உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த ஆண்டிலிருந்து பிரேக் பிடித்தால் போதுமா?: மத்திய அரசு முடிவால் சர்ச்சை

அடுத்த ஆண்டிலிருந்து பிரேக் பிடித்தால் போதுமா?: மத்திய அரசு முடிவால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விபத்துகளை குறைக்க, அடுத்த ஆண்டு ஜனவரி, 1 முதல் உற்பத்தியாகும், அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதியை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டிலிருந்து இரு சக்கர வாகனங்கள் நன்றாக பிரேக் பிடித்தால் போதுமா, அதுவரை விபத்து நடந்தால் பரவாயில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.நம் நாட்டில், 2019 முதல், 125 சி.சி.,க்கு மேல் உள்ள, அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, 75 முதல் 125 சி.சி., வரை உள்ள பைக்குகளுக்கும், இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், முன்புற சக்கரத்திலாவது இந்த வசதி இருக்க வேண்டும்.இந்த பாதுகாப்பு வசதியால், விபத்துகள், 35 முதல் 45 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், பைக்குகளின் விலை, 2,500 முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கும். இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்க தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில், 1.96 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில், 1.53 கோடி இரு சக்கர வாகனங்கள், 125 சி.சி.,க்கு உட்பட்டவை. இது, மொத்த விற்பனையில், 78 சதவீதம்.கடந்த 2022ல், 4.61 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், இறந்தவர்கள் 1.68 லட்சம் பேர். மொத்த சாலை விபத்து இறப்புகளில், இரு சக்கர வாகனங்கள் வாயிலான இறப்புகள், 44 சதவீதமாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில், 4,136 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு, 4,864 விபத்துகள் நடந்தன. சாலை விபத்துகளில், பெரும்பாலான இறப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன என்பதால், அடுத்த ஆண்டு முதல் வாகன விற்பனையின் போது, இரு பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள், பைக் உடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அனைத்து கார்களுக்கும், 2019 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதேபோல், இரு சக்கர வாகனங்களுக்கும், உடனடியாக ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறாமல், அடுத்த ஆண்டில் இருந்து உற்பத்தியாகும் வாகனங்களில் கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'அடுத்த ஆண்டிலிருந்து வாகனங்கள் பிரேக் பிடித்தால் போதும். அதுவரை விபத்துகள் நடந்தால் பரவாயில்லை என, மத்திய அரசு நினைக்கிறதா' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். விபத்துகளை தடுக்க, இனி உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை வாகனங்களிலும், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என, வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பது, பொது மக்களின் விருப்பமாக உள்ளது.

நாடு முழுதும் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் விபரம்:

ஆண்டு இறப்புகள்2018 1,57,2932019 1,58,9842020 1,38,3832021 1,53,9722022 1,68,491

நாடு முழுதும் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் விபரம்:

ஆண்டு இறப்புகள்2018 1,57,2932019 1,58,9842020 1,38,3832021 1,53,9722022 1,68,491

ஏ.பி.எஸ்., பிரேக்கிங் ஏன்?

வாகனங்களை ஓட்டும் போது, உடனடியாக, 'பிரேக்' பிடித்தால், பைக் டயர்கள் வழுக்காமல், பைக் நிலையாக நிற்க, ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதி பயன்படுகிறது. இந்த அம்சம் இல்லாவிட்டால், திடீரென பிரேக் பிடிக்கும் போது, வாகன சக்கரங்கள் சறுக்கி, ஓட்டுநர் கீழே விழுந்து காயங்கள் அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kalyanaraman
ஜூன் 24, 2025 09:33

பல சாலைகள் கொண்டும் குழியுமாக இருக்கிறது. இதனாலும் பல விபத்துகள் நடக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன ?? சாலை விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம், தண்டனை விதிக்கும் அரசுகள் - சாலைகளை சரியாக பராமரிக்காத, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அபராதம் & கடும் தண்டனை விதிக்காதது ஏன்? அபராதம் தண்டனை பொதுமக்களுக்கு மட்டும் தானா? ஆண்மையற்ற, முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் இருப்பது தான் முக்கிய காரணமா??


Jaihind
ஜூன் 23, 2025 17:30

பிரேக் பிடித்தால் போதுமா? சாலை எங்கப்பா இருக்கு ?? idhuku oru வழி பண்ணுங்கப்பா முதல்ல....


Rajan A
ஜூன் 23, 2025 13:42

அடுத்த வருடம் வண்டி வாங்கிக்கோங்க.


Kjp
ஜூன் 23, 2025 11:37

போதையின் பாதையில் சென்றால் எந்த பிரேக் காட்டினாலும் விபத்து நடக்கத்தான் செய்யும்.


சுந்தர்
ஜூன் 23, 2025 08:06

ஜனவரி 1 வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதற்குள் வாகன கம்பனிகள் உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்து முடிக்க வேண்டும். மேலும் புதிய டிசைன் உட்பட்ட மாற்றங்களை அவர்களது உற்பத்தி லைனில் செய்து அவற்றை டெஸ்ட் செய்து மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து செயல்களையும் செய்ய 6 மாதங்கள் போதாது. அனைத்திற்கும் முதலீடும் தேவை. கேள்வி கேட்பது சுலபம்.


Varadarajan Nagarajan
ஜூன் 23, 2025 07:45

சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் ஓட்டுவதாலும், மது அருந்திவிட்டு ஓட்டுவதாலும் நிகழ்கின்றது. வாகனங்களில் உள்ள பிரேக் சிஸ்டத்தாலோ அல்லது வாகன பழுதாலோ நடப்பது மிக மிக குறைவு. தற்பொழுள்ள உற்பத்தி முறையில் இந்த ஏபிஸ் முறையில் இயங்கும் பிரேக் சிஸ்டத்தை அமல்படுத்த வாகன உற்பத்தியாளர்களுக்கு போதுமான கால அவகாசம் தேவையை கருத்தில்கொண்டுதான் இந்த உத்தரவு அடுத்த ஆண்டிலிருந்து கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விற்பனையாகும் வாகனங்களில் பிரேக் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதில்லை. ஏதோ கருத்து சொல்வதாக சிலர் பதிவிடுகின்றனர். இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தாலும் சாலை விபத்துக்களில் மரணமடைவோர் என்ணணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பில்லை. சாலை விதிகளை முறையாக பின்பற்றி ஓட்டுவதாலும் மது அருந்தாமல் ஓட்டுவதாலும் மட்டுமே குறையும். அதை நடைமுறைப்படுத்துவது காவல்துறையின் வேலை மட்டுமல்ல, ஒருவொரு வாகன ஓட்டிகளின் கடமையுமே


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 23, 2025 07:41

புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைப்பு. அப்போ நேற்று வரை வாங்கிய வண்டிகளில் பிரேக் பிடிக்கவில்லையா என்ன? பிரேக் சிஸ்டத்தில் புதுமை புகுத்த அரசு எடுக்கும் நடவடிக்கை நன்மை பயக்கும். உற்பத்தியாளர்களுக்கு புதிய முறை பிரேக் சிஸ்டத்தை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்த, வண்டிகளின் டிசைன்களில் மாற்றம் செய்ய, காலம் தேவை என்ற சாதாரண விஷயம் புரியவில்லையா?


krishna
ஜூன் 23, 2025 07:23

விபத்திற்கு காரணம் போக்குவரத்து விதிமீறல்களும் கவனக்குறைவுகளு மே