உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை: இபிஎஸ் கேள்வி

கரூர் சென்ற முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை: இபிஎஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்கோடு: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 68 பேர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுபயணத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இபிஎஸ் பேசியதாவது: கச்சத்தீவை மீட்பதற்கு இபிஎஸ் எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கச்சத்தீவைப் பற்றி பேச அவருக்கு தகுதியில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிஇருக்கும்போதுதான் கச்சத்தீவை தாரைவார்த்தது .திமுக. 16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த திமுக இதுகுறித்து பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. மீனவர்கள் வாக்கு தேவைப்படுகிறது. அதனால் நாடகத்தை அரங்கேற்றுகிறார். உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், அப்போதே மீட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தவறவிட்டுவிட்டு எங்கள் மீது இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்..?கரூரில் நடந்த சம்பவத்தில் 41 உயிர்களை இழந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், அஞ்சலி செலுத்தினீர்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பருகி 68 பேர் இறந்தார்கள், அப்போது ஏன் போகவில்லை, அவர்களை ஏன் சந்திக்கவில்லை.?. அவர்களுக்கு ஆறுதல் என் சொல்லவில்லை..?இப்போது ஏன் கரூருக்கு ஓடோடி சென்றார் என்றால் அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடத்தான் சென்றுள்ளார். உண்மையிலே மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக செல்லவில்லை, எல்லா விஷயத்திலும் அரசியல் கணக்கு பார்க்கும் கட்சி திமுக.இபிஎஸ்க்கு கொள்கை இல்லை என்கிறார். கொள்கை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? பாஜவை எதிர்த்து இண்டி கூட்டணியை ஏற்படுத்தினர். மாநிலத்தில் எதிர் எதிராகவும், எம்பி தேர்தலில் ஒன்றாகவும் இருக்கும் நீங்களா கொள்கையுடைய கட்சி? உங்களூக்கு அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்தியில் அதிகாரத்துக்கு வருவதற்கு எந்த வேஷமும் போடத் தயங்காதவர் திமுக தலைவர். அந்த அடிப்படையில்தான் இண்டி கூட்டணி அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் முரண்பட்ட கருத்துடைய நீங்கள் பேசலாமா? ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கையுண்டு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை என்பது நிலையானது அது அதிமுகவிடம் இருக்கிறது. திமுக பல தேர்தலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள், நீங்கள் கூட்டணி அமைத்தால் நல்லது, அதிமுக அமைத்தால் தவறா? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? ஊழல் நிறைந்த திமுகவை நீக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மிசா சட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சிறையில் இருந்தனர். உங்களை சிறையில் அடைத்த கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அதிமுக அப்படியல்ல, திமுகவை அகற்றவே கூட்டணி வைத்தோம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

joe
அக் 04, 2025 14:21

மக்களை பணத்தை கொடுத்து விலை பேசும் அரசியல் வாதிகள் உள்ளவரை நாட்டில் ஊழலுக்கு பஞ்சமில்லை .


Indian
அக் 04, 2025 13:38

பா ஜா வோடு போனீங்கன்னா ஒரு சீட் கிடைக்காது


Santhakumar Srinivasalu
அக் 04, 2025 13:16

காக்கா குருவி வேன் மேலிருந்து தூத்துக்குடியில் போலிஸ் சுட்டபோது இவர் அங்கு போனாரா? அந்த சம்பவம் நடந்ததே தெரியாது என்ற மனசாட்சி இல்லாமல் சொன்னவர் இங்கு மேடையில் பேசுகிறார்?


duruvasar
அக் 04, 2025 07:47

என்ன ஐயா இப்படி கேட்டுபுடீங்க லண்டன் பக்கத்திலேயா கரூர் இருக்குது . அப்படியே ஒரு நடை எட்டி பார்த்துட்டு வருவதற்கு. ஒன்னும் அவசியம் இல்லையே ?


Kasimani Baskaran
அக் 04, 2025 07:34

திராவிட சாம்ராட்ஜய்யத்தின் அடிபப்டை சாராயம்.


Arul. K
அக் 04, 2025 06:27

எந்த ஆட்சியாக இருந்தாலும் எந்த முதல்வராக இருந்தாலும் இரண்டு ஊருக்கும் செல்ல தேவையில்லை. இரண்டும் இயற்க்கை பேரிடர் அல்ல. இதற்க்கு அரசும் இழப்பீடு கொடுத்து ஊக்குவிக்க தேவையில்லை. விருப்பப்பட்டால் அவங்க அவங்க கட்சி நிதியிலிருந்து கொடுக்கலாம்.


Ramesh Sargam
அக் 04, 2025 02:01

கள்ளக்குறிச்சிக்கு போனால் ஆபத்து என்று அவரின் குடும்ப ஜோசியர் சொல்லிட்டாராம். ஆகையால் அவர் அங்கு போகமாட்டார்.


மணிமுருகன்
அக் 04, 2025 00:00

அயர்லாந்து வாரிசு திராவிடமாடல்ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி குடும்ப பிரச்சனை மத்திய பாஜக போய் பார்ப்பார்கள் ஊழல் குடும்பத்திற்கு பிரச்சனை அதுவரை முதலமைச்சர் மாநாடு செல்லாதவர் சென்றவர்களையும் கேள்வி கேட்டு கேலி செய்தவர் ஓடினார் எங்கே 300 கோடி உல்லாச பங்களா போய்விடுமோ என்று இது தான் கொள்கை அவர்களுக்கு மக்கள் நலன் அக்கறை கிடையாது இருந்திருந்தால் பல்கலைகழக பிரச்சனை கவர்னரை சந்தொருக்கவேண்டும் சந்தித்தாரா இல்லை மத்தியரசை சந்தித்தாரா இல்லை மக்கள் பணத்தைவைத்து வழக்கு எாற்கு வீணணடிக்க போனால் வேலைஆகாது என்பது தெரியும் ஏன்னென்றால் செய்வது தவறு தெரியும் இப்படி பித்தலாட்டம் செய்வது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை வொளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி பண்பாடு காவு கொடுப்பது மக்களை பயங்காட்ட மகடகளிடம் பிரபலபடையும் நபர்களை மிரட்ட நடத்தப்படுவது இதை நடத்துவதில் மனிதாபிமானமே இல்லாதக் கட்சி என்பது 90 களில் நடந்த நிகழ்வுகள் சொல்லும் இவ்வளவு பண்பாடற்ற நாகரிகமற்ற கொள்கையுடைய வரடகள் தான் அவதிமாவிமோ ஊழல்கட்சிதிமுகா கூட்டணி


Mariadoss E
அக் 03, 2025 22:42

ஏன்யா உமக்கு வேற வேலையா இல்லையே?


Kumar Kumzi
அக் 04, 2025 02:36

சோத்துக்கு வக்கில்லாம தானே மதம் மாறின அப்புறம் எதுக்கு இங்க வந்து கருத்து சொல்ல வார


jayakumar
அக் 03, 2025 22:00

super eps ayya


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை