உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., பெயரை குறிப்பிடாதது ஏன்? செங்கோட்டையன் பதில் இதுதான்!

இ.பி.எஸ்., பெயரை குறிப்பிடாதது ஏன்? செங்கோட்டையன் பதில் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: பொதுக்கூட்ட மேடையில் இ.பி.எஸ்., பெயரைக் கூறாதது ஏன் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என மேடையில் அழுத்தமாக கூறினேன்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.அ.தி.மு.க., கடந்த முறை தோல்வியை தழுவ சில துரோகிகளே காரணம் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் செங்கோட்டையன் பொதுக்கூட்டத்தில் பேசியது பேசும் பொருளானது. இது குறித்து, ஈரோட்டில் நிருபர்கள் சந்திப்பில், செங்கோட்டையன் கூறியதாவது: துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம் தான் காரணம் என சொன்னேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zc0pezcw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே? ஆர்.பி.உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை அவர் அதை கூறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பொதுக்கூட்ட மேடையில் இ.பி.எஸ்., பெயரைக் கூறாதது ஏன் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என மேடையில் அழுத்தமாக கூறினேன்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Laddoo
பிப் 16, 2025 17:03

தேர்தல் நெருங்க நெருங்க அமாவாசைக்கு கட்டம் ஆரம்பம். அதிமுக தலைமை மாருலேன்ன கட்டெறும்பு கத கந்தல் தான்


sankaranarayanan
பிப் 14, 2025 13:22

அம்மா படம் அப்பா படம் தாத்தா படம் பாட்டி படம் அண்ணா படம் தம்பி படம் புள்ளையாண்டான் படம் என்று ஏனைய்யா இப்படி மக்களை படத்தைக்காட்டியே கெடுக்கிரிங்க நல்ல ஆட்சியை கொடுங்க போதும் வேறு எதுவுமே பாக்கெட்டில் வேண்டாம்


Raj S
பிப் 14, 2025 19:19

அதுக்கு முதல்ல இந்த சில தெலுங்கு போலி தமிழர்களான திருட்டு திராவிடர்களை விரட்டி அடிக்க வேண்டும்... கோபாலபுர திருட்டு குடும்பத்தின் அடிமைகள் டாஸ்மாகில் இருந்து வெளில வந்து தெளிய வேண்டும்... இதெல்லாம் நடக்கும்ங்கறீங்க??


சின்னப்பன்
பிப் 14, 2025 12:04

ஆளாளுக்கு அம்மா படத்தை பாக்ஜெட்ல வெச்சுக்கிட்டு அம்மா படத்த வெக்கலைன்னு புலம்பல்.


Smbs
பிப் 14, 2025 12:03

எங்காவது போவதா இருந்தா போயிறு . அத விட்டுட்டு தினம். இதே ரேதன


புதிய வீடியோ