உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காசா பற்றி கவலை ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காசா பற்றி கவலை ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.வரும் அக் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k5qw3ho6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு?* உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா? * பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?* கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Parthasarathy Badrinarayanan
அக் 11, 2025 10:57

கள்ளக்குறிச்சி வாக்காளர்களுக்கு காசு தந்தால் வாக்களிப்பார்கள். காசாவுக்கு நாடகமாடினால் ஓட்டுப் போடுவார்


baala
அக் 11, 2025 09:53

பாவம்.


panneer selvam
அக் 10, 2025 18:20

Because of Stalin ji condemnation , everyone in Middle East including Israel is afraid . They never expected Tamilnadu strong man is proing now on Gaza fighting so they stopped the fighting . Peace is returning and people are expressing their appreciation to Stalin ji in stopping the tragic war with a single letter


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2025 15:04

காஸாவில் ஹமாஸ் முஸ்லீம் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளை விடுவிக்க போகிறார்களாம் , எல்லாம் எங்க ஸ்டாலின் "சார்" எழுதிய மடலின் தாக்கம்


M Ramachandran
அக் 10, 2025 11:34

இவங்க உருட்டல் எல்லாம் ரொம்ப பழசு. திருட்டு தீ மு காவின் குடமுருட்டி குண்டு போல் பழமையானவை. மூளை அந்த அளவு தான் உருட்ட முடியும்.


Saravanan
அக் 09, 2025 18:27

காசா பேச்சு வார்த்தை உச்சத்தை அடைந்து சமாதானம் வருமென்று முன் கூட்டியே அறிந்ததால் தான் இரண்டு வருடம் பொறுத்து பார்த்து இப்போது திடீரென போராடுகிறோம். இது கூட அரை நாள் உண்ணாவிரதம் மாதிரி. நமக்கு ஒட்டு போடும் மக்களுக்கு இதெல்லாம் தெரியாது. அப்பிடியே கட்ச தீவு பேச்சு வார்த்தை எந்த அளவு உள்ளது என தெரிவியுங்கள், சரியாக ஒரு வாரம் முன் போராட்டம் செய்து ஸ்டிக்கர் ஓட்டணும்


Kulandai kannan
அக் 09, 2025 09:31

இத்தாலியில் புர்கா, ஹிஜாப்புக்கு நாடு முழுவதும் தடை வருகிறதாம்.அதற்கும் தீர்மானம் போடுங்கள் முதல் மந்திரி சார்.


பேசும் தமிழன்
அக் 09, 2025 08:52

இவருக்கு எதோ தான் அமெரிக்க அதிபர் என்று நினைப்பு.... இவர் சொன்னால் உடனே சண்டையை நிறுத்தி விடுவார்கள்..... கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன்..... வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்பது போல் உள்ளது.


ராமகிருஷ்ணன்
அக் 09, 2025 06:32

இதெல்லாம் பைசா செலவில்லாமல் முஸ்லிம் ஓட்டு வாங்க வழி ஐயா. மானம் கெட்ட மாடல் அரசு.


vbs manian
அக் 08, 2025 22:51

கூட்டம் போட்ட கம்மிகள் உக்ரைனை அல்லும் பகலும் அடித்து நொறுக்கும் ரஷ்யாவை கண்டித்து தீர்மானம் போடுவார்களா.


புதிய வீடியோ