ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் தி.மு.க., அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. நெற்பயிர் மழையில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெருநஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவில் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், இங்கு விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய, தி.மு.க., அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்? - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்