உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மாணவர்களின் வெற்றி சிவில் சர்வீசஸ் தேர்வில் குறைவது ஏன்?

தமிழக மாணவர்களின் வெற்றி சிவில் சர்வீசஸ் தேர்வில் குறைவது ஏன்?

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் வெற்றி குறைவது ஏன் என்பதற்கு, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அண்ணாமலை, ரவி மற்றும் வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை: நான் ஐ.பி.எஸ்., தேர்வாகும் காலகட்டம் வரை, அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 10 சதவீதம் பேர், தமிழகத்தில் இருந்து தேர்வாகினர். ஆனால், சமீப ஆண்டுகளாக, இது 5 சதவீதத்திற்கும் கீழே சென்று விட்டது. அகில இந்திய 'ரேங்க்' பெறும் தமிழர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. இது மிகவும் கவலை தரக்கூடிய விஷயம். இதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை சரிசெய்ய வேண்டும்.* வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் இயக்குனர் ரவீந்திரன்:தமிழக மாணவர்கள், விருப்ப பாடம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பான மதிப்பெண்களை பெறுகின்றனர். ஆனால், பொது அறிவு கேள்விகளை எதிர்கொள்வதில் சற்று சிரமப்படுகின்றனர். பொது அறிவு தாள்களில் அதிக மதிப்பெண்கள் பெற, நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நாளிதழ்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். அதில் தமிழக மாணவர்கள் கவனம் செலுத்தினால் சாதிக்கலாம்.* முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி:தமிழக மாணவர்கள் அறிவுத்திறனில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழக மாணவர்கள் முன்பு, ஏராளமான மாற்று வாய்ப்புகள் உள்ளன. உயர் கல்வியை முடித்து விட்டு, ஐ.டி., நிறுவனங்களில் சேரவும், சொந்தமாக தொழில் துவங்கவும், பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.சிவில் சர்வீசஸ் தேர்வுகள், அவர்களுக்கு முதன்மையானதாக இல்லை. அதனால், சமீப ஆண்டுகளாக, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் சதவீதம் குறைந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை