உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவத்தை சேர்க்காதது ஏன்?

இலவச காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவத்தை சேர்க்காதது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : 'தமிழக முதல்வரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் கூட சித்த மருத்துவத்தைச் சேர்க்காமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. அலோபதி மருத்துவத்திற்கு கோடி கோடி ரூபாய் செலவிடும் நிலையில், சித்த மருத்துவத்தைச் சேர்க்காதது ஏன்?' என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.சொரியாசிஸ், வெண்படை, வயிற்றுப்புண் நோய், ஆரம்பகட்ட புற்றுநோய், சைனஸ் நோய், கண்புரை நோய், மூட்டு விலகல், ஜவ்வு கிழிதல், எலும்பு முறிவு, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், மூலம், பவுத்திரம், ரத்தக்குழாய் அடைப்புக்கு அலோபதி முறையில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், இந்நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநில அரசின் இலவச காப்பீடு திட்டத்தில், சித்த மருத்துவம் சேர்க்கப்படவில்லை; மத்திய அரசின் ஆரோக்கிய யோஜனா மருத்துவ காப்பீடு திட்டத்திலும் சித்த மருத்துவம் சேர்க்கப்படவில்லை.அலோபதி சிகிச்சைக்கு மாற்று விரும்புவோர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் புறநோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர் அல்லது தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை மேற்கொள்கின்றனர். சித்த மருத்துவ சிகிச்சையை விரும்பும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் இலவச காப்பீடு திட்டத்தில் பயன்பெற முடியவில்லை. தமிழகத்தில் மத்திய அரசின் என்.ஏ.பி.எச்., தரச்சான்று பெற்ற மத்திய அரசு மருத்துவமனை, ஐந்து தனியார் சித்த மருத்துவமனைகள், 16 அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன.'பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டாலும் போதிய இடவசதி செய்யவில்லை. இதற்கென 30 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவப் பிரிவை துவக்கினால், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற முடியும். மேலும், 60க்கும் மேற்பட்ட ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி மருத்துவமனைகள் உள்ளன.'மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில், இந்த ஐந்து பிரிவுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசும் காப்பீட்டு திட்டத்தில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறும் வகையில், அனைத்து பிரிவுகளையும் சேர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் ஆயுஷ் பிரிவு சிகிச்சைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும்' என, ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

lana
டிச 26, 2024 16:53

நாங்கள் தமிழ் வாழ்க என்று board தான் வைப்பது. அது மாதிரி தான் இதுவும். சித்த மருத்துவம் உண்மையில் தமிழ் மருத்துவம். எங்கள் தந்தை தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னார். நாங்கள் தமிழ் வளர்ப்பது கனவிலும் நடக்காது. இங்கு கட்டிங் கிடைக்கும் வியாபாரம்.மட்டுமே நடக்கும். மற்ற அனைத்து தேவை இல்லை.


தமிழ்வேள்
டிச 26, 2024 12:59

வியாதி குணமடையாதவரை , பக்க விளைவுகள் உள்ளவரை , மருந்து கம்பெனிகளுக்கும் , அல்லோபதி மருத்துவர்கள் , மருத்துவமனைகளுக்கு நிரந்தர வருமானம் இருக்கும் ..அப்புறம் எப்படி ? வியாதி குணமானால் , அது மருந்து ,மருத்துவரின் நிபுணத்துவம் ...நோயாளி டிக்கெட் வாங்கினால் , அது அவன் தலையெழுத்து ..அல்லோபதியின் சித்தாந்தம் இதுதான் ...


Karunagaran
டிச 26, 2024 10:51

பல டிரில்லியன் மில்லியன் கோடி ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி ஆன இந்து மத நூல்கள் பகவத் கீதை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய நூல்கள் திருக்குறள் நாலடியார் திருவாசகம் சிவபுராணம் அகஸ்தியர் மாந்திரிக காவியம் ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் கொங்கணவர் புலஸ்தியர் அகஸ்தியர் போகர் திருமூலர் அருளிய நூல்கள் பதார்த்த குண சிந்தாமணி அகஸ்தியர் ரசவாதம் அகஸ்தியர் வான் சாஸ்திரம் உயிரின வகைகள் மூலிகை அகராதி அகஸ்தியர் நயணவிதி கண் மருத்துவ முறை அகஸ்தியர் 18 சித்தர்கள் யோக நிலையில் கூடு விட்டு கூடு பாய்தல் மூலம் வேற்று கிரக வாசிகள் உதவியுடன் அண்டசராசரம் சென்று வந்து வேற்று கிரக வாசிகள் உதவியுடன் எழுதிய நூல்கள் சித்த மருத்துவம் ஆயூர்வேதம் நூல்கள் அகஸ்தியர் 12000 போகர் 12000 போகர் 12000 புலஸ்தியர் வாத சூத்திரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டிய கொங்கணவர் 7000 திருமூலர் திருமந்திரம் வைத்தியம் சித்த மருத்துவம் ஆயூர்வேதம் நூல்கள் செய்யுளாக உள்ளதை பொழிப்புரை உடன் படித்து புரிந்து கொள்ள உலகையே வெல்ல முடியும் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பதார்த்த குண சிந்தாமணி அகஸ்தியர் அருவி இந்த நூல்கள் தெரியாமல் படிக்காமல் குரட்டாம்பாட வழிபாடு செய்து வருகின்றனர் நம் இந்துக்கள் தமிழர்கள் இறைவனை நேரில் கண்டு வழிபட்டு ஆனந்த புளகாங்கிதம் அடைய முடியும்


suriyanarayanan
டிச 26, 2024 10:32

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கண் சிகிச்சைக்கு பம்மல் சங்கரா கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கிறது ஆனால் அங்கு உள்ள அறிவுப்பு பலகையில் மட்டும் விளம்பரமாக உள்ளது ஏன் இந்த முறன்பாடு விளக்கம் தேவை நேரிடையாக பாதிக்கப்பட்டவன்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 08:54

சித்த மருத்துவம் ஹிந்துத்வாவின் அடிப்படைக் கூறுகளை ஏற்கிறது .....


Sampath Kumar
டிச 26, 2024 08:09

காப்பீடு என்பதை நடத்துபவன் எல்லாம் தனியார் கையில் அவன் அல்லோபதியை தான் உயர்த்தி பிடிப்பான் அரசுக்கு கமிஸ்ஸின் போகும் சித்த வைத்திய முறையை ஆயுர்வேத சிக்கிசை முறையோடு ஒப்பிட முடியாது அது வேறு இது வேறு இங்கே தான் ஒளிந்து உள்ளது சூட்சுமம் சூத்திர தாரிகள் யார் என்று மக்களுக்கும் தெய்ரயும் சித்த்த வயித்திய முறை தமிழர்களின் முறை இப்போ புரியுதா


ஆரூர் ரங்
டிச 26, 2024 10:22

நிறைய சித்த மருந்துகளுக்கு சமஸ்கிருதப்பெயர் உள்ளது. ஒரே நோய்க்கு சித்த ஆயுர்வேத முறைகளில் ஒரே மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரித்தாளும் சூழ்ச்சி ஆங்கிலேயர்கள் திராவிஷ ஆட்களுக்கு ஆங்கிலேயர்கள் கற்றுக் கொடுத்தது.


Kasimani Baskaran
டிச 26, 2024 07:27

விஞ்ஞானமே எங்கள் உயிர் நாடி என்று சொல்லும் பிரிட்டன் மன்னர் கூட இந்தியாவில் வந்து பாரம்பரிய இந்திய வைத்தியம் செய்கிறார் - ஆனால் இந்தியர்கள் அலோபதி முறையையே பயன்படுத்துகிறார்கள்.


Mani . V
டிச 26, 2024 05:44

ஏனென்றால், அதில் எங்கள் குடும்பத்துக்கு லாபம் இல்லை. அதில் போதிய கமிஷன் வராது. அத்துடன் மக்கள் நல்ல சிகிச்சை பெற்று நலம் பெறக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை