உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!

விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!

புதுடில்லி: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆண்டு சம்பளம் ரூ .1.08 கோடி முதல் ரூ .1.41 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vzzwxqip&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கி கொண்டனர்.இந்நிலையில், நாளை 9 மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளனர். இறுதிகட்ட ஏற்பாடுகள் நாளை காலை 8.15 மணி முதல் துவங்கும் என நாசா தெரிவித்துள்ளது. தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து செல்ல, எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் 4 பேர் சென்றுள்ளனர்.விண்வெளி நிலையத்தில் பூமி திரும்புவதற்கு ஏற்பாடு செய்த எலான் மஸ்க், அதிபர் டிரம்பிற்கு நன்றி என நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'மிக விரைவில் நாங்கள் திரும்பி வருவோம்' என்று கூறினார். புட்ச் வில்மோர் கூறியதாவது: நம் அனைவருக்கும் எலான் மஸ்க் மீது மிகுந்த மரியாதை உள்ளது, மேலும் நமது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கை உள்ளது, என்றார்.

சம்பளம் எவ்வளவு?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்கள். எனவே அவர்களின் ஆண்டு சம்பளம் ரூ .1.08 கோடி முதல் ரூ .1.41 கோடி வரை இருக்கும் என அமெரிக்க மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி, விண்வெளியில் 287 நாட்கள் தங்குவதற்கு தலா 1,148 டாலர் (சுமார் ரூ .1 லட்சம்) கூடுதல் தொகையைப் பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

BALACHANDRAN
மார் 18, 2025 19:19

நல்லபடியாக திரும்பி வரட்டும் அவர்களுடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்று யாருக்கு தெரியும் கடவுள் அனுகிரகம்


Mani . V
மார் 18, 2025 05:09

கூடுதலாகக் கொடுத்து இருக்கலாம். குடும்பத்துக்கு பிரஜோசனப்படும்.


R S BALA
மார் 17, 2025 20:24

பணம் முக்கியம் என்று நினைத்திருந்தால் இவர்கள் விண்வெளி சென்றிருக்கமாட்டார்கள்..வியாபாரி ஆகியிருப்பார்கள் விஞ்ஞான மூளை வேறு வியாபார மூளை வேறு..வியாபாரம் ஆசையை அடிப்படையாக கொண்டுள்ளது விஞ்ஞானம் அறிவை அடிப்படையாக கொண்டுள்ளது..


Appa V
மார் 17, 2025 19:47

சாப்டவெர் நிறுவனங்களில் ஆரம்ப நிலையில் மாதம் பத்தாயிரம் டாலர் சம்பளம் வாங்கறாங்க ..அமெரிக்காவில் பள்ளி ஆசியர்களுக்கு சம்பளம் குறைவு ..


rama adhavan
மார் 17, 2025 19:46

இது அமெரிக்காவில் எம். எஸ் முடித்து ஓரு இரண்டாம் தர நிறுவனத்தில் வேலைக்கு புதியதாக சேரும் கணனி பொறியாளர் சம்பளத்தில் 75 விழுக்காடு தான். எனவே சம்பளம் குறைவு. ஆனால் புகழ் மிக அதிகம்.


B MAADHAVAN
மார் 17, 2025 19:01

பணம் என்னங்க பெரிய பணம்.. குடும்பத்தை விட்டு, நண்பர்களை விட்டு, நாட்டை விட்டு, தங்களுக்கு பிடித்த சோறு, தண்ணீர் ஒழுங்காக சாப்பிட முடியாமல் அதை விட்டு, பகலா, இரவா, குளிரா, வெயிலா, இங்கு மக்கள் வசிக்கலாமா, வசிக்க முடியாதா , பிரச்னை ஏதேனும் இருக்குமா, இருக்காதா என்று பார்க்க போய், அங்கிருந்து திரும்ப வர வண்டி கிடைக்காமல் அவர்கள் பிரச்னையில் தவிப்பதை பார்த்து, நம்மாளு திராவிட அப்பா சென்னையில் இருந்து கொண்டு உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்கள் 35 பேரை தமிழ்நாடு அரசு மூலம் எப்படி ஒரு குழு அமைத்து சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து, ஸ்டிக்கர் ஒட்டி அவர்களை கஷ்டப் பட்டு கூட்டி வந்தார்களோ, அதே போல் இப்போதும் நடக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கலாம். "மனம் இருந்தால் மார்க்க பந்து". ஆனால், அதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கியது மாதிரி தெரியவில்லை. பாவம் அவர்கள் . நல்லபடியாக அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்ப அன்பு பிரார்த்தனைகள்.


தாமரை மலர்கிறது
மார் 17, 2025 19:01

நம்ம கவுன்சிலர் சம்பாரிக்கும் தொகையை விட கம்மியாக உள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டதன் அறிகுறி தென்பட தொடங்கிவிட்டது.


Senthoora
மார் 17, 2025 17:22

நம்ம ஆளுங்களுக்கு இதுதான், ஒரு மனிதனின் கஷ்டம், உழைப்பு தெரியாது, உடனே அவனின் சம்பளம், சொத்து, பொண்டாட்டி, புருஷன் இதைத்தான் தோண்டுவார்கள்


தமிழன்
மார் 17, 2025 16:49

அதுசரி இந்த தேர்தல்ல 2 பேரும் ஓட்டு போட்டீங்களா இல்ல எவனாவது கள்ள ஓட்டு குத்திட்டு போயிட்டானா?? எங்க ஊர்ல சில புத்திசாலிகளுக்கு தேர்தலப்போ கை நடுங்கும் ஒரு ஃபுல்லும் பிரியாணியும் கொடுத்தா நாங்க நல்லா குத்துவோம் அங்க எப்படி??


ஆரூர் ரங்
மார் 17, 2025 16:44

உக்ரேனுக்கு பேருந்து வுட்டு கூப்பிட்டு வந்த விடியலை அணுகியிருக்கலாம் . எப்பவோ திரும்பியிருப்பார்கள்.