உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸை குருமூர்த்தி சந்தித்ததும் திருமாவளவனுக்கு ஏன் இத்தனை பதற்றம்?

ராமதாஸை குருமூர்த்தி சந்தித்ததும் திருமாவளவனுக்கு ஏன் இத்தனை பதற்றம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியது தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே நடக்கும் மோதல் மற்றும் ராமதாஸ்- ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: ஏற்கனவே நான் இது குறித்து பதில் கூறி இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி விவகாரம் அல்லது அவர்களின் குடும்ப விவகாரம். அதில் நான் கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் இன்றைக்கு, நடுவராக சென்று இருப்பவர் யார் என்பது ஒரு கேள்வியாக மாறி இருக்கிறது. பா.ம.க., தொடக்க காலத்தில், இடது சாரி சிந்தனையாளர்களின் வரவேற்பை பெற்றது. ஆனால் இன்றைக்கு வலது சாரி அரசியலுக்கு, அவர்கள் முழுமையாக போய்விட்டார்கள் என்பதை உணர்த்த கூடிய வகையில் இந்த பஞ்சாயத்தார்களின் முயற்சி வெளிப்படுகிறது.பா.ம.க., இடது சாரி அரசியலால் தான் எழுச்சி பெற்றது என்பதை இன்றைக்கு ஜனநாயக சக்திகளாக இருக்கும் அனைவரும் நன்கு அறிவர். ஆனால் அது ஒரு வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் இன்றைக்கு வெளிப்படையாக அம்பலம் ஆகி இருக்கிறார்கள் என்பது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

ஏன் பதற்றம்?

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியது தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Venkatesk K
ஜூன் 11, 2025 14:52

பாமக இன்றைக்கும் இடதுசாரி சிந்தனைகளின் கட்சிதான்,விசிக தான் தி்முகவின் ஊதுகுழலாக உள்ளது அல்லது தி்முகவின் பட்டியலின அணியாக மாறிப்போய்உள்ளது


JSPS
ஜூன் 07, 2025 18:03

திருமாவளவன் பதற்றம் அடைவது தேவையற்றது. இடதுசாரி,வலது சாரி என்பது இந்தியாவிற்கு பொருந்தாத வாதம்.ராமதாஸ் குடும்பப் பிரச்னை சில வாரங்களில் சரியாகி விடும்.வன்னியர்கள் பாமகவிற்கே ஓட்டு போடுவர். டாஸ்மாக்கிற்கும் போய் குடிப்பார்கள்.திருமா சொல்லியா பாமக கேட்டுவிடும்.தலித் கட்சி திமுகவை புறக்கணிப்பர். சிலநூறு கோடிகளை வைத்துக்கொண்டு சந்தோஷப் படவும். பூத் ஏஜண்ட்களுக்கு அள்ளி விடுங்கள்.


அரசியல் கம்பெனி
ஜூன் 06, 2025 18:12

பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் கட்சி என்ற பெயரில் அரசியல் வியாபாரம் செய்யும் வியாபாரி இப்படித்தான் பேசுவார்.


தத்வமசி
ஜூன் 06, 2025 10:24

இந்தியாவில் இடது சாரி, வலது சாரி என்பெதெல்லாம் கிடையாது. தான் சார்ந்த ஜாதிக்காக கட்சி தொடங்கியவர்கள், ஜாதிப் பெயரில் மதத்தின் பெயரில் கட்சி தொடங்கியவர்கள் பலர் உள்ளனர், அப்படி கட்சியும் பல உள்ளன. ஓட்டுக்களை பெறுவதற்காக ஜாதி, மதம் பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்து, ராகுகாலம், எமகண்டம், முகூர்த்த நாள் பார்த்து வேட்பாளர் விண்ணப்பம் வழங்கி, வென்ற பிறகு முகூர்த்த நாள் பார்த்து பதவி பிரமாணம் செய்து கொள்ளும் அனைவருமே வலது சாரி தான். இப்படி நாள் - கோள் பார்க்காமல், ஜாதி மதம் பார்க்காமல் இருக்கும் கட்சியோ, அதன் உறுப்பினர்களோ தமிழகத்தில் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் கம்யுனசித்தில் தொடக்கத்தில் இருந்தவர்கள் அதை வளர்த்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள் தான்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2025 07:42

குருமாவின் பதற்றம் நியாயமானது. தேர்தல் படுதோல்வி அவருக்கு தெரியும் போது பதறாமல் கூத்தாட முடியாது.


கண்ணன்
ஜூன் 06, 2025 06:39

இவருக்கு ஒழுங்கான படிப்பு இல்லாத காரணத்தினால் நம்மவர் போல் பிதற்றல்


Manoharan
ஜூன் 06, 2025 00:12

ராமதாஸ் அவர்களின் செல்வாக்கினால் மோடி அவர்களுடன் பேசி இந்த சமயத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த கட்டாய படுத்தி வேண்டும். பிஜேபி மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக அமுல் படித்தினால் பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வியில் வேலை வாய்ப்பில் பதவி உயர்வில் தரவேண்டும் அப்போது பிஜேபி தமிழ் நாட்டில் ஆட்சி பிடிக்கலாம் வி பி சிங்கை மறக்கலாமா.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2025 08:02

அப்போ நீங்கள் மற்றும் உங்கள் கூட்டாளி கான் கிராஸ் கட்சி ஒன்றுமே செய்ய மாட்டீர்கள்..... அப்படி தானே !!!


Manoharan
ஜூன் 05, 2025 23:58

ராமதாஸ் அவர்கள் குருமூர்த்தியிடம் பேசியதன் செல்வாக்கால் மண்டல் கமிஷன் அறிக்கையின் படி 69% பிற்படுத்தப்பட்டோர் முழுமையாக செயல்படுத்தினால் அணைத்து பிற்படுத்தப்பட்டோர் அணைவரும் உங்களையே தலைவராக ஏற்று கொள்வார்கள் நீங்கள் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாம் மறக்காதீர் மண்டல் கமிஷன். பிஜேபி கற்கும் இதனால் நல்ல எதிர் காலம் இருக்கும்


prakash m
ஜூன் 05, 2025 23:37

Waste messages


sankaranarayanan
ஜூன் 05, 2025 21:08

குருமாவிற்கு யாராவது இருவர் சந்தித்து பேசினால் ஏனய்யா இந்த பதற்றம். குற்றம் செய்தவன் போல நெற்றியில் விரலை வைத்து ஒரு போஸ் கொடுக்கிறார் இவர் கட்சி எங்கே என்று தேட வேண்டியுள்ளது வேண்டுமானால் இவரும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு ஏற்படுத்தி மகிழலாம் சந்தி சிரிக்கலாம் செய்பவரா இவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை