கூட்டத்தில் கொடி காட்டினால் கூட்டணி உருவாகிவிடுமா?
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து காங்கிரசார் யாரும் பேசக்கூடாது. தி.மு.க., - காங்., கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் யாராவது, ஏதாவது கருத்து கூறி, கூட்டணிக்குள் நெருடல் ஏற்படுத்தி விடக்கூடாது. கூட்டணியில் யார் வருவார், இருப்பார் என்பதை காங்., மேலிடம் பார்த்துக் கொள்ளும். பூத் கமிட்டி அமைத்தால், 60 சதவீத தேர்தல் பணிகள் முடிந்து விடும். அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில், த.வெ.க., கொடியை காட்டிவிட்டால், உடனே கூட்டணி உருவாகி விடுமா? இது, சில விஷமிகள் செய்யும் வேலை. கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடப்பதால், எதுவும் கூற முடியாது. சென்னையில், உயர் நீதிமன்றம் முன் நடந்த விபத்து குறித்து விசாரிக்க வேண்டும். வி.சி., தலைவர் திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். - திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர், தமிழக காங்.,