உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு டாக்டர்களை அலட்சியப்படுத்துவது ஏன்?

அரசு டாக்டர்களை அலட்சியப்படுத்துவது ஏன்?

சென்னை:'மற்ற துறைகளில் உடனடி நிவாரணம் அளிக்கும் முதல்வர், அரசு டாக்டர்களை அலட்சியப்படுத்துவது ஏன்' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, அக்குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது: கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மோதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை பிரிவு டாக்டர் மணிக்குமார் உயிரிழந்தார். குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுடன் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர் மணிக்குமாரின் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், 60 ஆக இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சாலை ஓரமாக நடந்து சென்றால் கூட, உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. காலையில் பணிக்கு செல்லும் போது, மருத்துவமனையின் அருகிலேயே, பஸ் மோதி டாக்டர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவு அக்குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு. எனவே, உயிரிழந்த டாக்டரின் குடும்பத்திற்கு, 2 கோடி ரூபாய் மற்றும் படுகாயமடைந்த டாக்டருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற துறைகளில், உடனடி நிவாரணம் அளிக்கும் முதல்வர், அரசு டாக்டர்களை அலட்சியப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ