உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? அப்போலோ மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? அப்போலோ மருத்துவமனை அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வற்கு இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oehjc3r7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வருக்கு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்னை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை டாக்டர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Natarajan Ramanathan
ஜூலை 24, 2025 21:12

தஞ்சை பெரிய கோவில் உள்ளே செல்வதற்கே பயந்த பகுத்தறிவு தீயசக்தி வாரிசுதானே... கங்கைகொண்ட சோழபுரம் கோவில் உள்ளே செல்வதற்கும் பயந்துதான் இந்த நாடகம் எல்லாம் .


Bhakt
ஜூலை 24, 2025 19:02

விக்கினால் தலைசுற்றல் இருக்குமோ?


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 17:40

அதிர்ஷ்டக்காரர். தலைசுற்றியபோது தனது முதுகையே பார்த்திருப்பார்.


தமிழ்வேள்
ஜூலை 24, 2025 17:27

மோடிஜி பயணிக்கும் விமானம் புறப்பட்டவுடன் டோப்பப்பனாரின் உடல்நிலை சீராகிவிடும் ..௨௮ஆம் தேதி , திங்கள் கிழமை , அய்யா வீடு நோக்கி ஜிங்கு ஜிக்கான் ன்னு கிளம்பிவிடுவார் பாருங்கள் ....பரம்பரை நடிகர்கள் ...


கோமாளி
ஜூலை 24, 2025 17:27

உண்மையில் பிரதமர் இங்கு வருவதால் தான் என்பது ஒரு நாடகம் போல் அவர் அட்மிட் ஆகியுள்ளார் என்று கூறினால் தெலுங்கானாவில் டி ஆர் எஸ் க்கு ஏற்பட்ட நிலைதான் நம்முடைய முதல்வருக்கும் ஏற்படும் என்பது உறுதி.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 17:22

தலையை கொஞ்சம் காற்றோட்டமாக விட்டு வைத்தால் தலைசுற்றல் குறையும்..


Easwar Kamal
ஜூலை 24, 2025 17:15

வர வேண்டிய பணம் தெலுங்கு அமைச்சர் கூட்டம் லவட்டிக்கிட்டு போய் இருக்கும். கருணாவிடம் எப்படி இவனுங்கள தன வழிக்கு கொண்டுவரனும் என்பதை கற்க மறந்துவிட்டார் போல.


என்றும் இந்தியன்
ஜூலை 24, 2025 17:14

தலை இருப்பவனுக்கு தலை சுற்றல் வருவது இயற்கையே. அறிவில்லாதவனுக்கு அறிவு பூர்வ செயல் செய்யச்சொன்னால் தலை சுற்றல் வருவது இயற்கையே. கிழவயதில் இருப்பவனுக்கு தலை சுற்றல் வருவது இயற்கையே. ஆகவே அவர் அரசு பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றார் என்று இந்த அறிக்கை கூறவேண்டும்


என்றும் இந்தியன்
ஜூலை 24, 2025 17:01

பூரண குணமுள்ள ஒரு 70 வயதை தாண்டிய யாருக்கும் ஆஞ்சியோ ஈசிஜி ரத்த சோதனை செய்தாலும் நிச்சயம் சிறிய அளவில் குறைபாடு இருக்கும், இது மிக மிக இயற்கையானது. அதை வைத்து இவருக்கு அப்படி இவருக்கு இப்படி இருக்கு என்று கதை விட்டு திரியவேண்டாம் கஸ்மாலங்களே - அது ஆஸ்பத்திரியோ இல்லை திராவிட அறிவிலி மடியல் அரசு கும்பலோ. அப்படி அவர் உடல் நலமற்றவர் என்றால் முதல்வர் பதவி அவரிடமிருந்து உடனே ஐகோர்ட் பறித்து அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவருக்கு அந்த பதவியை கொடுக்கவேண்டும், மற்றும் உதயநிதி, கனிமொழிக்கு அந்த நீதிமன்றம் சொல்லவேண்டும் "அவருக்கு உடல் இல்லை சரியில்லாத படியால் அவரை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் ஆகவே உங்கள் இருவருக்கும் உங்கள் பதவியிலிருந்து ஒய்வு கொடுக்கின்றோம் உங்கள் பதவியிலிருந்து ஒரு வருடத்திற்கு என்று தீர்ப்பு வரவேண்டும்.


sankaranarayanan
ஜூலை 24, 2025 16:44

மோடி தமிழகம் வந்தாலே இவர் ஆடிபோயிடறாரு நாடி வந்தவர்களை தேடிபோய் பார்க்க வேண்டாமா கோடி கொடுத்தாலும் மோடியைப்போல ஆகுமா.வாடிவிடாமல் தேடினால் கூட மோடியைப்போல ஆள் அரசியலில் கிடையாதே கிடைக்காதே


ramesh
ஜூலை 24, 2025 17:19

உன்னுடைய பகல் கற்பனைக்கு ஒரு அளவு கிடையாதா . ஸ்டாலின் ,மோடியை பார்த்து பயந்து விட்டாரா .இந்த அற்ப கதைய உன்னுடன் சேர்ந்த சங்கி கூட்டம் வேண்டுமானால் சொல்லி சந்தோஷ படும். கூட்டணிக்கே யாரும் இல்லாத போதே இந்த கொக்கரிப்பா


vivek
ஜூலை 24, 2025 20:49

அப்போலோ கதை சொல்லுப்பா ரமேஷு