உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏரியில் பேருந்து நிலையம் ஏன்? வெள்ளி விழாவில் பொன்முடி விளக்கம்

ஏரியில் பேருந்து நிலையம் ஏன்? வெள்ளி விழாவில் பொன்முடி விளக்கம்

விழுப்புரம்: நீர்நிலையை ஆக்கிரமித்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு, பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் எவ்வித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்த நிலையில், அதற்கான விளக்கத்தை தற்போது அளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் புதிய பஸ் நிலைய வெள்ளி விழா நேற்று முன்தினம் நடந்தது.

அதில் பங்கேற்ற பொன்முடி பேசியதாவது;

தி.மு.க., ஆட்சியின்போது, கடந்த 9.6.2000ல், விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டது. அப்போது, இந்த இடம், பூந்தோட்டம் ஏரியாக இருந்தது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, பயிரிட்டிருந்தனர். வேறு சிலர், வீடு, கடைகள் கட்டியிருந்தனர். நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்த இடத்தில் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது வியாபாரிகள், பொதுமக்களோடு தி.மு.க.,வினர் சிலரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் பயனுக்காக, எதிர்ப்புகளை மீறி, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இப்படி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால், அன்றைக்கு எதிர்த்த வியாபாரிகள் கூட இன்றைக்கு அதிக பலன் பெறுகின்றனர். அன்றைக்கு ஏரியில், பஸ் நிலையம் அமைக்கலாமா எனக் கேட்டு, சிலர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், பொது பயன்பாட்டுக்காக, நீர்நிலைகளை மாற்றி அமைக்கலாம் என்ற விதியை சுட்டிக்காட்டி, நீதிமன்ற ஒப்புதல் பெற்றோம். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அதற்கு உதவினார். விரைவில் விழுப்புரம் மாநகராட்சியாக்கப்பட்டு, நகரம் மேலும் வளரும்போது, இந்த பேருந்து நிலையத்தின் பயன்பாடு இன்னும் அதிகமாகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

NATARAJAN R
ஜூன் 11, 2025 16:35

இவர் நமக்கு அமைச்சர். கல்லுரி பேராசிரியர். ஆக்ரமிப்பு என்பது தண்டனைக்கு உரிய குற்றம். இவர் அந்த நிலத்தை யாராவது ஆக்ரமிப்பு செய்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால் அப்போது இவர் கட்சி ஆட்சி நடத்தியது. வேறு யாரும் ஆக்ரமிப்பு செய்யாமல் இருக்க அரசு ஆக்ரமிப்பு செய்ததாக பேட்டி. இவரது வாதம் சரியென்று சொன்னால், ஆக்ரமிப்பு செய்த ஒவ்வொருவரும் பிறர் ஆக்ரமிப்பு செய்துவிட கூடாது என்பதற்காக ஆக்ரமிப்பு செய்ததாக பதில் சொன்னால் என்ன செய்ய முடியும்?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 13:04

2026 ஆட்சிக்கு வந்தவுடன் கடலில் பேருந்து நிலையம் கட்டப்படும் ...மீன்களும், மீனவர்களும் கடலை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க இந்த பேருந்து நிலையம் ...


sridhar
ஜூன் 11, 2025 12:47

ஐயா ஒரு முறை பஸ் ஸ்டான்ட் உள்ளே போயி வாருங்கள் அப்போ தெரியும் இந்த அவல நிலை மக்கள் கழிப்பறை இல்லாமல் வெளியே போவதால் ஒரே நாற்றம்


M Ramachandran
ஜூன் 11, 2025 11:07

குழு குழு இன்னு இருக்கும் என்பதால்


karthik
ஜூன் 11, 2025 10:26

கேவலமான விளக்கம்.. கடந்த 60 ஆண்டுகால இந்த திராவிட கும்பல் ஆட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான யாருக்கு எந்த அக்கறையும் தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் அழிக்கப்பட்டு இருக்கிறது.. சென்னையில் இப்படி தான் ஏரியை அழித்து ஒன்றுக்கும் உதவாத வள்ளுவர்கோட்டம் கட்டினார்கள்


angbu ganesh
ஜூன் 11, 2025 09:29

இன்னும் அமைச்சர் பதவியில் தூக்கலையா


Ravi
ஜூன் 11, 2025 08:29

மக்கள் பஸ்ஸில் ஏறி போக வேண்டும் என்பதற்காக ஏரியில் கட்டினோம் என்று சொல்லாமல் விட்டாரே... சந்தோசம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 06:44

முதலில் ஆறுகளை காலிசெய்தார்கள் ..அப்புறம் ஏரிகள் ..பிறகு குளம் குட்டைகள் ..வாய்க்கால்கள் .. திமுக ஆட்சி முடிவதற்குள் விவசாயமும் முடிந்து விடும் ..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 06:32

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்த இடத்தில் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது.அறிவாளிங்க இவரு ..இவரும் படிச்சு பட்டம் வாங்கி இருக்கார் ...மொத்தத்தில் தமிழ் நாட்டு நீர் ஆதாரத்தை குட்டி சுவர் ஆக்கணும் ....


Mani . V
ஜூன் 11, 2025 05:01

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டாமல் நீ ஆட்டையைப் போட்டு வைத்திருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடியாதா? நீயெல்லாம் தமிழகத்துக்கு சாபக்கேடான ஆள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 11, 2025 09:05

இவருக்கும் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களை என்னென்று சொல்வது


முக்கிய வீடியோ