உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் தான் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படவில்லை,'' என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இத்தொகை வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.இது தொடர்பாக சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் தான் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 தரப்படவில்லை. புயல் பாதிப்புக்கு ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டோம். ரூ.276 கோடி மட்டுமே தந்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிலுவையில் வைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் சக்கரபாணி அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: 2009 ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தவர் கருணாநிதி. 2017 -18 ல் அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. 2021 தேர்தலுக்காக பொங்கல் தொகுப்புடன் பரிசாக தந்தது என விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Antony Saviour
ஜன 10, 2025 20:32

தமிழக அரசு, ஒன்றிய அரசு ஏற்படுத்தி கொடுத்த நூறு நாள் வேலை செய்பவர்களை முக்கியப்படுத்தி விட்டு பிற மக்களை ஏமாற்றி விட்டதாக எண்ணுகிறேன். அவர்களுக்கு மட்டும் எப்படி போனஸ் கொடுக்க முடிந்தது ?????


பேசும் தமிழன்
ஜன 10, 2025 08:49

அண்ணன்..... அண்ணாமலை அவர்களுக்கு.... சென்ற அதிமுக ஆட்சியின் போது இவர்கள் சொன்ன.... 5000 கொடுக்க வேண்டும் என்ற அந்த வீடியோவை மறுபடியும் போஸ்ட் செய்யுங்கள் .....நீங்கள் வெளியிட்டால் போதும் ....சும்மா பற்றிக்கொள்ளும் ???


பேசும் தமிழன்
ஜன 10, 2025 08:42

இந்த விளக்கெண்ணை வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். பொங்கல் பரிசு கொடுப்பீர்களா ...மாட்டீர்களா ...அதை சொல்லுங்கள் .....5000 ரூபாய் பொங்கலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியது இந்த வாய் தானே ???


பேசும் தமிழன்
ஜன 10, 2025 08:36

கடனை வாங்கி... வாங்கி..... ஓட்டுக்காக ஓசி.... ஓசி என்று கொடுத்து.... கொடுத்து.... மக்களை மூளை மழுங்க செய்து விட்டு... இப்போது கொடுக்கவில்லை என்றால்..... மக்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள்.


பேசும் தமிழன்
ஜன 10, 2025 08:02

சென்ற அதிமுக ஆட்சியின் போது 1500 கொடுத்த போது.. 5000 கொடுக்க வேண்டும் என்று கூறியவர் இதே விடியல் தலைவர் தான்..... ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு.... மக்களுக்கு முட்டை (000) கொடுத்து இருக்கிறார்கள்.... ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள்.


Raj
ஜன 10, 2025 05:08

வெட்கக் கேடான ஆட்சி. ஏழையின் சிரிப்பில் காண்போம். அந்த ஏழைகளின் சாபம் உங்களுக்கு கிடைத்து விடும். இதே முந்தைய ஆட்சியில் கூவினீர்களே ரூ 2500/- தான் கொடுத்தார்கள் ரூ 5000/- கொடுக்கலாமே என்று கூவியவர்கள் தானே நீங்கள். கேரளாவில் போய் செலவு செய்தீர்களே சிலையோ, பூங்காவோ வைப்பதற்கு அதற்கு மட்டும் நிதி இருந்ததா? ஆனால் தமிழர் திருநாளுக்கு நிதி இல்லை. தமிழனை வஞ்சிக்கும் திராவிட ஆட்சியாக மாறிவிட்டது. கேவலம்.


Raj
ஜன 10, 2025 04:49

பொங்கல் விழா என்பது தமிழ்நாட்டில் நடக்கும் விழா, இதற்கும் மத்திய அரசு நிதிக்கும் என்ன சம்மந்தம். இந்துக்கள் விழா அதனால் கொடுக்கப்படவில்லை. இனிமேல் தமிழ்நாட்டில் இத்தனை கோடிக்கு சிலைவைக்கிறோம் என்றால்.....


raja
ஜன 10, 2025 03:57

எங்களுக்கே வழிச்சு புறங்கை நக்க நிதியில்லை.. இதுல அடிமைகளுக்கு பரிசு ஒரு கேடா என்று 30000 கோடி கொள்ளை அடுத்தவரின் மைண்ட் வாய்ஸ் தமிழனுக்கு கேட்கிறது....


தாமரை மலர்கிறது
ஜன 10, 2025 03:31

தமிழகம் திவாலாகிவிட்டது. இனியும் திமுக ஆட்சி செய்வது, மக்களை இன்னலுக்கு உண்டாக்கும். உடனடியாக தமிழக அரசை கலைக்கவேண்டும்


Raj S
ஜன 10, 2025 00:51

அதாவது இந்த அறிவாலய அடிமை முந்திரி என்ன சொல்ல வாராருன்னா, இந்த பொங்கலுக்கு பணம் குடுக்காம மத்திய அரசு நிதி குடுக்கலனாலும் தமிழகத்தின் புயல் பாதிப்பையும் பள்ளிக்கல்வித்துறைக்கு வரவேண்டிய காசு வரலானாலும் அதுக்கு தேவையான எல்லாத்தையும் நாங்க செஞ்சுட்டோம்னு சொல்றாரு... அதே மாதிரி மாசா மாசம் குடுக்கற அந்த ஆயிரம் ரூபாவையும் நிறுத்திட்டா நீங்க இனிமே மத்திய அரசுகிட்ட எதையும் கேட்கவேண்டாம் போல... என்ன நான் சொல்றது??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை