உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடியை ஸ்டாலின் சந்தித்தால் பழனிசாமி பதறுவது ஏன்: திருமாவளவன்

மோடியை ஸ்டாலின் சந்தித்தால் பழனிசாமி பதறுவது ஏன்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:கடந்த மூன்று ஆண்டுகளாக, 'நிடி ஆயோக்' கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது, ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் உள்ள நிதிகளை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்துவது முதல்வரின் கடமை; பொறுப்பு. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு, கவர்னர் மூலம் நெருக்கடி தருவதை தாண்டி, மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தராமல், திட்டமிட்டு தேக்கத்தை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், கல்விக்காக அளிக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கின்றனர். இது, மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கு. இந்நிலையில், நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, நிடி ஆயோக் கூட்டத்துக்கு முதல்வர் சென்றார். இதன் வாயிலாக, பா.ஜ.,வுடன் தி.மு.க., இணக்கமான சூழலை உருவாக்கி, நெருங்கி விடுமோ என்ற பதற்றம் அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான், முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றதை ஏற்க முடியாமல், முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து விமர்சிக்கிறார்.கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பி, அதில் திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது, தமிழர் தொன்மையில் புரிதல் இல்லாததையும், காழ்ப்புணர்ச்சியையும் காட்டுகிறது. அனைத்து ஆபாச தளங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற சூழல் உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு வரவேற்புக்குரியது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

theruvasagan
மே 26, 2025 17:11

எதுக்கு இத்தனை பதட்டம். இத்துப்போன பிளாஸ்டிக்.சேர் மேல எவன் கண் வைக்கப் போகிறான். ஓட்டை உடசல் எடுக்கறவன்கூட சீந்தமாட்டானே.


ப.சாமி
மே 26, 2025 14:33

அ.தி.மு.க, பா.ஜா.க கூட்டணி வைத்தால் எவ்வாறு தி.மு.க பதறுகிறதோ அதேபோன்று தி.மு.க, பா.ஜ.க சேர்ந்தால் அ.தி.மு.க பதறுகிறது


Haja Kuthubdeen
மே 26, 2025 15:52

அஇஅதிமுக பதறாது....பிஜெபி கூட்டணி கட்சி என்பதால் அதற்கு தெரியாமல் எந்த மூவ்மென்டும் நடக்காது...அப்படியே திமுக பிஜெபி வசம் போனாலும் எடப்பாடியின் வெற்றி கன்பார்ம் ஆயிடும்.சட்டமன்ற தேர்தலில் போட்டியே திமுக கூட்டணிக்கும் அஇஅதிமுக தலைமையில் ஆன பிஜெபிக்கும்தான் என்பதை நினைவில் கொள்க...


Haja Kuthubdeen
மே 26, 2025 11:12

குருமாக்கு என்னதான் வேனும்...பெரிய அப்பா டக்கர் மாதிரி தினதினம் ஒரு அறிக்கை...எங்கே திமுக விரட்டி விட்டுடும்ன பயமா???


Barakat Ali
மே 26, 2025 10:24

கோர்த்து உடுற நரித்தனம் செல்லுபடியாகாது திருமா .......


Rajarajan
மே 26, 2025 10:20

தி.மு.க. வை பொறுத்தவரை, கமலும் திருமாவும் ஒன்றே. அதாவது, கோபாலபுரத்து அடிமைகள் மற்றும் தி.மு.க. வின் Public Relaitons Officers.


Yes your honor
மே 26, 2025 10:18

கூட்டணியில் இருந்துகொண்டே பெரிய பெட்டிக்கு ஆசைப்பட்டு, சவுண்டு ஓவராக விட்டதால், திமுக புத்தியை காட்டிவிட்டது. பாமக திமுகவை நெருங்குவதால் மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் இந்த சுயநலவாதி. இவரின் இருண்ட முகத்தைப் பார்க்கும்போதே இது புரிகிறது. சிறிது ஆராய்ந்து பார்த்தால், அதிமுக-பாஜக மற்றும் திமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுவிட்டால், இவருக்கு விஜய்யை விட்டால் வேறு புகலிடம் இல்லை. ஏற்கனவே இவரின் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் தவெகவில் சேர ஆரம்பித்து விட்டார்கள். குருமாவே அங்குசென்று விஜயுடன் கூட்டணி வைத்தால், இவர் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்ல, இன்னும் தங்களை இளைஞர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட ஒரேயடியாக விஜய் கட்சியில் ஐக்கியமாகிவிடுவார்கள். இவருக்கு கடைசியில் பந்தியில் பரிமாறும்போது கருவேப்பிலை கூட கிடைக்காது. சரி சீமானுடன் குடும்பம் நடத்தலாம் என்றால், அவர் கத்தி கத்தி முன்னேறுவதற்கு அது ஒரு 30 வருடங்கள் ஆகும் . அண்ணியுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் எலக்ஷனுக்கு முதல்நாள்வரை முடிவெடுக்க மாட்டார்கள். மொத்தத்தில் இந்த சுயநலவாதியின் நிலைமை கவலைக்கிடம் தான்.


அப்பாவி
மே 26, 2025 09:47

இதை வைத்து அதிமுக வை மிரட்டி அதிக தொகுதிகளை கேட்டு வாங்க பா.ஜ முயற்சிக்கும். கொஞ்சம் அசந்தா அதிமுக வை கவுத்துட்டு அண்ணாமலையை திரும்ப கொண்டாந்து வேற கூட்டு வெக்கலாம்.


Haja Kuthubdeen
மே 26, 2025 11:17

அப்பாவி....ஆச தோச அப்பளம் வடை.....நிதி பத்திதான் இப்ப எல்லா இடத்திலும் பேச்சே....எடப்பாடி கிடக்கட்டும்..காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் டில்லி விஜயம் எதுக்குன்னு இன்நேரம் கண்டு பிடித்து இருப்பாய்ங்க...


V Venkatachalam
மே 26, 2025 09:36

குருமா சொல்றது என்னான்னா சுதாவின் ஊது குழலாக இருக்க கிடைக்கும் எந்த நிகழ்வையும் என்னால் விடமுடியாது. டாஸ்மாக்கில் அடித்த கொள்ளையில் எனக்கு எதுவுமே தரல. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஒரு வருடத்துக்குள் 30000 கோடி கொள்ளை அடிச்சாங்க.அதிலேயும் எனக்கும் ஒண்ணும் தரல. இப்ப எனக்கு எடப்பாடிய பார்த்தாலே பயமா இருக்கு.


SIVA
மே 26, 2025 08:29

ED ரெய்டுக்கு முன் ED ரெய்டுக்கு பின் என்று அரசியல் மாறுகின்றது ..


ராமகிருஷ்ணன்
மே 26, 2025 07:54

பழனிச்சாமி அரசியல் செய்யாமல் அவியலா செய்வார். அது சரி நீ ஏன் கதறுகிறாய். திமுகவின் கறுப்பு பணம் பினாமிகளின் கைதுக்கு பின் நீயும் அதிமுகவிடம் சரண் அடைய வேண்டியிருக்கும். இப்பவே போயி துண்டு போட்டு வைக்கவும்


SUBBU,MADURAI
மே 26, 2025 08:36

பாஜகவுடன் எடப்பாடி கூட்டணி சேர்ந்ததால் திருமாவளவன் கதறுவதும் பதறுவது ஏன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை