராஜா
மே 13, 2025 10:58

உண்மையை சொன்னால்?


theruvasagan
மே 13, 2025 10:32

குடமுருட்டி குண்டுக்கே பயப்படாத அஞ்சாத சிங்கம். இதுக்கெல்லாமா பயப்படும். நெவர்.


Narayanan
மே 13, 2025 10:12

காரியத்தை சரியாக முடிக்காததால் அவரை மன நோயாளி என்று முடிவெடுத்திருப்பார்கள் போலீசார்.


Narayanan
மே 13, 2025 10:09

கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து மருத்துவர் சான்றிதழும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொல்லித்தரும் அரசாங்கத்தார் கில்லாடிகள்தான் .


sethusubramaniam
மே 13, 2025 08:49

எந்த குற்றமானாலும், மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை குத்திவிட்டால், வழக்கை மூடுவது சுலபம் என்பது போலீசுக்கு தெரியும்.


Barakat Ali
மே 13, 2025 08:39

2018 க்கு முன்னாடி வரைக்கும் நல்லா இருந்தானா? கேட்டுச் சொல்லுங்க ....


Barakat Ali
மே 13, 2025 08:38

வெறுக்குறவனெல்லாம் mentally challenged ஆக காட்ட இப்படியொரு திட்டம் ????


முக்கிய வீடியோ