உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் கேள்வி

நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: 'ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அளிக்கிறீர்களே, ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அளிக்க வேண்டியது தானே என்று சில அதி மேதாவிகள் அதிகப்பிரசங்கித்தனமாக கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கடிதம்:

எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும், தமிழத்திற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழகம் போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக தமிழகத்தின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என கவர்னர் புதுச்சரடு விடுகிறார். எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிகத்திற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை.

ரூபாய் நோட்டு

ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியது தானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கத் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? ரூபாய் நோட்டில் ஹிந்தி மட்டுமா உள்ளது? அந்தந்த மாநில மொழிகளுக்குரிய உரிமையை நிலை நிறுத்தும் முறையில், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன.

மொழி சமத்துவம்

ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் மத்திய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழி திணிப்பு. பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித் திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறது தி.மு.க.,

வடிகட்டிய பொய்

ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்றும், சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மை மொழி என்றும் சொல்லி இரண்டையும் திணிக்க நினைக்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற இரண்டுமே வடிகட்டிய பொய் என்பதை வரலாறு சொல்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 164 )

Pandi Muni
மார் 31, 2025 20:43

மெரினா சுடுகாட்ட தானே சொல்லுற அப்பத்தா?


Sridhar
மார் 27, 2025 14:56

அதான் தமிழ்லயும் எழுதியிருக்காங்கல்ல? அப்புறம் என்னா? "நடு" "சுடு" .. இப்படி அண்ணாத்துரை, காலத்திலேந்து எதுகை மோனய வச்சே ஒட்டிட்டுருக்காங்கய்யா


D.Ambujavalli
மார் 26, 2025 06:22

மாநிலத்தையே சுடுகாடாக்கி எல்லா அக்கிரமங்களையும் செய்யும் உங்கள் 'கண்மணிகள் ' இருக்கையில் தனியாக எதற்கு, அதுவும் நள்ளிரவில் போகவேண்டும் மக்கள் இருப்பதே அங்குதானே


sankaranarayanan
மார் 20, 2025 17:36

சற்றே நெற்றியிலும் தாரை பூசிக்கொண்டால் சரியாகவே இருக்கும் ரோடு போட தார் இல்லாமல் தவிக்கிறார்கள் இவர்கள் ஊரிலுள்ள எல்லா ஹிந்தி பலகைகளை அழிக்கிறார்களாம் தாருக்கு தெரியுமா தமிழின் பெருமை ஆக்க பூர்வமான செயலில் ஈடுபட்டால்தான் மக்களுக்கு முன் முன்னேற்றம் கிடைக்கும். அழிவுப்பாதையில் சென்றால் அவதிப்படுவது பாமர மக்கள்தான் அந்தோ பரிதாபம்


Karthik
மார் 17, 2025 08:50

ஏற்கனவே தமிழ்நாடு சுடுகாடு மாதிரிதான் இருக்கு - இதுல பகல் என்ன நடு ராத்திரி என்ன?


SRITHAR MADHAVAN
மார் 15, 2025 11:59

மதிப்பிற்குரிய ஸ்டாலின், உங்களை யார் போகச் சொன்னது? உங்களை நீங்களே கேட்டுக்கொள்கிறீர்கள்.


K V Ramadoss
மார் 13, 2025 16:05

கலைஞர் திணிப்பு - மிக நல்ல வார்த்தை..


RAMKUMAR
மார் 11, 2025 18:44

நீங்கள் ஏன் அய்யா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும் ,, சுடுகாட்டில் தானே இருக்கிறோம் ... சுடுகாடு = தமிழ்நாடு


kumarkv
மார் 08, 2025 20:08

நீ போப்பா பின்னாடி யாராவது வருவானுங்க


kumarkv
மார் 08, 2025 20:02

அதுதான் நீ இருக்க வேண்டிய இடம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை