உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் தொடர்பாக வீடியோ வெளியிடட்டுமா? அமைச்சர் ஆதவ் ஆவேசம்

ஸ்டாலின் தொடர்பாக வீடியோ வெளியிடட்டுமா? அமைச்சர் ஆதவ் ஆவேசம்

சென்னை: ''தாராபுரம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா தொடர்பான சர்ச்சை வீடியோ, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டது'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.சென்னை, அயனாவரத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் பிறந்த, ஐந்து குழந்தைகளுக்கு 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், தலா ஒரு கிராம் தங்க மோதிரங்களை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jl6ctc2a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், அவர் கூறுகையில்,''தாராபுரம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா தொடர்பாக வெளியான வீடியோ, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தது போல், நானும் ஒரு ஏ.ஐ., வீடியோவை வெளியிடுகிறேன்; அதை பார்க்கிறீர்களா?'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

gayathri
அக் 09, 2026 09:18

உங்களை மக்கள் சட்டசபை உறுப்பினைராக தேர்தெடுத்து அனுப்பியது மக்களுக்கு சேவை எய்ய. கீழ்தரமாமான வேலைகளை செய்ய அல்ல.


Bhaskaran
அக் 08, 2026 03:10

அந்த அம்மா பேசியது முற்றிலும் உண்மை தவெக ஆட்களை நாலுகால் ஜென்மத்துக்கு ஒப்பிட்டு பேசியிருக்காங்க .இந்த அம்மா தோற்கனும்


Lana
அக் 07, 2026 13:52

ஆக மொத்தம் ஓட்டு போட்ட மக்களுக்கு ஒன்னும் பண்ண முடியாது இப்படி வெட்டி சவடால் பேசி கொண்டு தான் இருப்பாங்க போல . முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை உடனடியாக எடுங்கள். அதைவிடுத்து இந்த மாதிரி பேச்சு எல்லாம் எதற்கு அதில் இருந்து ஒரு கட்டிங் வாங்கவா


Raj Kamal
அக் 07, 2026 11:15

நீங்கள் இவ்வாறு சொல்வது தான் அசிங்கமாக இருக்கின்றது. ஸ்டாலின் தொடர்பாக ஏதாவது இருந்தால் அதை இந்நேரம் வெளிஇட்டிருக்க வேண்டும், நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் அப்படி செய்யாமல் இவ்வாறு வெற்று சவடால் விடுவது ஏதோ பேரம் நடப்பது போல் உள்ளது. உண்மையில் நீங்கள் தான் நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது போல தினம் ஒரு வெற்று சவடாலை விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.


sridhar
அக் 07, 2026 11:08

சவால் விட்டே 5 ஆண்டுகள் ஒட்டி விடுவார்.. சவால் அர்ஜுன் என்று அழைப்பதே சால சிறந்தது


Siva
அக் 07, 2026 10:42

Mr. Adav, Now truth came in your mouth like fake video you made it and reels it. Now same thing you threaten Opposition parties. TVK Ministers most of them only liars and fake narrative setting people.


Maheswaran Kannan
அக் 07, 2026 10:26

வெளியிடு உனக்கு இருந்தால் வெளியீடு


Palanivelu Kandasamy
அக் 07, 2026 07:42

"தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தது போல், நானும் ஒரு ஏ.ஐ., வீடியோவை வெளியிடுகிறேன்" ஆயிரம் கோடி ரூபாயா? அவ்வளவு ணம் ஆதவ்விடம் இருக்கிறது. சொல்றதுக்கு ஒரு அளவு வேண்டாமா? டி வி கே அமைச்சர்களுக்கு நம்பர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பது மெதுவாக வெளிவருகிறது.


முருகன்
அக் 07, 2026 06:18

ஒரு காலத்தில் திமுகவில் இருந்த எட்டப்பன் அதனால் தான் இந்த சவால் விடுகிறார்


Aarbinms
அக் 07, 2026 05:45

திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு மாடல் குடும்ப தலைலயின் வித்தவுட் டோப்பா புகைப் படத்தை வெளியிடுங்க. வெறும் பொய்யும் புரட்டும் ஊழலும் செஞ்சே காலத்தை ஓட்டும் தலையை கிழிச்சி தொங்க விடுங்க. மக்கள் புரிந்து கொள்ளட்டும்